kandee0702

Tuesday, April 27, 2010

pattern image

Pattern image ஆனது ஒரு படத்தில்
குறிப்பிட்ட இடத்தை - குறிப்பிட்ட
நபரை தேர்வு செய்து அதை அதிக
எண்ணி்க்கையில் சுலபமாக
நிரப்ப நமக்கு உதவுகின்றது.அதற்கு நாம்
மானையும் மயிலையும்
(மானாட மயிலாட அல்ல)
எடுத்துக்கொள்ளலாம்.
முதலில் மான் படத்தை எடுத்துக்
கொண்டுள்ளேன்.

இதன் image அளவு அகலத்தில்
6.667 மற்றும் உயரத்தில்
8.889 அங்குலத்தில் உள்ளது.

இதில் அதன் முகம் மட்டும்
நான் தேர்வு செய்துள்ளேன்.
முன்பே சொன்னது போல்
மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter
தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ
ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த
மானை பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு மேற்கண்டவாறு படம்
கிடைக்கும். இனி பழைய படத்தை
முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில்
தலை மட்டும் உள்ள மான கிடைக்கும்.
அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம்
உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.
இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது
மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

அதில் உள்ள Define Pattern
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கொடுங்கள். இப்போது
நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின்
படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள்.
நான் அகலத்தில் 10 அங்குலமும்
உயரத்தில் 12 அங்குலமும் வைத்து
புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன்.
இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில்
Pattern தேர்வு செய்து பின் Custom Pattern
எதிரில்உ ள்ள ரேடியோ பட்டனை கிளிக்
செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு
ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த
மானின் படம் முதலில் இருக்கும்.
அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே.
கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில்
என்ன நடக்கின்றது என பாருங்கள்.

ஒரு மான் பாருங்கள் - 20 மானாக
வந்து விட்டது. இதைப்போல்
இந்த மயிலை பாருங்கள்.
மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.
இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.
வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை
குறைத்துள்ளேன். படம் கீழே..

இதையும் Edit -Define Pattern -O.K.
கொடுத்தேன். புதிய விண்டோ
ஓப்பன் செய்தேன். அதில்
மானை நிரப்பியவாறு மயிலையும்
நிரப்பினேன்.
படத்தை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி
பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

Magic Wand Tool

நான்சாதாரணமாக இந்த புகைப்படத்தை
எடுத்துள்ளேன். இந்த பெண்ணின் பின் புறம் ஒரு ஏரியோ ஆறோ உள்ளது.
அதில்தூரத்தில் படகும் செல்வதை காணுங்கள். இப்போது
(Magic Wand Tool ) டூல் கொண்டு
இந்த தண்ணீரை கிளிக் செய்து டெலிட் அழுத்தியதும்
உங்கள் பின்புற கலர் நிறத்துடன்(நான் Backround Color
வெள்ளைநிறம் வைத்துள்ளேன்) படம் இந்த மாதிரி தேர்வாகும்.
இப்போது Layer-New Fill Layer - Pattern என
கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் Pattern ஆக எந்த படம் வைத்துள்ளீர்களோ
அதை தேர்வு செய்யுங்கள்.
நான் இந்த அருவியை Pattern ஆக தேர்வு செய்துள்ளேன்.

இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும். இதில் உள்ள
ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் படத்தை ஒழுங்கு
செய்துகொள்ளலாம்.அல்லது மூவ் டூல் கொண்டு படத்தை
வேண்டிய இடத்தில் நகர்த்திக்கொள்ளலாம்.
இப்போது அந்த பெண்ணின் பின்உள்ள ஆறு ஆனது
அழகிய அருவியின் பின்புலமாக மாறுவதை காணலாம்.
ஸ்லைடரை ஒழுங்காக நகர்த்தியபின்வந்த படம்
கீழே:-
மற்றும் ஒரு அருவியின் பின்புலத்தில் கொண்டுவந்த படம்
கீழே:- அவ்வளவுதாங்க. ரொம்ப சிம்பிளாக இருக்கு இல்ல...நீங்களும்
உங்களுடைய புகைப்படத்தை பின் புறம் உள்ள நிறத்தை
நீக்கி விட்டு வேண்டிய படத்தை வைத்துக்கொள்ளுஙகள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.

