kandee0702

Wednesday, December 28, 2011

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு


கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம்.

VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.

பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.

இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

சாதனை புரிந்த விண்டோஸ் 7

மிக வேகமாக விற்பனை செய்யப்படும் இயங்குதளம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில் 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.

இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.

இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான் இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இல்லாத பல அம்சங்கள் உள்ளன.

பழைய செயல்பாடுகள் முழுமையாக மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.

புதிய செயல்பாடுகள் அதிகமான எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் பெரும்பான்மையானவர்கள் இந்த இயங்குதளத்திற்கு மாறியுள்ளனர்.

விண்டோஸ் 7 சிஸ்டம் கடந்த அக்டோபர் மாதம் 22ம் திகதி வெளியானது. ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு மாதத்திலேயே இதன் விற்பனை 15 கோடியைத் தாண்டியது.

மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு நொடியிலும் ஏழு விண்டோஸ் 7 இயங்குதளம் விற்பனையானது. இன்னும் இது தொடர்கிறது. நிச்சயம் இதுவரை எந்த இயங்குதளமும் எட்டாத இலக்கினை இது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்


சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின.

ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.

வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.

வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.

மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.

3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4. விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.

Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.

சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.

நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

துண்டுக் காகிதங்களிலிருந்து மின்சாரம் தயாரித்து சொனி நிறுவனம் சாதனை

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.

வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு போத்தலினுள் இட்டு அதனுள் தண்ணீரையும் சேர்த்து நன்றாக குலுக்கி சில நிமிடங்கள் வைக்கப்பட்டது.

குறித்த சில நிமிடங்களின் பின்னர் கலவையிலிருந்து உருவாகிய மின்சாரத்தில் இருந்து சிறிய மின்விசிறி சுழல வைக்கப்பட்டது.

மரத் துண்டை அரித்து உண்ணும் கறையான் பெறும் சக்தியும் இதே தொழிநுட்பத்தில் தான் இயற்கையால் செயற்படுத்தப்பட்டதாக சொனி நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு முகாமையாளரான Chisato Kitsukawa தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இந்த வகையில் மின்சாரம் தயாரிப்பது குறித்து கல்வி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருங்காலத்தில் நீர்மின்சக்தி, நிலக்கரி மூலம் மின்சக்தி, அணுமின்நிலையம் போன்ற மின் உருவாகும் மூலங்களுக்கு இப்படியான மாற்றுவழிகள் மூலம் மின்சாரம் கிடைத்தால் இயற்கையும் பாதுகாப்பாக இருக்கும்.

Sunday, June 26, 2011

இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

இணையதளங்களை கிளிக் செய்வது என்றால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து வைத்து கொள்வது. இணைய மொழியில் இதற்கு ஸ்கிறீன்சொட் என்று பெயர்.

இப்படி இணையதளங்களை ஸ்கிறீன்சொட்டாக சேமித்து வைத்து கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருக்கின்றன. நாம் பார்த்து ரசித்த பயனுள்ள தளங்களை குறித்து வைத்து கொள்ள இது சுலபமான வழி. அதே போல நாம் பயனுள்ளதாக நினைக்கும் தளங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் இதுவே சிறந்த வழி.

எத்தனையோ பயன்கள் இருந்தாலும் இணையதளங்களை ஸ்கிறீன்சொட்டாக மாற்றி கொள்வது அத்தனை எளிதல்ல. அதற்கென பிரத்யேக வழிகளையும் குறுக்கு வழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.

வெப்சைட்ஸ் புரோ மற்றும் தம்லைசர் ஆகிய தளங்கள் இணையதள முகவரியை சமர்பித்தால் அவற்றை ஸ்கிறீன்சொட்டாக மாற்றித்தரும் சேவையை வழங்குகின்றன. இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது டிவிஷாட் இணையதளம்.

டிவிஷாட் இனையதளங்களை கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு ப‌கிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. இதுவே டிவிஷாட்டை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது.

டிவிட்ஷாட்டை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. எந்த இணையதளத்தை ஸ்கிறீன்சொட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் தயாராகி விடும்.

இந்த தோற்றத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் அப்படியே நமது நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ளலாம். இணையதள தோற்றத்தை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்தும் கொள்ளலாம்.

இணையதளங்களை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்ல புதிய தளங்களை கண்டு கொள்ளவும் இந்த சேவை உதவுகிறது. அதாவது இந்த தளத்திம் மூலம் பகிரப்படும் தளங்களின் தோற்றம் டிவிட்டர் பதிவுகள் போலவே வரிசையாக தோன்றும்.

இந்த பதிவு தொடரை பார்ப்பதன் மூலம் மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தளங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். பயனாளிகள் வசதிக்காக பகிரப்படும் தளங்கள் தொழில்நுட்பம், வடிவமைப்பு என பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

எனவே புதிய தளங்களை தேடிபார்க்க விரும்புகிறவர்கள் இங்கு பகிரப்படும் ஸ்கிறீன்சொட்களை ஒரு வலம் வந்தால் போதுமானது.

இணையதள முகவரி

உங்கள் கணணியை பாதுகாக்க

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.

இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.

இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.

2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.

3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.

4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.

5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.

6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.

7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.

8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.

இந்த மென்பொருளை நிறுவும் முறை:

நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.

முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.

ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

கணணியில் டீபால்ட் பிரவுசரை மாற்றுவதற்கு

நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம், பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய பிரவுசர்களாகும்.

அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்கப்படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும்.

