kandee0702

Tuesday, May 4, 2010

சோனி எரிக்சன் அறிவித்துள்ள 3 புதிய போன்கள்


தன் சைபர்ஷாட் மற்றும் வாக்மேன் வரிசையில் மேலும் புதிய மூன்று மாடல்களை வெளியிடப்போவதாக சோனி அறிவித்துள்ளது. இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதன் பரிமாணங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியவை என்பதால் இங்கு அவை தரப்படுகின்றன.

சி 903 மற்றும் சி 901 என்ற இரு சைபர்ஷாட் போன்களில் சி 903 ஒரு ஸ்லைடர் போன். இதில் கீழ்க்காணும் வசதிகள் தரப்பட்டுள்ளன.


* 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா. 16 எக்ஸ் வரையிலான ஸூம் வசதி. போட்டோ பிக்ஸ், படம் மற்றும் வீடியோ பிளாக் ஏற்படுத்தும் வசதி, ஸ்மைல் ஷட்டர், முகம் அறிந்து காட்டும் வசதி, பெஸ்ட் பிக்சர், போட்டோ பிளாஷ், இமேஜ், வீடீயோ ஸ்டபிலைசர், ஸ்நாப் பிஷ்.


* 2.4 அங்குல அகலத்தில் ஸ்கிராட்ச் விழ முடியாத டி.எப்.டி. எல்சிடி ஸ்கிரீன். இதில் ஆட்டோ ஸ்கிரீன் சுழற்றல் உள்ளது.


* டிவி அவுட் வசதி


* ஜி.பி.எஸ்.


* ஜி.பி.ஆர்.எஸ். / எட்ஜ்


* A2DP உடன் கூடிய புளுடூத்

*கேமிங்


*எம்2 கார்ட் சப்போர்ட்


சி 903 மத்திய நிலையில் விற்பனையாகும் போன்களில் ஒரு புதிய ஸ்டைலான போனாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு டிஜிட்டல் கேமராவில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இது வர இருக்கிறது. அடுத்ததாக அறிவிக்கப்பட்ட சி 901 போன் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை என்றாலும் சில விவரங்கள் கிடைத்துள்ளன. இதில் 5 மெகா பிக்ஸெல் கேமரா, ஸெனான் பிளாஷ், ஸ்மைல் ஷட்டர், ஸ்மார்ட் காண்ட்ராஸ்ட், ஜியோ டேக்கிங், 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் 2, யு.எஸ்.பி., எம்2 கார்ட் சப்போர்ட், அக்ஸிலரோ மீட்டர் மற்றும் எப்.எம். ரேடியோ ஆகியவை இருக்கும் என உறுதியாகத் தெரிகிறது. கருப்பு, சில்வர் மற்றும் பீச் கலரில் இது கிடைக்கும்.


வாக்மேன் வரிசையில் சோனியின் லேட்டஸ்ட் போனாக வர இருப்பது டபிள்யூ 395. இது ஒரு ஸ்லைடர் போன். இதில் 2 அங்குல அகலத் திரை 176 து 220 பிக்ஸெல் திறனுடன் தரப்படுகிறது. இதில் ஸ்கிராட்ச் ஏற்படாது. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் 2, யு.எஸ்.பி., எம்2 கார்ட் சப்போர்ட் ஆகியவை கிடைக்கும். கேமரா 2 எம்பி திறனுடன் இருக்கும். கிரே மற்றும் டைட்டானியம் வண்ணங்களில் இந்த கேமரா கிடைக்கும்.

No comments:

Post a Comment

Cricket Live Score...