kandee0702

Saturday, May 15, 2010

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்

எச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது.

விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி.


நிறுவனத்தின் தாரக மந்திரமான “இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம். அழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.

இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5×67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.

டாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது

உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா?

உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம்.

கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் ஸ்டேடிக் மின்சாரம் கம்ப்யூட்டரின் நுண்ணிய பாகங்களுக்குக் கடத்தாமல் இருக்கும் வகையில் அதனை வேறு உலோகங்களைத் தொடுவதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்திடலாம்.

ராம் மெமரி பலவகைகளில் கிடைக்கிறது. டி.டி.ஆர்2, டி.டி.ஆர்.3 மற்றும் பல பழைய வகைகளில் உள்ளது. தற்போது வரும் கம்ப்யூட்டர்களின் மதர்போர்டுகள் குறிப்பிட்ட வகை ராம் சிப்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். எனவே கம்ப்யூட்டருடன் தரப்பட்ட குறிப்பேட்டினைப் பார்த்து, எந்த வகை ராம் சிப்பினை மதர் போர்டு ஏற்றுக் கொள்ளும் எனப் பார்க்கவும். உங்கள் மெமரியினை 4 ஜிபிக்கு மேல் உயர்த்துவதாக இருந்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் சிஸ்டமாக இருக்க வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் வகையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் கம்ப்யூட்டரை அடிக்கடி கேம்ஸ் விளையாடப் பயன்படுத்தாமல் இருந்தாலும், அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்டு ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவுவது நல்லது. குறிப்பாக விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா அவற்றின் யூசர் இன்டர்பேஸ் திரைகளின் காட்சித் தோற்றங்களைச் சிறப்பாக அமைத்திருப்பதால், கிராபிக்ஸ் கார்டு அதிக திறனுடன் இருப்பது இவற்றின் பயனை நன்கு நமக்குத் தரும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என எதுவாக இருந்தாலும், இதனுடன் ஒட்டிக் கொள்ளும் தேவையற்றவைகளை, அவ்வப்போது நீக்குவது, இவற்றின் வேகமான செயல்பாட்டை உறுதி செய்திடும்.

தேவையற்ற செயல்பாடுகள், செயல்படுத்தாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்கவேண்டும். இதனால் விண்டோஸ் தன் சக்தியை இவற்றில் ஈடுபடுத்தாமல், தேவைப்படும் புரோகிராம்களில் மட்டுமே பயன்படுத்த வழி கிடைக்கும்.

விண்டோஸ் எக்ஸ்பியில், சிஸ்டம் கண்ட்ரோல் பேனலைத் திறந்திடவும். அதில் அட்வான்ஸ்டு (Advanced) டேப்பில் கிளிக் செய்திடவும். பின் செட்டிங்ஸ் (Settings) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்ஜஸ்ட் பார் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்ற ரேடியோ பட்டனைக் கிளிக் செய்திடவும். இதனால் மெனுவின் கீழாக ட்ராப் ஷேடோ போன்ற அலங்கார வேலைப்பாடுகள் நீக்கப்படும்.

விஸ்டாவில் சைட் பார் செயல் இழக்கச் செய்வதன் மூலம், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஏரோ (Aero) சூழ்நிலையை நிறுத்துவதன் மூலம், கம்ப்யூட்டரின் மெமரியையும், செயல்திறன் சக்தியையும் (Processing Power) மேம்படுத்தலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனுவில் பெர்சனலைஸ் (Personalize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

விஸ்டாவில் விண்டோ கலர் அண்ட் அப்பியரன்ஸ் (Window Color and appearance) என்பதை கிளிக் செய்து அதில் எனேபில் ட்ரான்ஸ்பரன்ஸி (Enable Transparency) என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் விண்டோஸ் 7 பேசிக் (Windows 7 Basic) என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும்.

நாம் அடிக்கடி இணையத்தில் பார்க்கும் பல புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகிறோம். இவற்றை இன்ஸ்டால் செய்கையில், சிஸ்டம் தொடங்கும்போதே, அவற்றைத் தொடங்கும் வகையிலும் அமைத்துவிடுகிறோம். இதனால் நமக்குத் தேவையான, அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற (எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் போல) புரோகிராம்களின் இயக்க வேகம் பாதிக்கப்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பயன்படுத்தாத பல புரோகிராம்கள், இவற்றின் பின்னணியில் இயங்குவதே இதற்குக் காரணம்.

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில், ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் புரோகிராம்ஸ் அண்ட் பைல்ஸ் (Search Programs and Files) என்ற பீல்டில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். சிஸ்டம் கான்பிகரேஷன் (System Configuration) விண்டோ இப்போது கிடைக்கும். இவற்றில் உள்ள டேப்களில் Startup என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கட்டளை (Command) பிரிவில் உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் உள்ளதா எனப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக, ஐட்யூன்ஸ் (iTunes) வந்த காலத்தில் அதனைப் பதிந்திருக்கலாம்.

