
கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவன ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட போன்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் போட்டியிடும் வகையில் மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் நோக்கியா சேர்ந்துள்ளது.
இன்டர்நெட் பிரவுசிங், சமூக இணையதள தொடர்பு உட்பட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
மேலும் ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து வருவதாலும் இதன் விற்பனை உயர்ந்துள்ளது. அதை பயன்படுத்தி கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. பெரும்பாலான நிறுவனங்கள் இதை பயன்படுத்தி செல்போன்கள் தயாரித்து வருகின்றன.
எனவே இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் செல்போன்களை தயாரிக்க நோக்கியா முடிவு செய்துள்ளது.
நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீபன் எலோப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மைக்ரோசாப்டுடன் இணைவது நிறுவனத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சமீபத்தில்தான் செல்போன் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment