kandee0702

Saturday, May 8, 2010

இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்

உங்களால் நம்பமுடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினி வேலைகளை செய்வதற்கு கம்ப்யூட்டருக்கு தனி எல்.சி.டி மானிட்டரும், டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு தனி எல்.சி.டி மானிட்டரும் வைத்து இடத்தை அடைத்துக் கொண்டிருப்போம்.


இனி அந்த தொல்லை இல்லை.டிவியையும் பார்த்துக்கொண்டு,கணினி வேலைகளையும் செய்து கொள்ள வசதியாக கொரியா நாட்டை சேர்ந்த எல்ஜி நிறுவனம் உலகத்திலேயே முதல் முறையாக எல்.சி.டி.டி.வி மானிடரை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாம் தனியாக FULL HD வசதியுள்ள எல்.சி.டி டிவி வாங்கவேண்டுமென்றால் குறைந்தது 35,000 ரூபாய் என்ற விலையில் வாங்க வேண்டும். ஆனால் எல்.ஜி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மானிடர் 12,990 என்ற ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. அதிலும் FULL HD தொழில்நுட்பம் கொண்ட மானிடர்கள் 15,750 என்ற விலையிலேயே கிடைக்கிறது.

சரி இந்த டிவியில் படம் பார்த்துக்கொண்டே கணினி வேலைகளை எப்படி செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.அதற்கு நீங்கள் இந்த படத்தை

நெட் பைத்தியமா? சிகிச்சை தேவை

பலரும் கணினி முன் அமர்ந்தால் உலகமே மறந்து போய்விடுகிறது என்று மகிழ்ச்சியாகக் கூறும் காலம் போய், கணினி முன் அமர்ந்து உலகத்தையே மறந்துவிட்டவர்கள் அதிகரித்து வரும் காலம் இது.


இந்த நெட் பைத்தியங்களால் பணம் சம்பாதிப்பது நெட் சென்டர்கள் மட்டுமல்ல, நெட் பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்று அமெரிக்காவில் ஒரு மையம் ஆரம்பித்துவிட்டது வியாபாரத்தை.


இணையம் பற்றி வகுப்பு எடுத்து சம்பாதித்தவர்களுக்கு இப்போது வேலை இல்லை. அந்த நிலை மாறி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.


எப்போதும் இணையத்தில் எதையாவது செய்து கொண்டு கணினி முன் சிலையாகக் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.


இதுபோன்றவர்களுக்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சிகிச்சைக்கு பெயர் என்னத் தெரியுமா? ரீ-ஸ்டார்ட் என்பதுதான். கணினியால் ஹேங்க் ஆகிப் போனவர்களுக்கு ரீ-ஸ்டார்ட் என்ற இந்த சிகிச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.


இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மருத்துவர் லாரி கேஷ் கூறுகையில், இணையம் துவங்கியப் பிறகு பல்வேறு பிரச்சினைகளும் துவங்கிவிட்டன. சமூக மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. இதில் இணையத்தை ஒரு வரைமுறையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். அப்படி தப்பிக்க முடியாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

webdunia photo WD இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், வீடியோ/கணினி விளையாட்டுகளில் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடைப் பயிற்சி, கலந்தாய்வு என பல கட்ட சிகிச்சைகள் உண்டு. இதற்கென உள்ள சிகிச்சை நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக கவனிக்கிறார்கள்.


ஆனால் நெட் பைத்தியம் பிடித்தவர்களுக்கு முழுப் பைத்தியம் ஆகிவிடும், இதற்கான கட்டணத்தைக் கேட்டால். ஆம்.. ஒன்றரை மாதத்திற்கு அதாவது 45 நாட்களுக்கு ரூ.6.75 லட்சமாம்.

அம்மாடியோவ்...

இந்த கட்டணத்தைக் கேட்ட பிறகு தலை லேசாக சுற்றும். எனவே நீங்களாகவே நெட்டில் இருந்து ஓரளவிற்கு விலகிக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக எங்கள் இணைய தளத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டாம். அதைப் பார்த்தால்தானே இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வரும். என்ன நான் சொல்வது?

3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.


மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.

உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.


அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை.

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.


மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.


மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.


முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.


ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.


முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.
எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.


த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

Nikon நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சாதனங்கள் (இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்!)

தொழில்நுட்ப உலகம், மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை, இச்சாதனங்களுக்கு அடிமையாக தவறுவதில்லை.
பார்த்தவுடன் பற்றிக்கொள்வது போல, வாங்கிவிடுவதற்கு ஆசை வருத்தூண்டும், புதிய இரண்டு சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.
உலகின் முதலாவது புரொஜெக்டருடன் கூடிய டிஜிட்டல் கமெராவினை (first compact digital camera built-in projector) நிக்கொன் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'Nikon COOLPIX S1000pj ' எனப்பெயரிடப்பட்ட இக்கமெராவினை கொண்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படத்தினை, பெரிதாக்கி எந்த திரையிலும் உடனுக்குடன், பார்வையிடலாம்.
இதுவரை கமெரா திரையில் மாத்திரமே இந்த வசதி இருந்தது. கடந்த மாதம் முதல் சந்தைக்கு வந்த இக்கமெரா, இப்புதிய வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்!

