kandee0702

Friday, March 4, 2011

இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை

சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த பிரான்கோபர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய கருவி மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள இருமல் குறித்த விவரங்களை அறியலாம் என கூறப்பட்டாலும், மருத்துவ சமூகத்தினர் இதன் சேவை குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர்.

ஜேர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் உள்ள ஆய்வாளர்கள் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் முதல் தானியங்கி இருமல் கண்டறியும் சேவையாக இந்த புது கண்டுபிடிப்பு உள்ளது. ஆய்வாளர் கோட்சும், அவரது குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து இந்த புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் கூட்டம் நிறைந்த ஹம்பர்க் மற்றும் ஓல்டன்பர்க் வீதிகளில் சென்றவர்களின் மாதிரிகளை பதிவு செய்திருந்தார். இந்த புதிய மென்பொருள் கருவி மூலம் 80 சதவீத முடிவுகள் சரியானவையாக உள்ளன என்று கோட்ஸ் தெரிவித்தார். தினமும் 200 அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Cricket Live Score...