
பிரஸ் மார்ட் மீடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தன் போன்களில் செய்திகளைத் தர மோட்டாரோலா நிறுவனம் திட்டமிடுகிறது. மோட்டோ வி.இ. 66, மோட்டோ சர்ப் ஏ 3000 மற்றும் மோட்டோ ரோக்கர் இ.எம். 35 ஆகிய போன்களில் இந்த வசதி முதலில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த போன்களில் உள்ள "Daily News” என்ற லிங்க்கில் கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் இலவசமாக செய்திகளைப் பெறலாம். இதற்கு மொபைல் சேவையில் ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் சில செய்தித் தாள்களின் இணைய பதிப்புகளையும் போனில் வாசிக்கலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ், ஏஷியன் ஏஜ் மற்றும் டெக்கான் கிரானிகல் ஆகிய பத்திரிக்கைகள் இவ்வகையில் தற்போது படிக்கக் கிடைக்கின்றன. தற்போதைய உலகம் தகவல்களைப் பெறும் வேகத்திலேயே இயங்கிவருகிறது. அந்நிலையில் மொபைல் போன்களிலேயே செய்தியும் தகவல்களும் கிடைத்தால் அது நம் முன்னேற்றத்தை முடுக்கிவிடும் வகையில் இருக்கும். இவ்வகையில் நியூஸ் ஆன் தி மொபைல் என்பது முதன் முதலாக மோட்டாராலோ போனில் தரப்படுகிறது.
No comments:
Post a Comment