kandee0702

Tuesday, May 11, 2010

How to: Download and install themes in Windows 7

One of the new features introduced in Windows 7 is the use of themes to customize the system’s appearance in a very easy way. Themes enable you to personalize wallpaper, screensaver, window color and system sounds in just one click. Then, if you want, you can change small details inside the selected theme and create a new custom version of it.
Themes can be selected from the Personalization window, which you can open by right clicking anywhere on the desktop and selecting Personalize. Switching to a new theme is as easy as clicking the theme’s thumbnail. The theme will be immediately applied to your system, so you get the full preview before formally applying it. You can then click on any of the customizable elements at the bottom of the window (desktop background, window color, sounds and screensaver) and change them to suit your taste.
The best thing about themes in Windows 7 is that you’re not limited to the ones that come shipped with the operating system. You can download more from Microsoft by clicking the‘Get more themes online’ link in the Personalization window. Simply click the download button under the theme you want to use and download the .themepack file. Once it’s on your hard drive, double click it and it’ll be automatically applied – and added to the Personalization window under ‘My themes’.
Of course, Microsoft is not the only source of themes for Windows 7. A quick search on Google returns dozens of sites to download themes from and try new styles on your system, like Paul’s theme packs, the iThinkDiff collection or the themes in the IntoWindows blog. They’re as easy to install as the ones you download from Microsoft.

யாஹுவை ஜிமெயில் முந்தியது

இந்தியாவில் இமெயில் பயன்பாட்டில் யாஹூவை பின்னுக்குத் தள்ளி ஜிமெயில் முன்னுக்கு வந்துள்ளது. இதுவரை மிகவும் விசுவாசத்துடன் யாஹூ மெயிலைப் பயன்படுத்தி வந்த பலர் ஜிமெயிலுக்குத் தாவி உள்ளனர்.

வைஸி சென்ஸ்(ViziSense) என்ற ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இப்போது அதிகம் பயன் படுத்தப்படும் இமெயில் கிளையண்ட்டாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் பேர்களுக்கும் மேலாக ஜிமெயிலை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற மாதம் வரை யாஹூ தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.

யாஹூ மெயிலின் நேயர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியே 68 லட்சமாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் வாடிக்கையாளர்கள் 8% குறையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3% அதிகரிக்கத் தொடங்கியது. அக்டோபரின் முதல் வாரத்திலேயே ஜிமெயில் முதல் இடத்திற்கு வந்தது. அதே போல விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி 8% ஆகும்.

ரீடிப் மெயில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுடன் இயங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலக அளவில் யாஹூ மெயில் இடத்தை ஜிமெயில் பிடிக்க இன்னும் சில மாதங்களாகலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் லைவ் மெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எனவே யாஹூவும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் மெயிலும் ஏதேனும் அதிரடியான மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு வரவில்லை என்றால், நிச்சயம் உலக அளவில் ஜிமெயில் முதல் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இதனால் தான் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபலமான ஆங்கில நாளிதழில் யாஹூ ஒரு முழுப் பக்க விளம்பரத்தினை க் கொடுத்தது. தன்னிடம் விசுவாசமாக உள்ள மெயில் பயனாளர்களைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள யாஹு எடுத்த முயற்சியே இது என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் எண்ணுகின்றனர்.

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.

இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.

இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.

ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.

ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.

இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறியhttp://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

வாடிக்கையாளர்கள் வரவேற்பு: முகம் பார்த்து பேசும் செல்போனுக்கு “கிராக்கி”

3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் போல பார்க்கும் வசதி, இண்டர்நெட், சினிமா படம் பார்த்தல், டி.வி., சேனல்கள் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதன்மூலம் கிடைக்கின்றன.

சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியை பெற தகுதி யுடைய செல்போன்கள் வைத்திருப்பவர்கள் திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பெறலாம். இதற்குரிய சிம்கார்டு விலை ரூ.59 ஆகும்.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர். இதில் 450 பேர் புதிதாக இணைப்பு பெற்றவர்கள். 250 பேர் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர்களாகும்.

திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கை யாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது.

முகம் பார்த்து பேசும் இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதலாவதாக கோயம்புத்தூர் நகரில் செயல்படுத்தப் படுகிறது.

