
ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன. Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.
நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன. இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன.
No comments:
Post a Comment