இந்த வசதி நாம் இந்த மென்பொருளை நிறுவச் செய்யும் போதே கேட்கும். அதை கவனிக்காமல் நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் படித்து பார்க்காமல் Next கொடுத்துக் கொண்டே வந்து விடுவோம். கடைசியில் நாம் நிறுவிய புதிய பிரவுசர் நம்முடைய கணணியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

பயர்பொக்ஸ் பிரவுசரை டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு: இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Options என்பதை க்ளிக் செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் Advanced என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Check now என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பாப் அப் விண்டோவில் Yes என்பதை அழுத்தினால் உங்களுடைய பயர்பொக்ஸ் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

குரோம் பிரவுசரை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு:இதற்கு முதலில் குரோம் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Settings - Options க்ளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ள Make Google Chrome my default browser என்பதை கிளிக் செய்தால் போதும். குரோம் உலவி உங்கள் கணினியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

குரோம் IE உலவியை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு:இதற்கு முதலில் IE உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Internet Options- Programs என்பதை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் விண்டோவில் உள்ள Make Default என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அந்த பட்டனை அழுத்தினால் IE உலவி உங்களுடைய டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

ஒரே நேரத்தில் கணணியின் எழுத்துருக்களை Preview பார்ப்பதற்கு

இணையதள வடிவமைப்பளார்கள் முதல் பட வடிவமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும்.

மொத்தமாக நம் கணணியில் பல எழுத்துருக்கள்(Fonts) இருந்தால் ஒவ்வொரு Font ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்தப் பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது.

எழுத்தின் மேல் விருப்பம் உள்ள அனைவரும் நம் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை ஒவ்வொரு எழுத்துருவாக மாற்றி பார்த்து அதிலிருந்து சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஆகும் நேரம் அதிகம் தான். ஆனால் இனி ஒரே நொடியில் நம் கணணியில் இருக்கும் Fonts Preview ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Loading Fonts என்று இருக்கும் பொத்தானை சொடுகினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் கணணியில் Install ஆகி இருக்கும் Font அத்தனையின் Previewம் காட்டப்படும்.

Watermark என்று இருக்கும் கட்டத்திற்குள் நாம் எந்த வார்த்தைக்கான Preview பார்க்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்தால் போதும் ஒரே நொடியில் நம் கணணியில் நிறுவி இருக்கும் அத்தனை Fontsகளிலும் Preview காட்டப்படும்.

இணையதள முகவரி

சிக்கலுக்கு தீர்வு தரும் Task Manager

உங்கள் கணணி மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய் பின்னர் மீண்டும் இயங்குகிறதா?

பொறுமை இழந்து போய் அவசரப்பட்டு கணணியை மீண்டும் பூட் செய்திடும் செயலில் இறங்க வேண்டாம். இந்த வகை சிக்கலுக்கு விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன.

விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம் கணணியில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம்.

கணணியின் திறனை இதன் மூலம் கண்காணித்து நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம்களை மூடலாம். நெட்வொர்க்கில் கணணியில் இணைக்கப்பட்டு இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பயனாளர்களின் செயல்பாடுகளைக் காணலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம்களையும் இயக்கலாம். கணணியில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவு தான் ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும்.

விண்டோஸ் இயக்கமானது எப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான் நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.

பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். Ctrl-Shift-Esc அழுத்தலாம். Ctrl-Alt-Del அழுத்திப் பின்னர் Start Task Manager இயக்கலாம் அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager தேர்ந்தெடுக்கலாம்.

டாஸ்க் மேனேஜர் விண்டோவில் எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கீழாக கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப்படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.

டாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில் Applications, Processes, Services, Performance, Networking, and Users ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் Applications, Processes, Services ஆகிய டேப்கள் தான் நாம் கணணியில் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டிருக்கின்றன.

முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும் போது Applications டேப் நமக்குக் காட்டப்படும். கணணியில் இயக்கப்பட்டு டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள்(எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்படமாட்டாது.

ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால் அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள End Task பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில் மிக முக்கியமானது அதில் உள்ள Status பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம்கள் "Not Responding" எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம் புரோகிராமினை நிறுத்தலாம்.

டாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு Processes டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன.

இதன் மாறா நிலையில் Image Name (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), User Name (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), Memory (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்) மற்றும் Description (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன.

இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். பயனாளர் எனில் அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில் அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப்படும்.

கணணி மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால் அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் மெமரி டேப் கிளிக் செய்து ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால் அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.

இதே போல Services டேப் மூலம் சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். Stopped or Running இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம். நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம்.

பிரச்னைகள் ஏற்படுகையில் ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில் பிரச்னை தீர்க்கப்பட்டு கணணி வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு அதனை மீண்டும் நிறுவச் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் பல பயன்களைத் தரும் ஒரு சாதனமாகும். பொறுமையாகக் கையாண்டால் பல தீர்வுகளை இதன் மூலம் பெறலாம்.

கைத்தொலைபேசியில் பேசினால் மறதி நோய் மறைந்து போகும்: ஆய்வில் தகவல்

கைத்தொலைபேசியில் பேசினால் மறதி குணமாகும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. "அல்ஷ்கெய் மெர்ஷ்" என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயை ஜேர்மனியை சேர்ந்த ஆலியோஸ் என்ற விஞ்ஞானி கடந்த 1906ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து கைத்தொலைபேசியில் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை கைத்தொலைபேசிகள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கைத்தொலைபேசியில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை

கூகிள் Translate பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளை மாற்ற உதவுகிறது.

இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது.

அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ்[Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.

மொழிமாற்றம் செய்ய:

http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்த வரை அது தானியங்கியாக கண்டுபிடித்து விடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.

தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.

