kandee0702

Sunday, June 26, 2011

இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

இணையதளங்களை கிளிக் செய்வது என்றால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து வைத்து கொள்வது. இணைய மொழியில் இதற்கு ஸ்கிறீன்சொட் என்று பெயர்.

இப்படி இணையதளங்களை ஸ்கிறீன்சொட்டாக சேமித்து வைத்து கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருக்கின்றன. நாம் பார்த்து ரசித்த பயனுள்ள தளங்களை குறித்து வைத்து கொள்ள இது சுலபமான வழி. அதே போல நாம் பயனுள்ளதாக நினைக்கும் தளங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் இதுவே சிறந்த வழி.

எத்தனையோ பயன்கள் இருந்தாலும் இணையதளங்களை ஸ்கிறீன்சொட்டாக மாற்றி கொள்வது அத்தனை எளிதல்ல. அதற்கென பிரத்யேக வழிகளையும் குறுக்கு வழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.

வெப்சைட்ஸ் புரோ மற்றும் தம்லைசர் ஆகிய தளங்கள் இணையதள முகவரியை சமர்பித்தால் அவற்றை ஸ்கிறீன்சொட்டாக மாற்றித்தரும் சேவையை வழங்குகின்றன. இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது டிவிஷாட் இணையதளம்.

டிவிஷாட் இனையதளங்களை கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு ப‌கிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. இதுவே டிவிஷாட்டை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது.

டிவிட்ஷாட்டை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. எந்த இணையதளத்தை ஸ்கிறீன்சொட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் தயாராகி விடும்.

இந்த தோற்றத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் அப்படியே நமது நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ளலாம். இணையதள தோற்றத்தை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்தும் கொள்ளலாம்.

இணையதளங்களை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்ல புதிய தளங்களை கண்டு கொள்ளவும் இந்த சேவை உதவுகிறது. அதாவது இந்த தளத்திம் மூலம் பகிரப்படும் தளங்களின் தோற்றம் டிவிட்டர் பதிவுகள் போலவே வரிசையாக தோன்றும்.

இந்த பதிவு தொடரை பார்ப்பதன் மூலம் மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தளங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். பயனாளிகள் வசதிக்காக பகிரப்படும் தளங்கள் தொழில்நுட்பம், வடிவமைப்பு என பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

எனவே புதிய தளங்களை தேடிபார்க்க விரும்புகிறவர்கள் இங்கு பகிரப்படும் ஸ்கிறீன்சொட்களை ஒரு வலம் வந்தால் போதுமானது.

இணையதள முகவரி

உங்கள் கணணியை பாதுகாக்க

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.

இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.

இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.

2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.

3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.

4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.

5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.

6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.

7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.

8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.

இந்த மென்பொருளை நிறுவும் முறை:

நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.

முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.

ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

கணணியில் டீபால்ட் பிரவுசரை மாற்றுவதற்கு

நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம், பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய பிரவுசர்களாகும்.

அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்கப்படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும்.

இந்த வசதி நாம் இந்த மென்பொருளை நிறுவச் செய்யும் போதே கேட்கும். அதை கவனிக்காமல் நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் படித்து பார்க்காமல் Next கொடுத்துக் கொண்டே வந்து விடுவோம். கடைசியில் நாம் நிறுவிய புதிய பிரவுசர் நம்முடைய கணணியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

பயர்பொக்ஸ் பிரவுசரை டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு: இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Options என்பதை க்ளிக் செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் Advanced என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Check now என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பாப் அப் விண்டோவில் Yes என்பதை அழுத்தினால் உங்களுடைய பயர்பொக்ஸ் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

குரோம் பிரவுசரை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு:இதற்கு முதலில் குரோம் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Settings - Options க்ளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ள Make Google Chrome my default browser என்பதை கிளிக் செய்தால் போதும். குரோம் உலவி உங்கள் கணினியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

குரோம் IE உலவியை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு:இதற்கு முதலில் IE உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Internet Options- Programs என்பதை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் விண்டோவில் உள்ள Make Default என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அந்த பட்டனை அழுத்தினால் IE உலவி உங்களுடைய டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

ஒரே நேரத்தில் கணணியின் எழுத்துருக்களை Preview பார்ப்பதற்கு

இணையதள வடிவமைப்பளார்கள் முதல் பட வடிவமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும்.

மொத்தமாக நம் கணணியில் பல எழுத்துருக்கள்(Fonts) இருந்தால் ஒவ்வொரு Font ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்தப் பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது.

எழுத்தின் மேல் விருப்பம் உள்ள அனைவரும் நம் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை ஒவ்வொரு எழுத்துருவாக மாற்றி பார்த்து அதிலிருந்து சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஆகும் நேரம் அதிகம் தான். ஆனால் இனி ஒரே நொடியில் நம் கணணியில் இருக்கும் Fonts Preview ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Loading Fonts என்று இருக்கும் பொத்தானை சொடுகினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் கணணியில் Install ஆகி இருக்கும் Font அத்தனையின் Previewம் காட்டப்படும்.