மொபைல் இணைய தேடல்

மொத்த இன்டர்நெட் தேடலில், மொபைல் போன் வழியாகத் தேடுவது இப்போது 1.3 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் இந்த தேடல் மிக அதிகமாக இருந்ததாக இவற்றைக் கவனித்து வரும் வெப் மெட்ரிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


சென்ற பிப்ரவரி மாதத்தில், மொத்த இன்டர்நெட் பயன்பாட்டில் 0.57 சதவீதம் ஆக இருந்த மொபைல் வழித் தேடல் தற்போது 1.35 சதவீதம் டிசம்பரில் உயர்ந்தது. இதனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி தேடல் 99.28சதவீதம் லிருந்து 98.36% ஆகக் குறைந்தது.


மொபைல் வழி இன்டர்நெட் தேடலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு 58.4 சதவீதம். பிளாக்பெரி 22.2 சதவீதம், ஐபோன் 20.1சதவீதம், சிம்பியன் 19.01 சதவீதம் மற்றும் ஜாவா எம்.இ. 15.6 சதவீதம் ஆக இருந்தன.

வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’

`வெடிகுண்டு’ விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும் எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார்.


வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களைக் குவித்து வருகின்றன.


சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவவீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது. இதேபோல விதவிதமான ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு.


பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியாக் களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம் தயாரிக்கிறார்கள் இதே பாக்டீரியாவில் வேறுசில மாற்றங்களை ஏற்படுத்தினால் அது வெடிக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது.
அதாவது இந்த பாக்டீரியாவுடன், பாக்டீரியாபேஜ் எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களின் ஜீன்களைச் சேர்த்தால் அது இந்த மாற்றத்தைப் பெறுகிறது. பின்னர் அந்த பாக்டீரியாக்கள் `நிக்கல்’ என்ற உலோகத்தை நுகரும் வாய்ப்பு ஏற்பட்டால் வெடித்துச் சிதறுகிறது. எனவே இதனை சிறிய வெடி குண்டாக பயன்படுத்த முடியும்.


பாக்டீரியாக்கள் நுண்கிருமிகள் என்பதால் வேகமாகப் பரவும். அதில் இந்த மாற்றங்களைச் செய்து அனுப்பினால் எதிரிகளின் கோட்டைக்குள் எவ்வித பரிசோதனையிலும் சிக்காமல் உள்ளே நுழைந்து தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிடும். எனவே இது ஒரு ஆபத்தான ஆயுதமாக அவதாரம் எடுக்க இருக்கிறது.

கணிணி வேகம் அதிகரிக்க

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.


ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.


Free Registry Cleaner 4.20.9 freeware download

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது. விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.


2. அப்பிளிக்கேஸன் மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது. இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன் கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும் .

மைக்ரோமேக்ஸ் புதிய வகை செல்போன் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்‌போது, புதிய ரக எம்.டி.வி., எக்ஸ் 360 என்ற பிராண்ட் பெயரில் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செல்போன் புளூடூத் வசதி, 3டி மியூசிக், 8 ஜி.பி., நினைவகத்திறன், வீடியோ ரெக்காடர், இரண்டு சிம்கார்ட் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடப்பெற்று உள்ளன.


எம்.டி.வி., நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செல்போனை அறிமுகப் படுத்தி உள்ளதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய `சோலார்’ அலுவலகம்

சூரிய ஒளியை மின்சக்திக்கு பயன்படுத்திக் கொள்ளும் சோலார் தொழில்ட்பம் வேகமாகப் பெருகி வருகிறது. சோலார் கப்பல், விமானம், கட்டிடம், விளக்கு, அடுப்பு என்று இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


பல்வேறு நாடுகளில் சோலார் கட்டிடங்கள் இருக்கின்றன, கட்டப்படுகின்றன. தற்போது சீனாவில் ஷாங்டாங் நகரில் டெலு பகுதியில் உலகின் மிகப்பிரம்மாண்டமான சோலார் கட்டிடம் கட்டப்படுகிறது. 8 லட்சம் சதுர அடி கொண்ட கட்டிடத்தின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப்படுகிறது. இது அந்தப்பகுதியின் மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவலக கட்டிடம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது.


வருங்காலத்தில் கட்டிடங்களில் அலங்கார கண்ணாடிகளுக்குப் பதிலாக சோலார் தகடுகளை பதிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்றால் ஆச்சரியமில்லை.

மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள்

எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது.

நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது.


அதன் பெயர் கோடு (KODU) இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது. கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.

மென்பொருள் தரவிறக்கம் செய்ய

Cricket Live Score...