முகவரிகளை கடிதத்தின் உறையில் அச்சிட

அலுவலகத்திலும் சரி - பர்சனலாக இருந்தாலும் சரி நாம்
நமது கடிதத்தின் முகவரியை கவரில் சுலபமாக
பிரிண்ட் செய்யலாம். அதில் நமது புகைப்படத்தையும்
இணைக்கலாம். முதலில் வேர்ட் 2003 -ஐ திறந்து
கொள்ளுங்கள். அதில் கீழ்கண்டவாறு Tools-
Letters and Mailings-Envelops and Lables -என
திறந்துகொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Delivery Address -ல் நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
யை தட்டச்சு செய்யுங்கள். அடுத்து உங்கள் முகவரியை
தட்டச்சு செய்யுங்கள்.அடுத்து அதில் உள்ள Envelope
Options கிளிக் செய்து அதில் உள்ள Envelop Size-ல்
உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுங்கள்.
அடுத்துள்ள Delivery address ல் உள்ள Font-ஐ கிளிக்
செய்து அதில் உங்கள் விருப்பமான பாண்ட் தேர்வு
செய்யுங்கள். அடுத்து அதன் எதிரில் உள்ள From Left
மற்றும் From Top ல் உள்ள அளவை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் அளவுகளை கொடுத்தவுடன் டெலிவரி அட்ரஸ்
நகர்வகை பிரிவியுவில் காணலாம்.
அடுத்து பிரிண்டிங் ஆப்ஸன் தேர்வு செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான அளவை
கிளிக் செய்யுங்கள்.
கடைசியாக Add to Document கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பிரிண்ட் பிரிவியு பார்த்து பின் பிரிண்ட் கொடுங்கள். அவ்வளவு
தான் கவர் ரெடி. டெஸ்டிங்க்காக இரண்டு மூன்று முறைகள் முயற்சி
செய்து பாருங்கள். சரியாக வரும்.

இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம்

இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
இதில் சுமார் 20 PSD பைல்கள் உள்ளது. இதை
தனித்தனியாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

பெயரில் புகைப்படம் கொண்டுவர:-

போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அதில் முதலில நீங்கள்
விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துஉள்ளேன்.
இப்போது டூல்ஸ் மெனுவில் 16 ஆவதாக உள்ள Horizontal Type
Mask Tool தேர்வு செய்துகொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.(T -எழுத்தானது புள்ளி புள்ளியாக காணப்படுகின்றதே
அந்த டூல்-வரிசையில் மூன்றாவதாக உள்ளது)இப்போது மேலே உங்கள் பாண்ட் வகையினையும் பாண்ட்
அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
இப்போது கர்சரை படத்தில் தேவையான இடத்தில் வைத்து
எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். நீங்கள் கர்சர் வைத்ததும்
படத்தில் நிறம் மாறிவிடுவதை கவனியுங்கள்.

இப்போது மார்க்யு டூல் கிளிக் செய்யுங்கள்.படம் பழையநிறத்திற்கு வந்துவிடும். நமது பெயரானது பு்ள்ளிகளுடன்காணப்படும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இப்போது Edit சென்று Copy கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள
புகைப்படத்தை பாருங்கள
மீண்டும் பைல்மெனு வந்து நீயு கிளிக் செய்யுங்கள் .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அருமையாக வரும்.

இன்றைய PSD புகைப்படம்

இன்றைய PSD புகைப்படம் டிசைன் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:- இந்த டிசைன் பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.

வைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்

நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.


இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.


இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.


வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட http://www.winpatrol.com/ என்ற தளத்திற்குச் செல்லவும்.

வைரஸ் வந்து விட்டதற்கான அறிகுறிகள்

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது? நிச்சயம் நான் வந்துவிட்டேன் என்று இப்போதெல்லாம் வைரஸ் பைல் அறிவிப்பு வருவதில்லை.ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது.


அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம். வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.


2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.


3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.


4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.


5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா? வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.


7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.


முதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.

ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்

நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files .


இது கிடைக்கும் தளத்தின் முகவரி http://www.undeleteunerase.com/download.html.ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நோக்கியா டிப்ஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகளுக்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன. அண்மைக் காலத்தில் வெளியாகிப் புழக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான நோக்கியா போன்களில் இது செயல்படும். இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் நோக்கியா போன்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.


#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.


#3283# – உங்கள் மொபைல் செட் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அந்த நாளை அறிய.