ஓன்லைனிலேயே MP3 கோப்புக்களை கட் செய்வதற்கு

ஓடியோ கோப்புக்கள் பெரும்பாலும் MP3 வடிவிலேயே நம்மிடம் இருக்கும். இந்த வகை கோப்புக்களை நம்முடைய கைத்தொலைபேசிகளிலும் பெரும்பாலும் வைத்திருப்போம்.

நம்மிடம் இருக்கும் MP3 கோப்புக்கள் நீண்டதாக இருக்கும். இதில் குறிப்பிட்ட சிறு பகுதியை மட்டும் தனியாக வெட்டி நம்முடைய கைத்தொலைபேசிக்கு ரிங்க் டோனாகவோ அல்லது மற்ற நண்பர்களுடன் பகிர நினைப்போம்.

இந்த வேலையை செய்ய நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் ஓன்லைனில் இலவசமாக மற்றும் சுலபமாக எப்படி நம்முடைய MP3 கோப்புக்களை வெட்டலாம்.

இந்த தளம் சென்றவுடன் அங்கு உள்ள Open MP3 என்ற பட்டனை அழுத்தி நீங்கள் வெட்ட வேண்டிய MP3 கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்வு செய்த கோப்பு பதிவேற்றம் ஆகி முடிந்தவுடன் கீழே படத்தில் வட்டமிட்டு காட்டி இருக்கும் கர்சர்களை முன்னும் பின்னும் நகர்த்தி உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

சரியான பகுதியை தேர்வு செய்து கொண்டவுடன் அங்கு நீங்கள் தேர்வு செய்துள்ள கோப்பின் அளவும் எந்த நேரத்தில் இருந்து எதுவரை தேர்வு செய்து உள்ளீர்கள் என்ற நேர அளவும் வரும்.

நீங்கள் சரியான இடத்தை தேர்வு செய்ய அதில் உள்ள Play பட்டனை அழுத்தி பாடல் ஒலிக்கும் பொழுது உங்களுக்கான பகுதி வந்ததும் பாடலை pause செய்து உங்கள் கர்சரை அதற்கு நேராக நகர்த்தினால் சுலபமாக இருக்கும்.

முடிவில் சரியான இடத்தை தேர்வு செய்தவுடன் அங்கு உள்ள Cut என்ற பட்டனை அழுத்தினால் போதும். உங்களின் MP3 கோப்பு வெட்டி உங்கள் கணணியில் சேமிக்கப்படும்.

இணையதள முகவரி


கணணி பராமரிப்புக்கு சில ஆலோசனைகள்

உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணணி தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணணியில் தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.

நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணணி வழி தான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம்.

இந்த நிலையில் கணணி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்? நாம் கணணியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது அல்லது நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

கணணியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது? இதுபோன்ற நிலையைத் தவிர்த்து நம் கணணியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கணணிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணணியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் வன்தட்டில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

வைரஸ் ஒழிப்பு மென்பொருளை நிறுவிக் கொள்ளவும்: எந்த ஒரு கணணியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி நிறுவிக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம். சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஓன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை தரவிறக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பயர்வால் நிறுவிக் கொள்ளவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் பயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விடயங்கள் உங்கள் கணணிகளை ஊடுருவதிலிருந்து பயர்வால் தடுக்கும்.

உங்கள் கணணிகளில் உங்களுக்கு தெரியாமலேயே தரவிறக்கம் ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் பயர்வாலுக்கு உண்டு. விண்டோஸ் எக்ஸ்.பி மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஓபரேட்டிங் சிஸ்டம்கள் பயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.

டீப்ராக் செய்யவும்: டீப்ராக்மென்டேஷன் என்பது நம் கணணியின் வன்தட்டை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணணியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை நிறுவிக் கொள்கிறோம் அல்லது நிறுவியவற்றை ரத்து செய்கிறோம். கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.

வன்தட்டை சுத்தம் செய்யவும்: உங்கள் கணணியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் சுவடுகளையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.

இணையதள தரவிறக்கங்களை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை தரவிறக்கம் செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை தரவிறக்கம் செய்வோம். இதிலெல்லாம் கணணியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் தரவிறக்கம் செய்து கொள்வது நலம்.

பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் வன்தட்டில் அதிக இடம் கிடைக்கும். கணணியின் செயல்திறன் அதிகரிக்கும்.

கணணியை சுத்தம் செய்யவும்: கணணியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணணியை வெப்பம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.

பயர்பொக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் புதிய நீட்சி FxChrome


இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பொக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது.


இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பொக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.

பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் குரோமின் இடைமுகத்தை விரும்பினால் அதற்கு ஒரு நீட்சி உள்ளது. இதன் பெயர் FxChrome. இதனை பயர்பாக்ஸ் உலவியில் நிறுவினால் பயர்பொக்ஸ் குரோமின் தோற்றத்தைப் போல மாறிவிடும். மெனுக்கள், டேப்கள், விண்டோக்கள், பட்டன்கள் போன்றவை குரோமில் இருப்பதைப் போல தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் பயர்பொக்சில் தான் இருப்பீர்கள்.

குரோம் போலவும் வேண்டும் என வித்தியாசமாக நினைத்தால் உங்களுக்கு இந்த நீட்சி பயன்படும். ஆனால் இதனைப் போட்டு விட்டு குரோம் போல வேகம் வரவில்லை என்று சொல்லக் கூடாது. முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த நீட்சி பயர்பொக்ஸ் பதிப்பு 4 இல் தான் செயல்படும்.

Wednesday, May 25, 2011

கேமராவுடன் கூடிய ஐபோட்-2 அறிமுகம்


முன்னணி ‌தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கேமராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை அறிமுகம் செய்துள்ளது.