சோனியின் புதிய டிவிடி ரைட்டர்

டிவிடி ரைட்டர் இன்னும் மக்களிடையே நம்பிக்கை மிக்க சாதனமாக வலம் வருகிறது. புளு ரே ரைட்டர், பிளாஷ் டிரைவ் என எத்தனை வந்தாலும் டிவிடி ரைட்டர் இன்னும் தேவையாய் தான் உள்ளது.

எனவே தான் சோனி நிறுவனம் கூட இன்னும் புதிது புதிதாய் டிவிடி ரைட்டர்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் AD7240S என்ற பெயரில் புதிய டிவிடி ரைட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் முதலாக 24 எக்ஸ் (24x DVDRW) வேகத்தில் டிவிடியில் எழுதும் ரைட்டர் இதுதான் என சோனி அறிவித்துள்ளது.


இதில் ஆட்டோ ஸ்ட்ரேட்டஜி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டிவிடியில் தகவல்களை எழுதுகையில் இந்த டிரைவ் மீடியாவில் உள்ள தகவல்களைச் சற்று முன் கூட்டியே படித்து வைக்கிறது.



இதனால் எழுதும் ஹெட் அதற்கேற்ற வகையில் முழுவதும் பயன்படுத்தப்படும் வகையில் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது. எனவே இதுதான் மிக வேகமாகவும் புதிய முறையிலும் செயல்படும் டிவிடி ரைட்டர் என சோனி நிர்வாகி அறிவித்துள்ளார்.



இதில் சீரியல் ATA இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது டிவிடிக்களை 24 எக்ஸ் வேகத்திலும் சிடிக்களை 48 எக்ஸ் வேகத்திலும் எழுதுகிறது. டபுள் லேயர் டிவிடி எனில் 12 எக்ஸ் வேகத்தில் எழுதுகிறது.

ஐ-போனுக்கு ( i -Phone) மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்

தலைப்பு தவறு என்று எண்ணுகிறீர்களா! ஆமாம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான். மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது.

ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும். இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும்.

இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் அடுத்த மேம்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வழங்கும் . மைக்ரோசாப்ட் இவ்வாறு இலவச தொகுப்பினை எப்போதும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது புதுமைதான்.

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுக‌மானாலும் ஐபோன் பக்க‌த்தில் கூட‌ நெருங்க‌ முடிய‌வில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த‌ ச‌ந்தையில் நோக்கியாவே முன்ன‌ணியில் இருக்கிற‌து. வ‌ருவாய் ம‌ற்றும் லாப‌த்தைலும் இதே நிலை தான்.

ஆனால் த‌ற்போது முத‌ல்முறையாக‌ ஆப்பிள் நோக்கிய‌வைவிட‌ அதிக‌ லாப‌ம் ஈட்டியிருக்கிற‌தாம்.இந்த‌ ஆண்டின் ச‌மீப‌த்திய‌ காலாண்டு முடிவுக‌ளின் ப‌டி நோக்கியா 1.1 பில்லிய‌ன் டால‌ர் லாப‌ம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லிய‌ன் டால‌ர் லாபம் ஈட்டியுள்ள‌து.

விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.

முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

இங்கே சென்று தரவிறக்கி உபயோகித்து பாருங்கள். நீங்களே இதன் வேகத்தை உணருவீர்கள்.

மொபைல் போன் வைரஸ்

கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது.

முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.

மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும்
மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது. கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது. பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன.


இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன. இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும். இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை.

2004 ஆம் ஆண்டில் Cabir A என்ற வைரஸ் முதல் முதலாகத் தலை காட்டியது. புளுடூத் வழி பரவிய இந்த வைரஸ் பெரும்பாலும் எந்தவித பாதிப்பையும் தான் பரவிய மொபைல் போன்களில் காட்டவில்லை. மால்வேர் புரோகிராம்களைத் தயாரிக்கும் ஒரு சிலர் இது போல் மொபைல் போன்களுக்கும் வைரஸ்களை அனுப்ப முடியும் என்று காட்டுவதற்காகவே இதனைத் தயாரித்தனர்.

