
பலவிதமான அலைவரிசையில் இதமான இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் பறவைகளின் சப்தம் போன்றஇயற்கை ஒலிகளைக் கொண்டு இந்த ரிங்டோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கேட்பவர்கள் சோகமாய் இருந்தாலும் சுறுசுறுப்படைகிறார்கள்.
சோம்பலாய் இருந்தால் குதூகலம் அடைகிறார்கள். தாலாட்டு கேட்பதுபோல விரைவில் தூக்கம் தூண்டப்ட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள். ஜப்பானில் தற்போது அறுவடைக்காலம். இதனால் ஏற்படும் வைக்கோல் மற்றும் தூசு அழற்சியை இந்த ரிங்டோன்கள் கட்டுப்படுத்துகிறது.
வேலைக் களைப்பால் பொலிவிழக்கும் தொழிலாளர்களின் முகங்களையும் இந்த ரிங்டோன்கள் கிளர்ச்சி பெறச் செய்கின்றன. எனவே இந்த ரிங்டோன்கள் ஜப்பானில் சக்கைபோடு போடுகின்றன
No comments:
Post a Comment