மொபைல் போன்களுக்கு அடுத்த படியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல் தொழில்நுட்ப சாதனமாக உள்ளது ஐபோட். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்‌கிறது.

இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு மற்றும் வெள்ளையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 499 டொலர் முதல் 829 டொலர் வரை உள்ளது.

அமெரிக்காவில் வரும் 11 ம் திகதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்‌கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார்.

ஏற்க‌னவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் கேமரா உள்ளது. அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் இதில் பயன்படுத்தலாம்.

புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய

Internet Download Manager என்ற மென்பொருளை பற்றி அறியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகுந்த பிரபலம் வாய்ந்த மென்பொருளாக உள்ளது.

உலகில் அதிகமானவர்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். இந்த மென்பொருளை Download செய்தால் .rar file ஆக zip செய்யப்பட்டு வரும். அந்த கோப்பை விரிக்கும் போது ஒரு கடவுச்சொல் கேட்கும்.

அப்பொழுது நீங்கள் www.infotechportal.com என்று டைப் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த மென்பொருளுக்குரிய Serial Keyயும் தரப்பட்டிருக்கிறது.

இம் மென்பொருளை தரவிறக்கிய பின் அந்த மென்பொருளின் Setup File ஐ Double Click செய்து Run பண்ணத் தொடங்கும் போது ஒரு Dialog Box வரும். இந்த Dialog Box இலே www.infotechportal.com எனும் கடவுச்சொல்லை டைப் செய்து இம் மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி

வாகனங்களை கண்காணிக்க புதிய சாஃப்ட்வேர்

எம்ஃப்ரஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம், கார், லாரி, டிரக், பேருந்து போன்ற வாகனங்களை கண்காணிக்கும் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளது.

வாகனத்தில் இணைக்கப்படும் ஒரு கருவி, கணினியில் பைன் செக்யூர் என்ற மென்பொருள் உதவியுடன், வாகனம் எங்கு செல்கிறது என்பதை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணித்து தகவல்களை அனுப்பும்.

இதுபற்றி எம்ஃப்ரஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சைலேந்திரா பன்சால் கூறுகையில், இந்த மென்பொருள் கூகுள் வரைபடத்தின் உதவியுடன், வாகனம் எந்த இடத்தில் இருக்கின்றது. எந்த சாலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கனிணி திரையில் துல்லியமாக காண்பிக்கும் என்று தெரிவித்தார்.

அதேபோல் விபத்து அல்லது நெருக்கடியில் வாகனம் சிக்க நேர்ந்தால், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் பொத்தானை ஓட்டுநர் அழுத்தினால் போதும், வாகன உரிமையாளருக்கு மின்னஞ்சல் அல்லது செல்போன் குறுந்செய்தி மூலம் எச்சரிப்பதற்கும் இந்த மென்பொருள் வகை செய்யும் என்றார் அவர்.

நீண்ட தூரம் சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள், பயணிகள் பேருந்துகள், டாக்ஸி, அவசரத் தேவையான காவல்துறை வாகனங்கள், தீயணைப்புத்துறை, மருத்துவ ஊர்திகள், ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு இந்த மென்பொருள் உபயோகமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏமன், நைஜிரியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.

Tuesday, May 24, 2011

இந்தியாவில் 11ஜி மென்பொருள்: ஆரக்கிள் அறிமுகம்

சர்வதேச அளவில் தரவுக்காப்பக மென்பொருள் (database software) சேவை வழங்கி வரும் ஆரக்கிள் நிறுவனம், இந்தியாவில் 11ஜி என்ற புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது.

வர்த்தக சேவை, தகவல்தொடர்பு, அரசு அமைப்புகள் என அதிகளவு தகவல்களை கையாளும் நிறுவனங்கள் இந்த 11ஜி மென்பொருள் மூலம் பயனடையும் என ஆரக்கிள் இந்தியா துணைத்தலைவர் (தொழில்நுட்ப விற்பனை) கிரோவெர் தெரிவித்தார்.

இந்த புதிய மென்பொருளை பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்களுக்கு அதிநவீன முறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் 11ஜி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், சத்யம், டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகிய கணினி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து 11ஜி மென்பொருளை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளதாகவும் கிரோவெர் தெரிவித்தார்.

உலகளவில் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 11ஜி, லின்க்ஸ் இயக்கு தளத்திலும் (operating system) செயல்படும் என ஆரக்கிள் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 13, 2011

Wondershare iMate: ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

முன்னொரு காலத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் என்றால் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இந்த ஐபோன் மற்றும் ஐபேட்களை கணணியுடன் இணைப்பதற்கு பயன்படும் மென்பொருள் Wondershare iMate ஆகும். இந்த மென்பொருளின் சந்தைவிலை $59.95 ஆகும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் 20ஏப்ரல் 2011 வரை மட்டுமே இலவசமாக கிடைக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் தகவல்களை எளிமையாக ஐபேட் மற்றும் ஐபோன்களில் ஏற்றம் செய்ய முடியும். சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே இலவச கீ பெறுவதற்கான பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு உங்களுடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு Like என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக Get Keycode பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும். மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். மின்னஞ்சல் முகவரியில் உள்ள லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐபேட் மற்றும் ஐபோன்கள் பட்டியலிடப்படும். பின் அதை தேர்வு செய்து வேண்டிய பைல்களை கொப்பி செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் DVD க்களில் இருந்து நேரிடையாக பைல்களை மாற்றிக்கொள்ள முடியும். வேண்டுமெனில் பைல்களை பேக்அப் செய்து கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி

கோப்பறைகளின் நிறத்தை மாற்றம் செய்ய

அதிகமாக உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரே கோப்பறையில் வைத்திருப்போம். சாதாரணமாக கோப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டுமெனில் தனியொரு பெயரை வைத்து மட்டுமே பார்க்க முடியும். அதிகமான கோப்பறைகள் உள்ள இடத்தில் எளிதாக நாம் தேடும் கோப்பறையை காண முடியாது. இதனை வேறுபடுத்தி பார்க்க மேலும் ஒருவழி உள்ளது. கோப்பறையில் நிறத்தை மாற்றம் செய்வது இல்லையெனில், அதன் உருவ படத்தை மாற்றம் செய்தல். இவற்றை விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தில் நீங்கள் உருவாக்கும் கோப்பறைகளுக்கு தனி கலர் மற்றும் அழகிய ஐகானை உருவாக்க முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பறையை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்யது கொண்டு Select icon என்னும் பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பபடி ஐகானை மாற்றம் செய்து கொள்ள முடியும். இல்லையெனில் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Folderico என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் உங்கள் விருப்பபடி கோப்பறையை மாற்றம் செய்து கொள்ள முடியும். இப்படியும் கோப்பறையில் நிறத்தையும், உருவ படத்தையும் மாற்றிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். தரவிறக்க சுட்டி

ரத்த செல்களை இதய செல்களாக மாற்றும் முறையை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை

ரத்த செல்களை துடிக்கும் இதய செல்களாக மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முறை வைரஸ் இல்லாத புதிய பிரபஞ்ச முறையாக அறியப்படுகிறது. புதிய இதய செல் ஆய்வினை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய முறையில் இதயச் செல்களை உருவாக்க அதிக செலவினம் ஆவது இல்லை. உலக அளவில் இதனை பயன்படுத்த முடியும். புதிய முறையில் உருவாக்கப்படும் இதய செல்கள் 100 சதவீத செயல் திறன் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் செல் என்ஜினியரிங் மற்றும் கிமல் புற்று நோய் விஞ்ஞானிகளே இந்த புதிய செல் முறையை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு குறித்து ஜான் ஹாப்தின்ஸ் இன்ஸ்டியூட் உதவிப் பேராசிரியர் எலியஸ் ஜாமிபிடிஸ் விளக்கி உள்ளார். ஆதாரச் செல்கள் இதயச் செல்களாக மாற்ற வைரஸ் இல்லாத முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

இணையதள வசதியுடன் கூடிய கார்கள் அறிமுகம்


டொயோட்டா கார் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது வாகன உற்பத்திகளில் இணையத்தள வசதியை இணைக்கவுள்ளது.

எதிர் வரும் காலங்களில் சந்தைக்கு விடப்படும் வாகனங்களில் இணையத்தள வசதியும், இணையத்தள விளையாட்டுக்களுக்கான வசதிகளும் உள்ளடக்கப்படுவது தொடர்பில் மைக்ரோசொப்ட் மற்றும் டொயோட்டா நிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

உலகின் மிகப் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமும், மிகப் பெரும் கணணி மென்பொருள் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளமையானது எதிர்காலத்தில் வாகனங்களில் பல முற்போக்கான அம்சங்களும், வசதிகளும் உள்ளடக்கப்படுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று சந்தை ஆய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இந்த செயற்திட்டத்துக்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து பன்னிரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளன.


இச்செயற்திட்டத்தின் கீழ் இணையத்தள வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனான புதிய வண்டிகள் எதிர்வரும் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

2015ம் ஆண்டளவில் அனைத்து வாகனங்களிலும் இணையத்தள வசதிக்கான கருவிகளை அறிமுகப்படுத்தவும் பிரஸ்தாப செயற்திட்டம் மூலமாக இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.

Tuesday, April 12, 2011

பென்டிரைவை பாதுகாக்க சில வழிகள்

பென்டிரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது. இந்த பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்டிரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை. தரவிறக்க சுட்டி 2. USB FIREWALL: பென்டிரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. தரவிறக்க சுட்டி 3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. தரவிறக்க சுட்டி 4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம். தரவிறக்க சுட்டி

உங்கள் கணணியின் வெப்பநிலையை அறிந்து கொள்வதற்கு

நாம் பயன்படுத்தும் கணணியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கி வருகிறது. கணணி மிக அதிகமான வெப்பநிலைக்குச் சென்றால், அதன் காரணமாக விண்டோஸ் பூட் ஆகும் போது சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் சி.பி.யுவில் ஏதேனும் நுண்ணிய பாகங்கள் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது. கணணியின் வெப்பநிலையை காட்டுவதற்கு மென்பொருள்கள் நிறைய உள்ளன.

கணணியின் டாஸ்க் பாரை அவ்வப்போது மாறி வரும் வெப்பநிலைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்டுகிற இந்த மென்பொருளின் பெயர் Temperature Taskbar. டாஸ்க் பாரில் தோன்றும் வண்ணத்தை வைத்தே கணணியின் வெப்பநிலை சீராக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா அல்லது அபாய நிலைக்குச் சென்று விட்டதா என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் மூன்று வண்ணங்களில் கணணியின் வெப்பநிலையைக் காட்டுகிறது. கணணி இயல்பாக செயல்படும் போது பச்சை வண்ணத்தில் காட்டுகிறது. வெப்பநிலை அதிகமாகும் போது ஆரஞ்சு வண்ணத்திலும், அபாய நிலைக்குச் செல்லும் போது சிகப்பு நிறத்திலும் கணணியின் டாஸ்க் பாரை மாற்றி விடுகிறது.

