வாகனத்தில் இணைக்கப்படும் ஒரு கருவி, கணினியில் பைன் செக்யூர் என்ற மென்பொருள் உதவியுடன், வாகனம் எங்கு செல்கிறது என்பதை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணித்து தகவல்களை அனுப்பும்.
இதுபற்றி எம்ஃப்ரஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சைலேந்திரா பன்சால் கூறுகையில், இந்த மென்பொருள் கூகுள் வரைபடத்தின் உதவியுடன், வாகனம் எந்த இடத்தில் இருக்கின்றது. எந்த சாலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கனிணி திரையில் துல்லியமாக காண்பிக்கும் என்று தெரிவித்தார்.
அதேபோல் விபத்து அல்லது நெருக்கடியில் வாகனம் சிக்க நேர்ந்தால், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் பொத்தானை ஓட்டுநர் அழுத்தினால் போதும், வாகன உரிமையாளருக்கு மின்னஞ்சல் அல்லது செல்போன் குறுந்செய்தி மூலம் எச்சரிப்பதற்கும் இந்த மென்பொருள் வகை செய்யும் என்றார் அவர்.
நீண்ட தூரம் சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள், பயணிகள் பேருந்துகள், டாக்ஸி, அவசரத் தேவையான காவல்துறை வாகனங்கள், தீயணைப்புத்துறை, மருத்துவ ஊர்திகள், ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு இந்த மென்பொருள் உபயோகமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏமன், நைஜிரியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.
No comments:
Post a Comment