
சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் இரண்டு மாதங்களில் மொபைல் போன்களுக்குத் தர இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் மொபைல் 6.5 குறித்து படித்தோம். இதற்கு அடுத்தபடியாக வர இருக்கும் விண்டோஸ் மொபைல் 7 குறித்தும் தகவல்களை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு மக்களுக்கு கிடைக்கும் என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் அறிவித்துள்ளார்.
இது முழுமையான டெஸ்க் டாப் அனுபவத்தினைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார். விரல் தொட்டு இயக்குவதில் புதிய அனுபவத்தினை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் என எதிர்பார்க்கலாம். இதனுடன் இணைந்து மேலும் பல புதிய வசதிகள் தரும் புரோகிராம்களும் உருவாகலாம்.
No comments:
Post a Comment