இந்த மென்பொருள் எளிமையாக கணணியின் வெப்பநிலையை கண்காணிக்க உதவுகிறது. தரவிறக்க சுட்டி

Saturday, March 26, 2011

உங்களது பேஸ்புக்கில் வீடியோவைக் கொண்டு வர

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடித்தால் எப்படி இருக்கும். 1. அதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 2. அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள். 3. வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும். 4. அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 5. அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். 6. அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்திவிடவும். 7. அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. 8. இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணணியில் வெப் காமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும். 9. இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

Wednesday, March 23, 2011

ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்ய அருமையான மென்பொருள்

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கின்றன.
இதோ மீண்டும் ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் கட் செய்தும் கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
நாம் ஆடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கென தனி மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கொரு மென்பொருள் என ஒவ்வொரு பணிகளையும் செய்ய தனித்தனி மென்பொருளை நாட வேண்டிவரும்.
இந்த இரண்டு பணிகளையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் போட்டோக்களை கொண்டு Slide Show யும் உருவாக்கி கொள்ள முடியும்.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வீடியோ மற்றும் ஆடியோவை உங்கள் விருப்பபடி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் கட் மற்றும் ஜாயினும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் நாம் avi, mpg, tod, mov, dv, rm,3gp, 3g2, 3gp2,flv, swf, mp4,wmv, mkv, qt, ts, mts போன்ற வீடியோ பைல்களை உள்ளினைத்து கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளில் இருந்தவாறே டிவீடி ரைட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.இதனால் இந்த மென்பொருளை சிறந்ததொரு மென்பொருள் என்று கூறமுடியும்.இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தில் குறிப்பிட்டுள்ள பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது வீடியோ, ஆடியோ, மற்றும் போட்டோக்களை மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். நாம் இந்த மென்பொருளில் மாற்றம் செய்யும் பைல்களை நேரிடையாக டிவீடிக்களில் ரைட்டிங் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோ URL யை உள்ளிட்டு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
DVD க்களை உள்ளிட்டு அதில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவையும் இந்த மென்பொருளின் துணையுடன் கன்வெர்ட் மற்றும் எடிட்டிங் செய்து கொள்ள முடியும். மொத்ததில் இந்த மென்பொருளை கொண்டு ஆடியோ, வீடியோவை மிக எளிதாக மாற்றம் செய்யவும் எடிட் செய்யவும் இந்த மென்பொருளானது சிறந்ததாகும்.
இனி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வதை விட்டுவிட்டு ஒரே மென்பொருளின் துணையுடன் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.
தரவிறக்க சுட்டி

Friday, March 4, 2011

sixth sense...

'SixthSense' is a wearable gestural interface that augments the physical world around us with digital information and lets us use natural hand gestures to interact with that information.

We've evolved over millions of years to sense the world around us. When we encounter something, someone or some place, we use our five natural senses to perceive information about it; that information helps us make decisions and chose the right actions to take. But arguably the most useful information that can help us make the right decision is not naturally perceivable with our five senses, namely the data, information and knowledge that mankind has accumulated about everything and which is increasingly all available online. Although the miniaturization of computing devices allows us to carry computers in our pockets, keeping us continually connected to the digital world, there is no link between our digital devices and our interactions with the physical world. Information is confined traditionally on paper or digitally on a screen. SixthSense bridges this gap, bringing intangible, digital information out into the tangible world, and allowing us to interact with this information via natural hand gestures. ‘SixthSense’ frees information from its confines by seamlessly integrating it with reality, and thus making the entire world your computer.

The SixthSense prototype is comprised of a pocket projector, a mirror and a camera. The hardware components are coupled in a pendant like mobile wearable device. Both the projector and the camera are connected to the mobile computing device in the user’s pocket. The projector projects visual information enabling surfaces, walls and physical objects around us to be used as interfaces; while the camera recognizes and tracks user's hand gestures and physical objects using computer-vision based techniques. The software program processes the video stream data captured by the camera and tracks the locations of the colored markers (visual tracking fiducials) at the tip of the user’s fingers using simple computer-vision techniques. The movements and arrangements of these fiducials are interpreted into gestures that act as interaction instructions for the projected application interfaces. The maximum number of tracked fingers is only constrained by the number of unique fiducials, thus SixthSense also supports multi-touch and multi-user interaction.

The SixthSense prototype implements several applications that demonstrate the usefulness, viability and flexibility of the system. The map application lets the user navigate a map displayed on a nearby surface using hand gestures, similar to gestures supported by Multi-Touch based systems, letting the user zoom in, zoom out or pan using intuitive hand movements. The drawing application lets the user draw on any surface by tracking the fingertip movements of the user’s index finger. SixthSense also recognizes user’s freehand gestures (postures). For example, the SixthSense system implements a gestural camera that takes photos of the scene the user is looking at by detecting the ‘framing’ gesture. The user can stop by any surface or wall and flick through the photos he/she has taken. SixthSense also lets the user draw icons or symbols in the air using the movement of the index finger and recognizes those symbols as interaction instructions. For example, drawing a magnifying glass symbol takes the user to the map application or drawing an ‘@’ symbol lets the user check his mail. The SixthSense system also augments physical objects the user is interacting with by projecting more information about these objects projected on them. For example, a newspaper can show live video news or dynamic information can be provided on a regular piece of paper. The gesture of drawing a circle on the user’s wrist projects an analog watch.

The current prototype system costs approximate $350 to build.
RES




videos



விரைவில் வரப் போகும் 3D ஸ்மார்ட் போன்கள்

ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில் உலகின் முதல் முப்பரிமாணக் காட்சியுடன் கூடிய ஸ்மார்ட் போனை எல்.ஜி நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் உலக மாநாட்டில் இது காட்சிக்கு இருக்கும்.

