kandee0702

Sunday, February 9, 2014

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புளூடூத் ஸ்பீக்கர்கள் அறிமுகம்

Divoom எனும் நிறுவனமானது புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடியதும் இடத்துக்கு இடம் எடுத்துச்செல்லக்கூடியதுமான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
Voombox எனப்படும் இந்த ஸ்பீக்கர்களில் 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவற்றில் உள்ள Bluetooth 4.0 தொழில்நுட்பமானது 10 மீற்றர்கள் வரை செயற்படுதிறன் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
7.5W வலுவுடைய இந்த ஸ்பீக்கர்கள் 75dB ஒலிச்செறிவை உற்பத்தி செய்யக்கூடியதாக இருப்பதுடன், 185 x 60 x 78mm என்ற அளவிடைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை நீலம், பச்சை, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கின்றன.

மிகச் சிறிய டெக்ஸ்டாப் கணனியை அறிமுகப்படுத்தும் Asus

மிகவும் சிறிய அளவுடையதும் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மினி டெக்ஸ்டாப் கணனியினை Asus நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Eee Box EB1037 எனும் வியாபாரக் குறியீட்டினைக் கொண்ட இக்கணனியானது 2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 8GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.
மேலும் சாதாரண கணனிகளை விடவும் 70 சதவீதம் மின் சக்தி சேமிப்பைக் கொண்ட இக்கணனியில் சேமிப்பு நினைவகமாக 320GB இருந்து 1TB வரை கொள்ளவுடைய வன்றட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

என்னை பற்றி சொல்கிறேன்! கேளுங்கள்

கணனி இல்லை என்றால் உலகமே இயங்காது என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்று சொன்னால் அது மிகையல்ல.
உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளும், எந்த மூலையில் நடக்கும் விடயங்களும் மிக எளிதாக மக்களை சென்றடைந்து விடுகிறது.
அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த கணனியை பற்றி என்ன தெரியும்? மிக சிம்பிளாக கணனியின் பாகங்களும் அதன் செயல்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கணனி
கணனி என்பது எண் முதலான தகவல்களை பெற்றுக் கொண்டு, அதனை முறையாக செயல்படுத்தி கொடுக்கும் கருவியே ஆகும்.
உள்ளீட்டு கருவி- Input device
நாம் கொடுக்கும் தரவு மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை கணனிக்கு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் ஆகும்.
உதாரணத்திற்கு- கீபோர்ட், மவுஸ், ஸ்கேனர், கமெரா

பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது யாகூ

பிரபல்யமான மின்னஞ்சல் சேவை வழங்குனர்களுள் ஒருவராகத் திகழும் யாகூ நிறுவனமானது தனது பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றினை விடுத்துள்ளது.
அதாவது பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதங்களில் யாகூ தளத்தினை ஊடுருவும் செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த அதேவேளை தற்போது ஹேக்கர்கள் மீண்டும் மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்ய எத்தனித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உங்கள் யாகூ மின்னஞ்சலின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு கைப்பேசிகளுக்கு SMS மூலமாகவோ அல்லது மாற்று மின்னஞ்சலின் ஊடாகவோ உள்நுழையும்போது எச்சரிக்கை செய்தியை பெறும்பொருட்டு தகவல்களை வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

iPhone 6 தொடர்பான புதிய தகவல் வெளியானது

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள iPhone 6 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது முன்னர் வெளியான தகவல்களின்படி இக்கைப்பேசியின் திரையானது 4.8 அங்குல அளவுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது 5 அங்குல அளவுடைய Sapphire Glass தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவே iPhone 6 அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இக்கைப்பேசியில் அப்பிளின் iOS 8 இயங்குதளம் நிறுவப்பட்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிந்து கொள்வோம்- "Math Input Panel"

Maths Formula-களை அதிகம் பயன்படுத்துபவரா? உங்களுக்கான மிகச்சிறந்த வழி
Microsoft Word-ல் டாக்குமெண்ட் ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறீர்கள்.
இதில் Maths Formula ஒன்றை அமைக்க வேண்டும், மிகவும் கஷ்டப்படாமல் எளிதாக அமைக்க விண்டோஸ் 7 சிஸ்டத்தில் வழி ஒன்று உள்ளது. இதன் பெயர் தான் Math Input Panel.
இதற்கு Start->Search Panel-> Math Input Panel என டைப் செய்யவும்.
உடனே மஞ்சள் நிறத்தில் விண்டோ ஒன்று ஓபனாகும், இதில் கர்சரை பயன்படுத்தி நீங்களே எழுதலாம்.
முடித்த பின்னர் அந்தக் கட்டத்தின் கீழாக உள்ள Insert என்ற இடத்தில் கிளிக் செய்தால், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் அந்த பார்முலா அமைந்துவிடும்.
டாகுமெண்ட் மட்டுமல்லாமல் புரோகிராம்களிலும் இதனை அமைத்துக் கொள்ளலாம்.
Maths Formula-களை அதிகம் பயன்படுத்தும் நபர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Cricket Live Score...