#746025625# – சிம் மூலம் ஓடிக் கொண்டிருக்கின்ற கடிகாரத்தினை நிறுத்த.


#67705646# – மொபைல் ஆப்பரேட்டரின் லோகோ திரையில் தோன்றுகிறதா? அதனை நீக்க விரும்புகிறீர்களா? இந்த கோட் எண்களை அமைத்து அழுத்தவும்.


#73# – விளையாடிக் கொண்டிருக்கும் கேம்ஸில் பெற்ற ஸ்கோர்களை புதியதாக செட் செய்திடவும் போன் டைமரை மாற்றவும் இது பயன்படும்

xp சில டிப்ஸ்

விண்டோஸ் எக்ஸ்பி என்பது இன்று பரவலாகப் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இந்த சிஸ்டம் குறித்து ஒரு சிலரே அறிந்த பயனுள்ள சில விஷயங்களை இங்கு காணலாம்.



1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.



2. நீங்கள் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் தொட்டிக்குத் தான் செல்கிறது. அப்படிச் செல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஷிப்ட் கீ அழுத்தி அழிக்க வேண்டியதிருக்கிறது. இதற்குப் பதிலாக இந்த ரீசைக்கிள் பின் பிசினஸே வேண்டாம்; நான் மொத்தமாக அழிக்கப்பட வேண்டியதைத்தான் அழிக்கிறேன். நான் விரும்பும்படி கம்ப்யூட்டர் பைலை அழிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழ் குறித்துள்ளபடி செட் செய்திடவும். ஸ்டார்ட் மெனு சென்று அதில் ரன் விண்டோவில் gpedit.msc என டைப் செய்திடவும். அதன்பின் User Configuration, Administrative Templates, Windows Components, Windows Explorer என வரிசையாகச் செல்லவும். இதில் Do not move deleted files to the Recycle Bin etting என்ற இடத்தைப் பார்த்து செட் செய்திடவும். இந்த விண்டோக்களில் சுற்றி வந்தால் இன்னும் சில செட்டிங்குகளுக்கான இடங்களைப் பார்க்கலாம். ஆனால் மிகக் கவனமாக செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லையேல் கம்ப்யூட்டரையே முடக்கிப் போடும் அளவிற்கான சில செட்டிங்குகளில் கை வைத்து விடுவீர்கள். ஜாக்கிரதை!



3. எக்ஸ்பி சிஸ்டம் ஸிப் பைல்களை தனி போல்டர்களாகத்தான் கையாளுகிறது. வேகமாக இயங்கும் பிராச்சர் கொண்ட கம்ப்யூட்டர்கள் என்றால் சரி; ஆனால் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர் எனில் இது கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயமாக இருக்கும். எனவே அத்தகைய கம்ப்யூட்டர்களில் இந்த ஸிப் பைல்களைத் தனி பைல்களாகவே எக்ஸ்பி சிஸ்டம் நடத்தும்படி அமைக்கலாம். டாஸ் கமாண்ட் விண்டோ பெற்று கமாண்ட் லைனில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்தால் போதும். இதன் பின் ஸிப் பைல்கள் அனைத்தும் தனி பைல்களாகவே சேவ் செய்யப்படும். மீண்டும் மனது மாறி அவை போல்டர்களாகவே சேவ் செய்யப் பட்டால் பரவாயில்லை என முடிவு செய்தால் மீண்டும் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் regsvr32 zipfldr.dll என டைப் செய்து மாற்றி விடலாம்.

தொடங்கியது விண்டோஸின் "விஸ்டா சகாப்தம்"


ஏறத்தாழ ஆறு ஆண்டுகள், 600 கோடி டாலர்கள், 5000 கம்ப்யூட்டர் புரோகிராமிங் வல்லுநர்கள் (இந்தியர்கள் 300 பேர்) எனப் பல்வேறு வகைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் விஸ்டா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுவிட்டது.


நிறுவனங்களுக்கான பதிப்பு சென்ற டிசம்பரில் வெளியிடப்பட்டாலும் பலநிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வியப்பான செய்தியே. தற்போது வந்திருக்கும் பொதுமக்களுக்கான விஸ்டா பதிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் கம்ப்யூட்டரை மக்கள் விரும்பினாலும் அதற்கென தற்போது விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் கம்ப்யூட்டரின் விலைக்கு மேலாக 5% முதல் 6% வரை கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.