இந்த போனின் திரையில் காட்டப்படும் முப்பரிமாண காட்சியைக் காண தனி கண் கண்ணாடி தேவையில்லை. நிடெண்டோ 3டி என்ற தொழில் நுட்பத்திற்கு இணையான தொழில் நுட்பம் ஒன்று இந்த போனில் பயன்படுத்தப்பட இருப்பதாக எல்.ஜி அறிவித்துள்ளது.

இதற்கென வடிவமைக்கப்பட்ட திரையானது காட்சிகளின் இரு தோற்றங்களை ஒரே நேரத்தில் அனுப்பும். பார்ப்பவருக்கு இது மூன்றாவது தோற்றமாக முப்பரிமாணத்தில் தெரியும்.

ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசர்

மொஸல்லா நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது.

இதன் சோதனை தொகுப்பு ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்க இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் புக்மார்க், சேவ் செய்யப்பட்ட பாஸ்வேர்ட், ஓப்பன் டேப் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டரி ஆகியவற்றை அப்படியே ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கு மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வசதி தரப்படுகிறது.

இந்த மொபைல் பிரவுசருக்கென ஏறத்தாழ 150 ஆட் ஆன் தொகுப்புகள் தரப்படுகின்றன. இவை பிரவுசருக்குக் கூடுதல் திறன் அளித்து அதன் செயல்பாட்டினைப் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ற படி அமைத்திடும். இந்த வகையில் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளை வெளியிட்ட பின்னரே மற்ற பிரவுசர்கள் அவற்றைப் பின்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் மேமோ(Maemo) ஓப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் என் 900 வரிசையில் உள்ள மொபைல் போன்களிலும் இயங்கும். ஆனால் ஐ போன்களில் இது இயங்காது. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் தன் போன்களில் இயங்கும் பிரவுசர்கள் தன்னுடைய வெப்கிட் இஞ்சினைப் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது.

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களிலும் இயங்காது. அந்த வகையில் விண்டோஸ் மொபைல் மற்றும் பிளாக்பெரி சிஸ்டங்களில் இயங்காது. இதற்கும் ஒன்றை ஒன்று ஒத்துப் போகாத தொழில் நுட்பங்களே காரணம் ஆகும்.


சந்தையில் ஐ போனுக்கு மதிப்பு குறைந்தது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ போனைக் காட்டிலும் மற்ற எளிதான ஆப்ஷன்களைக் கொண்டுள்ள கைத்தொலைபேசிகளுக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஹெச்.டி.சி என்ற தைவான் கைத்தொலைபேசிகள் நன்றாக விற்பனை ஆவதாக யுஸ்விட்ச் டாட் காம் மொபைல் ட்ரேக்கர் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இணையதள ஆய்வு மற்றும் விற்பனை இவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில் ஹெச்.டி.சி முதல் மூன்றிடங்களைப் பிடித்துள்ளது.

டிசையர், டிசையர், ஹெச்டி வொஸ்ல்ட் ட்பையர் மாடல்களே முதல் மூன்றிடங்களை பிடித்தவை. ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணம் அவர்கள் உபயோகிக்கும் ஆண்ட்ராய்டு மென்பொருள் தான்.

இது பிரத்யோகமாக உருவாக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க விடயங்களுக்கு மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு சரியான தீர்வாக உள்ளது. இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் சந்தையை முழுக்க தன் வசமே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் அறிமுகம்

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை சா சா(Cha Cha) மற்றும் சல்சா(Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற்படி இத்தகைய கையடக்கத்தொலைபேசிகள் மூலமாக பாவனையாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும்.

பார்சலோனாவில் நடைபெற்று வரும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான வதந்திகள் நிலவி வந்த நிலையிலேயே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுமே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவை ஆகும். கடந்த இரண்டு வருடங்களாக இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக பேஸ்புக் பாவிப்போரின் வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மற்றைய நிறுவனங்களும் இத்தகைய கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை

சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த பிரான்கோபர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய கருவி மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள இருமல் குறித்த விவரங்களை அறியலாம் என கூறப்பட்டாலும், மருத்துவ சமூகத்தினர் இதன் சேவை குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர்.

ஜேர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் உள்ள ஆய்வாளர்கள் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் முதல் தானியங்கி இருமல் கண்டறியும் சேவையாக இந்த புது கண்டுபிடிப்பு உள்ளது. ஆய்வாளர் கோட்சும், அவரது குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து இந்த புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் கூட்டம் நிறைந்த ஹம்பர்க் மற்றும் ஓல்டன்பர்க் வீதிகளில் சென்றவர்களின் மாதிரிகளை பதிவு செய்திருந்தார். இந்த புதிய மென்பொருள் கருவி மூலம் 80 சதவீத முடிவுகள் சரியானவையாக உள்ளன என்று கோட்ஸ் தெரிவித்தார். தினமும் 200 அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விண்டோஸ் சிஸ்டத்தில் புதிய போன் தயாரிப்பு


கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவன ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட போன்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் போட்டியிடும் வகையில் மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் நோக்கியா சேர்ந்துள்ளது.

இன்டர்நெட் பிரவுசிங், சமூக இணையதள தொடர்பு உட்பட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

மேலும் ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து வருவதாலும் இதன் விற்பனை உயர்ந்துள்ளது. அதை பயன்படுத்தி கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. பெரும்பாலான நிறுவனங்கள் இதை பயன்படுத்தி செல்போன்கள் தயாரித்து வருகின்றன.

எனவே இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் செல்போன்களை தயாரிக்க நோக்கியா முடிவு செய்துள்ளது.

நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீபன் எலோப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மைக்ரோசாப்டுடன் இணைவது நிறுவனத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சமீபத்தில்தான் செல்போன் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Sony அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ கேம்

Sony நிறுவனம் ஒரு புதிய வீடியோ விளையாட்டை "எக்ஸ்பீரியா ப்ளேஸ்டேசன்" என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது வீடியோ கேம் ஆர்வலர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிராதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணைக் கவரும் கற்பனையுடன் வடிவாக்கப்பட்டுள்ள இவ்விளையாட்டு Sony போனுக்காக பிரத்தியேகமானதா என்று இன்னும் தெரியவில்லை. Sony யின் எக்ஸ்பிரியா ப்ளே மற்ற ஸ்மார்ட்போன்கள் போலவே இருந்தாலும், திறக்கப்ட்டவுடன் கீ போர்டிற்கு பதிலாக ப்ளே ஸ்டேசன் கண்ட்ரோரில் உள்ளது போலவே ஏராளமான பட்டன்கள் உள்ளன.

விமர்சனங்களுக்கு இடையே வெளியான Sony யின் பி.எஸ்.பி.கோ யின் சிறிய உருவமாக உள்ளது. இதில் 3 ஜி கிடையாது. மேலும் பி.எஸ்.பி.கோ அதில் தரவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டுகள் மட்டுமே விளையாட முடியும்.

ஆனால் இந்த கேமின் வடிவமைப்பே வேறு. இது ஒரு தொலைபேசியும் கூட. இதில் 3 ஜி தொடர்பும், ஆண்ட்ராய்ட்டும் மற்ற விளையாட்டுகளுக்கான வசதியும் உள்ளது. டிஜி டெய்லியின் ஆசிரியர் மெக் நியூஸ் வேர்ல்ட் கூறுகையில், இது ஒரு முக்கிய மாற்றம். இந்த கேமைப் பார்க்கும் போது பி.எஸ்.பி.க்கோ போல தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் மாறானது. 2011-ம் ஆண்டு வீடியோ கேம்களின் நிறைவான ஆண்டாகவும், இது போன்ற ஒரு கருவி வெளியாவதற்கு இதுவே சரியான நேரமாகும் எனவும் கூறினார்.

Friday, February 4, 2011

ஏர்செல்லுடன் கைகோர்த்த பேஸ்புக்

வாய்ஸ் அப்டேட்டிற்காக, ஏர்செல் நிறுவனத்துடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது. சமூகவலை இணைதளங்களில் ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக், இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்செல்லுடன் இணைந்து வாய்ஸ் அப்டேட்டை வழங்குகிறது.

இதுகுறித்து ஏர்செல் நிறுவன உயர் அதிகாரி குர்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் ‌மொபைல்போனில் வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் தங்களது குரலை பதிவு செய்து பேஸ்புக்கில் அப்டேட் செய்தால், இந்த பதிவு எஸ்எம்எஸ் மூலம் அவருடைய பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அவர்களும் இதே முறையில் அவருக்கு பதிலளிக்கலாம். இந்த சேவைக்கு இண்டர்நெட் பயன்பாடு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொத்தம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேஸ்புக்கில் சங்கமித்துள்ள நிலையில், இந்த கைகோர்ப்பு தங்கள் நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும் என்பதில‌் எந்த சந்தேகமுமில்லை என்று ‌அவர் தெரிவித்துள்ளார்.

Solar cap: மின்விசிறிகள் பொருத்தப்பட்ட தொப்பிகள்

கொளுத்தும் வெயிலில் தொப்பி அணிந்து சென்றாலும் வெப்பம் தாங்கமுடியலயா? கவலையை விடுங்கள் தொப்பிக்குள்ளையே மின்விசிறி மூலம் காற்று வாங்கிகொண்டு ஐாலியா நீங்க எங்கேயும் எந்த பெரிய வெயிலிலும் போய்வரலாம்.

இதற்கு பெயர் Solar cap. சோலார் மூலமே அச்செயற்பாடு சாத்தியப்படுகிறது. அதாவது நாம் அணியும் தொப்பியின் மேல் சிறிய அளவிலான சோலார் பொருத்தப்பட்டிருக்கும்.

அந்த சோலாரில் சுரிய ஒளி படும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தொப்பியின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய அளவிலான மின்விசிறியை இயக்க உதவுகிறது.

இதற்கு அமைவாக தொப்பியின் முன்பகுதியில் காற்று உள்வரக்கூடியவாறு இடைவெளி விடப்பட்டிருக்கும்

பெண்களால் ஆண்கள் எளிதில் ஈர்க்கப்படுவது ஏன்?

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோன்னு தெரியலை என்பார்கள்.

இதற்கு காரணம் பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான். இதனால் தான் ஆண்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும். இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள் மற்றும் புசிக்கிறார்கள்.

ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்

டவர் இல்லாமல் செயல்படும் செல்போன்கள் கண்டுபிடிப்பு

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும்.

ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.

2011- ன் புத்தம் புதிய வரவுகள்!

ஆண்டுதோறும் ஒரு முறை, உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறும். இதனை "Consumer Electronics Show" என அழைக்கின்றனர். இந்த ஆண்டு லாஸ்வேகாஸ் நகரில் இந்த கண்காட்சி நடைபெற்றது.

இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் அவற்றிற்கான விற்பனை உரிமையினைப் பெற போட்டி போடுவார்கள்.

மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம்.

1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது.

இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம்.

2. ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம்.

இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும்.

3. மெமரி: இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம்.

சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது.

4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது.

17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம்.

இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான்.

Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும் சாதனம் போலத் தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன

Cricket Live Score...