
இசையை ரசிக்கும் இளைஞர்களுக்கென மிகவும் சிறியதாக ஸ்டைலான அழகான போனாக மோட்டாரோலா யுவா இ.எம். 325 வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் மோட்டாரோலா நிறுவனம் இளைஞர்களை மையப்படுத்தி யுவா சிரீஸ் போன்களை வெளியிட்டது.தொடர்ந்து இந்த வரிசையில் வருகின்ற அனைத்து போன்களும் ஸ்டைலாகவும் ஸ்லிம்மாகவும் அமைவது இவற்றின் சிறப்பாகும். 85 கிராம் எடையில் 13.9 மிமீ தடிமனில் இது உள்ளது. இந்த ஸ்லைடர் போனில் மேலாக 1.8 அங்குல அளவிலான வண்ணத் திரையும் கீழாக வட்ட வடிவிலான டயல்பேடும் உள்ளன. இந்த டி–பேடின் இரண்டு பக்கங்களிலும் மூன்று கீகள் தரப்பட்டுள்ளன. இடது பக்கம் போனின் ஷார்ட் கட் மெனு, மியூசிக் பிளேயர் மற்றும் அழைப்புகளை எடுத்துப் பேசிட கீகள் தரப்பட்டுள்ளன. மெனு, பின்னோக்கி செல்ல மற்றும் அழைப்புகளை நிறுத்தும் கீகள் வலது பக்கம் உள்ளன. டயல் பேடின் கீழாக ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. போன் செயல்படத் தொடங்கியவுடன் ஒரு சிகப்பு விளக்கு எரிவது ஸ்டைலாக உள்ளது.
மேலாக உள்ள பேனலை ஸ்லைட் செய்து எடுத்தால் கீழாக உள்ள பேனலில் எண்களும் எழுத்துக்களும் உள்ள கீ பேட் உள்ளது. மேலேறிச் செல்லும் பேனலின் பின் பக்கம் கேமரா தரப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. போர் ட் மற்றும் சார்ஜ் செய்யக் கூடிய போர்ட் இடது பக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டைலாக இருப்பதுடன் கீழாக உள்ள பேனல் கிரிப்பாக இறுக்கிப் பிடிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கேமரா 1.3 மெகாபிக்ஸெல் திறன் உடையது. ஆனால் வீடியோ ரெகார்டிங் வசதி தரப்படவில்லை. இதன் மியூசிக் பிளேயர் அனைத்து வகை பார்மட் பாடல்களையும் இயக்குகிறது. எப்.எம்.ரேடியோவின் இயக்கமும் சிறப்பாக உள்ளது. இதன் ஒலி பரப்பினை ரெகார்ட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. 5 எம்பி நினைவகமும் மைக்ரோ எஸ்டி கார்ட் போர்ட் வசதியும் கிடைக்கிறது. தொடர்ந்து 8 மணி நேரம் பேசும் திறன் தரும் பேட்டரி தரப்படுகிறது. 1000 முகவரிகளைக் கொள்ளும் போன் புக் உள்ளது. புளுடூத் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். வசதிகள் தரப்பட்டுள்ளன. இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்குகிறது. கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5,250
No comments:
Post a Comment