kandee0702

Tuesday, May 4, 2010

ராம் மெமரியும் டிஜிட்டல் போட்டோவும்

போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைய நாளில் மிக மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டது. டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் கேமரா மொபைல் போன்களின் வரவால் யாரும் எந்த நிலையிலும் போட்டோக்களை எடுத்து, கம்ப்யூட்டரில் அவற்றைப் பதிந்து திருத்தி செம்மைப்படுத்துவது வழக்கமான வேலையாக மாறிவிட்டது. இந்நிலையில் தான் கம்ப்யூட்டர் நம் தேவைகளுக்கேற்ப செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.


போட்டோக்களைக் கையாள கம்ப்யூட்டரைத் தயார் செய்யாமலேயே அது நம் விருப்பத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் நடப்பதில்லை. இதற்குக் காரணம் ஆழமான வண்ணங்களில் அதிக பிக்ஸெல்களுடன் கூடிய போட்டோவை கம்ப்யூட்டரில் பயன்படுத்துகையில் அவற்றைக் கையாள கம்ப்யூட்டருக்கு ராம் மெமரி கூடுதலாக தேவைப்படுகிறது. அப்படி எவ்வளவுதான் வேண்டும்? என எப்படி அறிந்து கொள்வது? ராம் மெமரியைப் பொறுத்தவரை எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு நம் பணி எளிதாக இருக்கும். போதுமானது என்று பார்க்கையில் அது நாம் பயன்படுத்தும் போட்டோக்களின் திறன் அடிப்படையிலேயே அமையும்.


எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் 512 எம்பி ராம் மெமரி 2 அல்லது 3 மெகாபிக்ஸெல் அளவில் அமைந்த போட்டோக்களை சற்று எளிதாகக் கையாள முடியும். இதில் 8 மெகா பிக்ஸெல் போட்டோக்களைப் பயன்படுத்துகையில் வேகம் குறைந்து ஒவ்வொரு மாற்றத்திற்கும் நம் பொறுமையைச் சோதிக்கத் தொடங்கிவிடும். (என்னுடைய கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் உள்ளது. 8 மெகா பிக்ஸெல் படங்கள் இரண்டுக்கு மேல் கையாளுகையில் அது திணறத் தொடங்குகிறது) எனவே நீங்கள் 4 மெகா பிக்ஸெல் அல்லது அதற்கும் கூடுதலான திறனுடன் கூடிய போட்டோக்களைக் கையாளுவதாக இருந்தால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் குறைந்தது 1ஜிபி ராம் இருக்க வேண்டும்.


இதுவே 8 மெகா பிக்ஸெல் படங்களாக இருப்பின் நிச்சயமாய் 2ஜிபி இருக்க வேண்டும். தற்போது மெமரி சிப்களின் விலை குறைவாக இருப்பதால் நிச்சயம் இதனை மேம்படுத்துவதனை நாம் ஒரு சுமையாகக் கருத மாட்டோம். மெமரியை அதிகப்படுத்திய நிலையில்தான் எவ்வளவு வேகமாக நாம் இயங்க முடிகிறது என்பதனை உணர்வீர்கள். ராம் மெமரியை மேம்படுத்தி உயர்த்துமுன் உங்கள் கம்ப்யூட்டர் மேம்படுத்தலைத் தாங்குமா என்பதையும் எத்தகைய மெமரி சிப் வாங்கிப் பொருத்த வேண்டும் என்பதனையும் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மேம்படுத்த வேண்டும். பொதுவாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கம்ப்யூட்டராக இருந்தால் அதன் மெமரியை 2 ஜிபி வரை உயர்த்தலாம். ராம் மெமரியை உயர்த்திய பின்னரும் தேவையற்ற புரோகிராம்களை கம்ப்யூட்டரைத் தொடங்கும்போது இயக்கி ராம் மெமரியில் வைத்திடும் பழக்கத்தினை விட வேண்டும். அடிக்கடி எம்.எஸ்.கான்பிக் இயக்கி கிடைக்கும் திரையில் ஸ்டார்ட் அப் டேபினை அழுத்தி பின் நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்கள் இருந்தால் அவற்றை இயக்கிப் பின்னணியில் இருப்பதை நீக்கிவிட வேண்டும். அந்த புரோகிராம்களின் பெயர்களின் முன்னால் இருக்கும் சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு சிஸ்டம் கொடுக்கும் எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு கம்ப்யூட்டரை ரீஸ் டார்ட் செய்தால் தேவையான மெமரி கிடைக்கும்.

No comments:

Post a Comment

Cricket Live Score...