kandee0702

Sunday, May 16, 2010

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

நண்பர்களே புதிய குரோமெ 5 பீட்டா பதிப்பு வெளிவந்திருக்கிறது அதை தரவிறக்க இங்கே செல்லுங்கள் புதிய பீட்டா பதிப்பில் தேவையில்லாத ப்ளக் இன்ஸ் (Plug ins) களை நிறுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதை செய்ய உங்களிடம் புதிய குரோம் 5 பீட்டா பதிப்பு நிறுவி இருக்க வேண்டு.


முதலில் உங்கள் குரோம் வலை உலாவியில் அட்ரஸ் பாரில் about:plugins என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
இப்பொழுது உங்கள் குரோம் பிரவுசரில் நிறுவி உள்ள அனைத்து பிளக் இன்களும் காட்டப்படும். அனைத்து பிளக் இன்களுக்கும் கீழே Disabled என்ற பட்டந் இருக்கும் அதை கிளிக் செய்வதுன் மூலம் நிறுத்தி வைக்கலாம். வேண்டும் என்கிற பொழுது இதே போல சென்று Enabled செய்து கொள்ளுங்கள்.

நிறைய நண்பர்கள் போட்டோஷாப் கற்றுக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது என்கிறார்கள். இதை நிறைய பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது எனவும் இதனால் போட்டோஷாப்பிற்கு பதில் வேறு ஏதும் மென்பொருள் இருக்கிறதா போட்டோஷாப் வேலைகள் அனைத்தும் செய்ய என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக ஒரு இலவச போட்டோஷாப் போன்ற ஒரு மென்பொருள் இதன் பெயர் ஜோனர் போட்டோ ஸ்டூடியோ.


இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடிய வேலைகள் சிலவற்றை பட்டியலிடுகிறேன். டேப் முறையில் படங்களை பார்க்கலாம்.

உங்கள் புகைப்படங்கள் எந்த ஒரு வன்பொருளிலிருந்தும் நேரடியாக இறக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமாரவில் இருந்து நேரடியாக இந்த மென்பொருள் மூலம் படங்களை இறக்கி எடிட் செய்யலாம்.

உங்கள் போட்டோவில் Exif மற்றும் Meta டேட்டாக்களை எடிட் செய்யலாம்.

கூகிள் எர்த்திற்கு GPS கோப்பாக Import மற்றும் Export செய்ய முடியும்.

தேடு பொறி மிகவும் புகைப்படங்களை வேகமாக தேடி தரும்.
White Balance மற்றும் Satuaration போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

ரெட் ஐ மற்றும் கிளோன் ஸ்டாம் உபயோகபடுத்த முடியும் இந்த மென்பொருளில்.
போட்டோ கோப்புகளை வேறு வகை கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் எடிட் செய்த போட்டோக்களை பிளிக்கர் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு நேரடியாக தரவேற்றலாம்.
விதவிதமான காலண்டரில் உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள் அலல்து உங்கள் குடும்ப புகைப்படங்களை இணைக்கலாம்.

பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களாக மாற்றலாம்.

இதனுடன் ஒரு உதவிக் கையேடும் உள்ளது.
மென்பொருள் தரவிறக்கச் சுட்டி
இது விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா/7 (32Bit / 64 Bit) போன்றவற்றில் மட்டுமே இயங்கும். விண்டோஸ் 2000ல் இயங்காது.
குறைந்தபட்சம் 512எம்பி நினைவகம் வேண்டும்
ப்ரோஸஸர் 300 MHZ குறைந்தபட்சம் இருக்க வேண்டும்

மொபைல் - சில தகவல்கள்

நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.


ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.


அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.


உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.


தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.


பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

keyboard


கம்ப்யூட்டர் கீ போர்டில் மேலாக அமைந்துள்ள எப் கீகள் தான் பங்சன் கீகள். இவற்றைப் பலர் பயன்படுத்துவதே இல்லை. அதிக பட்சம் ஹெல்ப் வேண்டியதிருந்தால் எப்1 மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த கீகளின் சிறப்பு பயன்பாட்டினை மனதில் கொண்டால் வெகு எளிதான வேகமான செயல்பாட்டிற்கு இவை எப்படி உதவுகின்றன என்று கண்டு கொண்டு அவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.
பங்சன் கீகள் பலவகையான பயன்பாட்டிற்குப் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்த புரோகிராம் இயங்குகிறதோ அவை சார்ந்தவையாக இருக்கும். அதாவது அந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள் இந்த கீகளை மனதில் கொண்டு சில செயல்பாடுகளை ஒவ்வொரு கீக்கும் வைத்துள்ளனர். பல வேளைகளில் இவை ஷார்ட் கட் கீகளின் தொகுப்பில் ஒரு கீயாக இந்த பங்சன் கீகள் பயன்படுகின்றன. CTRL, ALT, மற்றும் Shift கீகளுடன் இணைந்து இயக்கப்படும் கீகளாகவும் இவை பயன்படுகின்றன. இங்கு இவற்றின் அடிப்படை செயல்பாடுகளைக் காணலாம்.
F1
இதனை அழுத்தினால் அப்போது இயங்கும் புரோகிராமின் ஹெல்ப் பைல் நமக்குக் கிடைக்கும்.இதைச் சோதனை செய்திட உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் இடது கிளிக் செய்திடவும். பின் எப்1 அழுத்தவும். ஹெல்ப் பைல் உங்களுக்குக் கிடைக்கும். அதில் பல்வேறு வகையான ஹெல்ப் சங்கதிகள் கிடைப்பதனைப் பார்க்கலாம்.
F2
இது பெரும்பாலும் பைல் பெயரினை மாற்றி அமைத்திட உதவுகிறது. பைல் அல்லது போல்டர் ஒன்றில் ஒரு கிளிக் செய்திடவும். பின்னர் F 2 கீயை அழுத்தினால் அந்த பைல் அல்லது போல்டரின் பெயரை மாற்றும் வசதி தரப்படும். நாம் சில வேளைகளில் பைல்களை ஸிப் செய்வோம். அப்போது குறிப்பிட்ட வழிகளில் பைல்களுக்குப் பெயரிட எண்ணுவோம். அப்போது இது மிகவும் உதவும். பைல் மெனு பெற்று பின் ரீநேம் அழுத்திச் செய்வதனைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு இந்த கீ உதவுகிறது.
F3
இந்த கீ விண்டோஸ் இயக்கத்தில் தேடுதல் செயல்பாட்டினை மேற்கொள்ள உதவுகிறது. ஆனால் மற்ற புரோகிராம்களில் இது வெவ்வேறு செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சொல் தேடுதலில் இந்த கீ சிறப்பாக உதவும்.
F4
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த கீ அட்ரஸ் பாரினைத் திறப்பதில் உதவுகிறது. விண்டோஸ் தொகுப்பில் இதனுடன் ஆல்ட் கீயைச் சேர்த்து அழுத்த அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமினை முடிவிற்குக் கொண்டு வர உதவுகிறது. விண்டோஸ் இயக்கத்தை மூடவும் இது இதே வகையில் உதவிடும்.
F5
பொதுவாக இது ரெப்ரெஷ் கீ என்றே அழைக்கப்படுகிறது. உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட இந்த கீயைப் பயன்படுத்தலாம்.
F6
அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில் ஒவ்வொரு பீல்டுக்கும் இடையே கர்சரைக் கொண்டு செல்ல இந்த கீ உதவுகிறது. விண்டோஸில் கச்ணஞு களுக்கு இடையே செல்ல இதனைப் பயன்படுத்தலாம்.
F7
இது புரோகிராம் சம்பந்தப்பட்டது. அந்த அந்த புரொகிராம்களுக்கு ஏற்றவகையில் இது செயல்படும். எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பைலைத் திறந்து இந்த கீயைப் பயன்படுத்திப் பார்த்து இதன் செயல்பாட்டினைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
F8
இந்த கீயின் முதன்மைச் செயல்பாடு விண்டோஸ் இயக்கத்தை சேப் மோடில் கொண்டு வர உதவுவதாகும்.
F9
இதுவும் புரோகிராமுடன் இணைந்து மட்டுமே செயல்படும் கீயாகும். நான் இதனை சோம்பேறி கீ என்று அழைப்பேன். ஏனென்றால் அவ்வளவாக இதன் செயல் பாடு இருப்பதில்லை. நீங்கள் வேர்ட் பயன்படுத்துகையில் இந்த கீயினைப் பயன்படுத்தினால் செலக்ட் செய்யப்பட்ட பீல்ட் அப் டேட் செய்யப்படும்.
F10
இந்த கீ புரோகிராம்களில் மெனு (File, Edit, View, Etc.). பாரினை அணுகப் பயன்படுகிறது.
F11
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் முழுத் திரையில் இணையப் பக்கங்களைக் காண இது பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ("KIOSK" mode) என அழைக்கின்றனர்.
F12
இன்னொரு சோம்பேறி. ஒரு சில புரோகிராம்கள் மட்டும் இந்த கீக்கு சில செயல்பாடுகளை அளித்துள்ளன. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் இது Save As கட்டளைக்குப் பயன்படுகிறது.

Cricket Live Score...