முற்றிலும் புதிய சில வசதிகள் இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கின்றன என்று பல மாதங்களுக்கு முன்னரே இப்பகுதியில் எழுதி இருந்தோம். ஹார்ட்வேர் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏரோ கிளாஸ் எனப்படும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ், கூடுதலான வழிகளில் தேடி அறியும் வசதி, புதிய ஆடியோ சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு போன்ற விஸ்டா தரும் வசதிகள்பெரும்பாலும் புதியனவாகத் தான் இருக்கின்றன. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் கம்ப்யூட்டரில் பதித்து இயக்க ஹார்ட்வேர் சாதனங்கள் அதற்கிணையான வகையில் மேம்படுத்தப்பட வேண்டும்.


இதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளிவந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஹார்ட்வேர்தேவைகளைக் காட்டிலும் தற்போது கூடுதலாகவே தேவை இருக்கும் என கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் எச்.பி. மற்றும் டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விஸ்டா பதிந்து இயக்கக் கீழ்க்காணும் குறைந்த பட்ச அளவிலான ஹார்ட்வேர் சாதனங்களுடன் ஒரு கம்ப்யூட்டர் வடிவமைக் கப்பட்டிருக்கவேண்டும். 800 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சிப், குறைந்தது 20 கிகாபைட் காலி இடம் உள்ள ஹார்ட் டிஸ்க், குறைந்தது 128 எம்பி விடியோ ராம் கொண்ட கூடுதல் திறனுடன் கூடிய கிராபிக் கார்ட் ஆகியவை சில அடிப்படைத் தேவைகளாகும்.


முழுமையான அளவிலான விஸ்டா பதிப்பு ரூ.16,000 க்கும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட விஸ்டா பதிப்பு ரூ.8,000க்கும் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் விஸ்டா சிஸ்டத்தினை எதிர்பார்த்தே அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இவர்கள் விண்டோஸ் விஸ்டாவிற்கு மாறிக் கொள்ள பிரச்னை இருக்காது. பழைய எக்ஸ்பி கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர்கள் தங்கள் மெமரியினை கூடுதலாக்க குறைந்த அளவில் பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.


விண்டோஸ் விஸ்டாவின் இன்னொரு சிறப்பம்சம் இது 18 பன்னாட்டளவிலான மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது தான். இந்தியாவில் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.விரைவில் தெலுங்கு மற்றும் மராத்தி உட்பட 13 இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட உள்ளது. ஹைதராபாத் நகரில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆய்வு மையத்தில் 3000 வல்லுநர்கள் விண்டோஸ் விஸ்டா வடிவமைப்பில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ரிமோட் இணைப்பு, பைல்கள் பேக்கப் மற்றும் பைல் சிஸ்டம் பயன்பாடுகள் ஆகியவற்றில் இவர்களின் திறமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாதனை படைத்த பயர்பாக்ஸ்


சென்ற ஜூன் 17ல் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பதிப்பு 3 வெளியானது. கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், புதிய பல வசதிகள், தோற்றப் பொலிவு, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் முறை எனப் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியான இந்த தொகுப்பின் வெளியீடும் சாதனை படைத்துள்ளது.


வெளியான நாளன்று அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம் என்ற பெயரை எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இதற்கான ஏற்பாடுகள் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் மேற் கொள்ளப் பட்டு வெற்றிகரமாக இச்சாதனை மேற் கொள்ளப்பட்டது.சாதனை தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எக்கச்சக்க எண்ணிக்கையில் டவுண்லோட் செய்தனர். எந்த நொடியிலும் இறக்கம் செய்வது நிற்கவே இல்லை.


குறிப்பிட்ட நாளில் 83 லட்சம் பேர் டவுண்லோட் செய்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்தியாவிலிருந்து 2 லட்சத்து 57 ஆயிரத்து 353 பேர் பங்கு கொண்டு இந்த பிரவுசர் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தினார்கள். அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 50 லட்சத்து 18 ஆயிரத்து 241 பேர் டவுண்லோட் செய்தனர்.பிரிட்டனில் 7 லட்சத்து 26 ஆயிரத்து 232 பேர் கலந்து கொண்டனர். இப்படியே உலகெங்கும் உள்ள நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் ஆவலுடன் கலந்து கொண்டு இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளனர். எந்த எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்ற தகவல்களுக்கு http://www.spreadfirefox.com/enUS/worldrecord/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

Cricket Live Score...