
மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயை ஜேர்மனியை சேர்ந்த ஆலியோஸ் என்ற விஞ்ஞானி கடந்த 1906ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து கைத்தொலைபேசியில் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை கைத்தொலைபேசிகள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.
இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கைத்தொலைபேசியில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
No comments:
Post a Comment