

LG KC5550 LG KF750
எல்.ஜி. நிறுவனத்தின் வியூட்டி மொபைல் போன் மாடலுக்குப் பின் அதன் வழியில் இந்த கேமரா இயங்குகிறது. இந்த கேமராக்கள் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. இவற்றில் உள்ள நியான் டச் நேவிகேஷன் பட்டன்கள் நாம் விரும்பும் வகையிலான ஸ்டைலை அமைக்க உதவுகின்றன. இதில் ராக் டாக் ("RockeTalk") என்றொரு வசதி தரப்பட்டுள்ளது. மெசேஜ் அனுப்புகையில் டெக்ஸ்ட் இடம் இல்லாத போது வாய்ஸ், படங்கள் மற்றும் வீடியோ மெசேஜிங் ஆகியவற்றை ஆட்டோ ரொட்டேஷன் மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் தாங்கள் சந்திக்க விரும்பும் நபர்கள், அவர்களைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அலசிப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பலாம். யாஹூ, ஜிடாக், எம்.எஸ்.என். போன்ற மெசஞ்சர் சர்வீஸ் சர்வர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடலாம்.
LG KC550 மொபைலில் கேமராவில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பங்ஷன்களுக்கு கீகளை அமைத்து ஒரே கீ அழுத்தத்தில் அந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் கேமராவும் 5 எம்பி திறன் கொண்டதாகும். இதன் எல்.சி.டி. திரை 2.4 அங்குல அகலம் உடையது. இதில் உள்ள ஆட்டோ இமேஜ் ரொட்டேஷன் நம் விருப்பத்திற்கேற்ப திரையில் தோன்றும் காட்சிகளின் தோற்றத்தை அகலவாக்கிலோ அல்லது நெட்டுவாக்கிலோ மாற்றிக் கொள்ளலாம். இன்னும் பெரிதாக காட்சி வேண்டும் என்றால் இதில் உள்ள டிவி அவுட்புட் வசதியைப் பயன்படுத்தி படக் காட்சிகளைப் பெரிய தாகக் காணலாம். கேம்ஸ் விளையாடவும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
No comments:
Post a Comment