இதனால் iTuneshelper.exe மற்றும் QTTask.exe என்ற இரு பைல்கள் இயங்கியவாறு இருக்கும். இவற்றினால் எந்த பயனும் தனியாக இல்லை. இது போன்ற தேவையற்ற புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் இயக்கப்படுவதைத் தடுக்கலாம். இதனால் ராம் மெமரி இடம் காலியாகி, அவசியமான புரோகிராம்கள் வேகமாக இயங்க வழி கிடைக்கும்.

சிஸ்டம் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க, அடிக்கடி சி டிரைவின் விண்டோஸ் டைரக்டரியில், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களைக் காலி செய்திட வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கியவுடன் இவற்றைக் காலி செய்திட வேண்டும். அல்லது சேப் மோடில் சென்று இவற்றைக் காலி செய்திடலாம். இதனால் பயன்படுத்தாத பைல்கள் பட்டியலில் உள்ள கடைசி பைல் வரை நீக்க முடியும். இதற்கு ஏற்கனவே இந்த பகுதியில் விரிவாகச் சொல்லப்பட்ட சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

இதில் இன்னும் ஒன்றைக் கவனிக்கலாம். ஏதேனும் ஒரு புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கத்திலிருந்து அறவே நீக்க, அதனுடன் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் 7ல் அன் இன்ஸ்டால் செயல்பாட்டுக்கென ஒரு சிறிய புரோகிராம் பைல் தரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தினாலும் சில பைல்கள் கம்ப்யூட்டரில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அறவே அனைத்து பைல்களை நீக்க சில தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller from http://www.pcworld.com/downloads/file/fid,66703order,6page,1/description.html) என்னும் புரோகிராம் சிறப்பானதாகும். இதனை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம்.

இந்த புரோகிராம், குறிப்பிட்ட புரோகிராமின் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்தியே அனைத்து பைல்களையும் நீக்குகிறது. பின் மேலும் ஒரு படி சென்று சிஸ்டத்தை ஸ்கேன் செய்து, ரெஜிஸ்ட்ரியைத் தேடிப் பார்த்து, நீக்கப்படும் புரோகிராம் சார்பான அனைத்தையும் நீக்குகிறது.

ஆன்லைன் கேம்ஸ், ஸ்ட்ரீமிங் மீடியா புரோகிராம்கள், இன்டர்நெட் போன் சர்வீசஸ், பிட் டாரண்ட் போன்ற டவுண்லோடிங் புரோகிராம்கள் ஆகியவை அதிக அளவில் டேட்டாவினைக் கையாளுவதால், நெட்வொர்க் பேண்ட் அளவில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே இவற்றைத் தேவைப்படும்போது மட்டும் இயக்கி, மற்ற நேரத்தில் இயங்கா நிலையில் வைத்திட வேண்டும்.

ஹார்ட் டிரைவ் ஒன்றை, அது உள்ளே இணைப்பதாயினும் அல்லது வெளியே வைத்து இயக்குவதாயினும், தேர்ந்தெடுக்கையில் அதன் இயக்க வேகம் அதிக பட்சம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். உள்ளே வைத்து இயக்கும் இன்டர்னல் டிரைவ் மற்றும் வெளியே வைத்து, இணைத்து இயக்கும் எக்ஸ்டெர்னல் டிரைவ் என இரு வகைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியில் வைத்து பயன்படுத்தும் டிஸ்க் டிரைவ்களில் பல நன்மைகள் உண்டு. உங்கள் டேட்டாவினை நீங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டேட்டா பேக்அப் செய்வதற்கு பாதுகாப்பானதாகும். உள்ளிருந்து இயக்கக் கூடிய டிஸ்க்குகளில் சடா (SATA) வகை இணைப்புகள் சிறந்தவை ஆகும். அடுத்ததாக eSATA எனச் சொல்லப்படும் வேகம் கொண்டவை, யு.எஸ்.பி. அல்லது பயர்வேர் டிரைவ்களைக் காட்டிலும் வேகம் கொண்டவையாகும். ஆனால் இவற்றைப் பயன்படுத்த ஒரு ஆட் ஆன் கார்ட் தேவைப்படும். தற்போது 7,200 ஆர்.பி.எம். வேகத்திற்குக் குறைவாக எந்த ஹார்ட் டிஸ்க்கும் இயங்குவதில்லை. 10,000 மற்றும் 15,000 ஆர்.பி.எம். வேக டிரைவ்கள் கிடைக்கின்றன. ஆனால் சற்று கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். தற்போது அறிமுகமாகிப் பரவி வரும் சாலிட் ஸ்டேட் டிஸ்க், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அதிக வேகம் தரும். ஆனால் இவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதில்லை.

கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினை பிரிண்டர்களும் தாமதப்படுத்துகின்றன. அச்சின் தன்மையைச் சற்றுக் குறைவாக வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகம் அதிகரிப்பதோடு, அச்சிடும் மையும் மிச்சப்படும்.

இணைய தளங்களை அச்சிடுகையில், அந்த பக்கத்தில் காணப்படும் விளம்பரங்கள், கிராபிக்ஸ் படங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே இந்த படங்கள் இல்லாமல் அச்சிடுவதே நல்லது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அதில் டூல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Tools, Internet Options) தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் அட்வான்ஸ்டு (Advanced) டேப் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் விண்டோவில் மல்ட்டிமீடியா பிரிவிற்குச் செல்லவும். அதில் �ஷா பிக்சர்ஸ் (Show Pictures) என்று இருப்பதன் எதிரே உள்ள பெட்டியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில் டூல்ஸ், ஆப்ஷன்ஸ் (Tools, Options) தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் கண்டென்ட் (Content) டேப்பில் கிளிக் செய்திடவும். Load Images Automatically என்று இருப்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும்.

இந்த இரண்டு பிரவுசர்களிலும் ரெப்ரெஷ் பட்டனை அழுத்தி இணையப் பக்கங்களை படங்கள் இல்லாமல் இறங்கும்படி பெற்று, பின் பிரிண்ட் கட்டளை கொடுக்க வேண்டும். அச்சடித்து முடித்த பின் மீண்டும் மேலே காட்டியுள்ள இடங்களுக்குச் சென்று மீண்டும் கிராபிக்ஸ் படங்களைப் பெறுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தவும். குறிப்பிட்டுள்ள வழிகள் அனைத்தும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகம் குறைகையில் நாம் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளாகும். இவற்றை ஓரிரு முறை எடுத்தால் மட்டும் போதாது. தொடர்ந்து அடிக்கடி இந்த செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வேகம் இழந்த கம்ப்யூட்டர் தொடர்ந்து பழைய கூடுதல் வேகத்தில் இயங்கும்.

உங்கள் குழந்தைகளின் செயற்பாட்டை அவதானிக்க ஒரு மென்பொருள்

உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும். கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர். அதற்கு என்ன செய்வது ? அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள்.

உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேசன் மெயில் அனுப்புவார்கள். அதை ஆக்டிவேட் செய்யவும். பிறகு ஒரு மென்பொருள் தரவிறக்க கூறுவார்கள். இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் குழந்தை உபயோகிக்கும் கணிணியில் நிறுவி விடுங்கள்.

உங்கள் குழந்தைக்கென்று தனி யூசர் உருவாக்கியிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கண்காணிக்க வேண்டிய யூசர்களை கொடுக்கவும் முடிந்தது. இனி வாரம் ஒரு முறை உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களுக்கு அதிகசென்றுள்ளனர். எந்தெந்த மென்பொருட்களை அதிகம் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.

கணினியில் என்ன நடக்கிறது?

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை?

IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

சுட்டி இதோ :
http://www.whatsrunning.net/whatsrunning/download.aspx

MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...

MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம்.


முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007 இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.
முன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன.

ஆனால் Ofice 2007 இல.docx, xlsx, .pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, PowerPoint இல் பயன்படுத்தப் படுகின்றன. இந்தப் புதிய பைல் நீட்டிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை.

அதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .pptx பைல் நீட்டிபுகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.

எனினும் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தபடும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வ்சதி Office 2007 இல் தரப்படுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன் படுத்துகிறீர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணிகளில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தப்படும் நீட்டிப்புகளோடே சேமிக்க வெண்டி வரும்.

Office 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழைய நீட்டிப்புக்களுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால இந்தப் பிரச்சினை எழாது.

Word 2007 இல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .doc எனும் நீட்டிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்க்ள்.

முதலில் MS- Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Options தெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள்.

அடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97-2003 Document (*doc) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.

இப்போது wordல் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன போமட்டிலேயே சேமிக்கப்படும்.

விண்டோஸ் 7 நேரடி தரவிறக்கம்

மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனி நபர் கணினிகளுக்கான தனது புதிய இயங்கு தளத்ததின் பீட்டா பதிப்பை (Beta Version) வெளியிட்டது. விண்டோஸ் 7 (Seven) எனப் பெயரிடப்பட்டிருகும் இந்த இயங்கு தளம் இது வரை வெளி வந்த விண்டோஸ் பதிப்புக்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாக இருக்கும் என மைக்ரோஸொப்ட் மார் தட்டிக் கொள்கிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பபட்ட விண்டோஸின் முன்னைய பதிப்பான விஸ்டா கணினி பயனர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

மாறாக அது மைக்ரோஸொப்ட் நிறுவனம் இதுவரை பெற்றிருந்த நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தது, எனவே விஸ்டாவினால் இழந்த பெயரை சரிசெய்வதற்காக புதிய ஒரு இயங்கு தளத்தை விரைவிலேயே வெளியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு ஏறபட்டது.

இழந்த பெயரை மீட்டுக்கொள்ளவும் விண்டோஸுக்குப் போட்டியாக வந்திருக்கும் லினக்ஸின் துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்குமாறும் மேலதிக வசதிகளுடனும் உருவாக்கப் பட்டுள்ளது விண்டோஸ் 7.
விண்டோஸ் 7 இறக்கம் செய்ய கீழே குறிபிட்டுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.

Cricket Live Score...