ஜனவரி 2005ல், Commwarrior வைரஸ் மிகப் பெரிய அளவில் பரவியது. புளுடூத் மூலமாக ஸ்கேண்டிநேவியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் அனைத்து மொபைல் போன்களுக்கும் பரவியது. ஏதேனும் ஒரு மொபைல் போனில் இந்த வைரஸ் அமர்ந்தவுடன் அருகில் உள்ள புளுடூத் இயக்கப்பட்ட அனைத்து போன்களையும் இது தேடி ஒட்டிக் கொள்கிறது. மேலும் உங்கள் அட்ரஸ் லிஸ்ட்டில் உள்ள அனைத்து எண்களுக்கும் மெசேஜ் அனுப்பி அதன் மூலமும் பரவுகிறது.இதுவரை வந்த மொபைல் வைரஸ்களில் இதுதான் இரு வழிகளில் பரவி அதிக சேதம் விளைவிக்கும் வைரஸாக உருவெடுத்துள்ளது.
பாதுகாத்துக் கொள்வது எப்படி?

எப்படி கம்ப்யூட்டர்களை அவற்றின் வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதே போல மொபைல் போன்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எப்போதும் ஒரு செய்தியைத் தாங்கி வரும் பைலையோ, புளுடூத் மூலம் வரும் பைலையோ, அதனை அனுப்பியவர், அல்லது புறப்பட்ட எண் நமக்குத் தெரியாத எண்ணாக, பழக்கம் இல்லா எண்ணாக இருந்தால், அந்த பைலைத் திறக்கக் கூடாது. நம் அவசரத்தில் இதனை எப்போதும் கவனமாகக் கொள்ள வேண்டும். அதிக முன்னெச்சரிக்கை யாக உள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டு, வைரஸ் பைல்களைத் திறந்துவிடும் நிகழ்ச்சிகள் நிறைய நடக்கின்றன.

புளுடூத் செயல்பாட்டினை மறைத்தே வைக்கவும். இயக்க வேண்டாம். அதனை "hidden" என்ற வகையிலேயே வைக்கவும். இதனால் மற்ற மொபைல் போன்களின் புளுடூத் வலையில் இது சிக்காது. இந்த செட்டிங்ஸை புளுடூத் ஆப்ஷன் திரையில் நீங்கள் காணலாம். செக்யூரிட்டி அப்டேட் பைல்களை, உங்கள் சிஸ்டம் பைல்களுக்கேற்ப, நிறுவனங்கள் அனுப்புகின்றன. இந்த பேட்ச் பைல்கள், வைரஸ் கொண்ட பைல்கள் எப்படிப்பட்ட பைல் பெயர்களில் வருகின்றன என்று பட்டியல் தருகின்றன. இவற்றைத் தெரிந்து வைத்து, அத்தகைய பைல்களைத் தவிர்க்கவும். FSecure, McAfee, Symantec ஆகியவற்றின் இணைய தளங்களுக்குச் சென்றால் இந்த பைல்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் சில தளங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிந்து வைத்தால், இவை மொபைல் வைரஸ் மற்றும் பிற தகவல்களைத் தொடர்ந்து அனுப்புகின்றன.

பல நிறுவனங்கள் மொபைல் போன் பாதுகாப்பிற்கென செக்யூரிட்டி சாப்ட் வேர்களைத் தயாரித்து வழங்குகின்றன. பெரும்பாலானவை இலவசங்களே. சில கூடுதல் வசதிகளுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்கின்றன. இவை வைரஸ்களை நீக்குகின்றன. வைரஸ் நுழைந்துவிடாமல் மொபைல் போன் களைப் பாதுகாக்கின்றன. சிம்பியன் சிஸ்டம் தயாரித்து வழங்கும் நிறுவனம், தன் சிஸ்டத்தில் புளுடூத் மூலம் வரும் வைரஸ் பைல்களைத் தடுக்கும் புரோகிராம் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறது.

மேலே தரப்பட்ட தகவல்களிலிருந்து எப்படி முதலில் வந்த வைரஸ் புரோகிராமிற்குப் பின் வந்த வைரஸ்கள், தங்கள் வடிவமைப் பிலும், மேற் கொள்ளும் சேத வழிகள் மற்றும் சேதங்களிலும் முன்னேறியுள்ளன என்று பார்க்க முடிகிறது. இப்போதைக்கு பெரும் அளவில் மொபைல் போன்களை இந்த வைரஸ் புரோகிராம்கள் போன்களைக் கெடுக்க வில்லை என்றாலும் வரும் நாட்களில் இவற்றின் தீவிரம் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் மூலம் வங்கி பணப் பரிமாற்றம் எல்லாம் மேற்கொள்ளப் போகும் சூழ்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Cricket Live Score...