Watermark என்று இருக்கும் கட்டத்திற்குள் நாம் எந்த வார்த்தைக்கான Preview பார்க்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்தால் போதும் ஒரே நொடியில் நம் கணணியில் நிறுவி இருக்கும் அத்தனை Fontsகளிலும் Preview காட்டப்படும்.

இணையதள முகவரி

சிக்கலுக்கு தீர்வு தரும் Task Manager

உங்கள் கணணி மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய் பின்னர் மீண்டும் இயங்குகிறதா?

பொறுமை இழந்து போய் அவசரப்பட்டு கணணியை மீண்டும் பூட் செய்திடும் செயலில் இறங்க வேண்டாம். இந்த வகை சிக்கலுக்கு விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன.

விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம் கணணியில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம்.

கணணியின் திறனை இதன் மூலம் கண்காணித்து நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம்களை மூடலாம். நெட்வொர்க்கில் கணணியில் இணைக்கப்பட்டு இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பயனாளர்களின் செயல்பாடுகளைக் காணலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம்களையும் இயக்கலாம். கணணியில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவு தான் ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும்.

விண்டோஸ் இயக்கமானது எப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான் நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.

பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். Ctrl-Shift-Esc அழுத்தலாம். Ctrl-Alt-Del அழுத்திப் பின்னர் Start Task Manager இயக்கலாம் அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager தேர்ந்தெடுக்கலாம்.

டாஸ்க் மேனேஜர் விண்டோவில் எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கீழாக கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப்படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.

டாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில் Applications, Processes, Services, Performance, Networking, and Users ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் Applications, Processes, Services ஆகிய டேப்கள் தான் நாம் கணணியில் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டிருக்கின்றன.

முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும் போது Applications டேப் நமக்குக் காட்டப்படும். கணணியில் இயக்கப்பட்டு டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள்(எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்படமாட்டாது.

ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால் அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள End Task பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில் மிக முக்கியமானது அதில் உள்ள Status பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம்கள் "Not Responding" எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம் புரோகிராமினை நிறுத்தலாம்.

டாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு Processes டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன.

இதன் மாறா நிலையில் Image Name (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), User Name (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), Memory (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்) மற்றும் Description (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன.

இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். பயனாளர் எனில் அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில் அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப்படும்.

கணணி மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால் அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் மெமரி டேப் கிளிக் செய்து ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால் அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.

இதே போல Services டேப் மூலம் சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். Stopped or Running இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம். நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம்.

பிரச்னைகள் ஏற்படுகையில் ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில் பிரச்னை தீர்க்கப்பட்டு கணணி வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு அதனை மீண்டும் நிறுவச் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் பல பயன்களைத் தரும் ஒரு சாதனமாகும். பொறுமையாகக் கையாண்டால் பல தீர்வுகளை இதன் மூலம் பெறலாம்.

கைத்தொலைபேசியில் பேசினால் மறதி நோய் மறைந்து போகும்: ஆய்வில் தகவல்

கைத்தொலைபேசியில் பேசினால் மறதி குணமாகும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. "அல்ஷ்கெய் மெர்ஷ்" என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயை ஜேர்மனியை சேர்ந்த ஆலியோஸ் என்ற விஞ்ஞானி கடந்த 1906ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து கைத்தொலைபேசியில் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை கைத்தொலைபேசிகள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கைத்தொலைபேசியில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை

கூகிள் Translate பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளை மாற்ற உதவுகிறது.

இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது.

அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ்[Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.

மொழிமாற்றம் செய்ய:

http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்த வரை அது தானியங்கியாக கண்டுபிடித்து விடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.

தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.

ஓன்லைனிலேயே MP3 கோப்புக்களை கட் செய்வதற்கு

ஓடியோ கோப்புக்கள் பெரும்பாலும் MP3 வடிவிலேயே நம்மிடம் இருக்கும். இந்த வகை கோப்புக்களை நம்முடைய கைத்தொலைபேசிகளிலும் பெரும்பாலும் வைத்திருப்போம்.

நம்மிடம் இருக்கும் MP3 கோப்புக்கள் நீண்டதாக இருக்கும். இதில் குறிப்பிட்ட சிறு பகுதியை மட்டும் தனியாக வெட்டி நம்முடைய கைத்தொலைபேசிக்கு ரிங்க் டோனாகவோ அல்லது மற்ற நண்பர்களுடன் பகிர நினைப்போம்.

இந்த வேலையை செய்ய நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் ஓன்லைனில் இலவசமாக மற்றும் சுலபமாக எப்படி நம்முடைய MP3 கோப்புக்களை வெட்டலாம்.

இந்த தளம் சென்றவுடன் அங்கு உள்ள Open MP3 என்ற பட்டனை அழுத்தி நீங்கள் வெட்ட வேண்டிய MP3 கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்வு செய்த கோப்பு பதிவேற்றம் ஆகி முடிந்தவுடன் கீழே படத்தில் வட்டமிட்டு காட்டி இருக்கும் கர்சர்களை முன்னும் பின்னும் நகர்த்தி உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

சரியான பகுதியை தேர்வு செய்து கொண்டவுடன் அங்கு நீங்கள் தேர்வு செய்துள்ள கோப்பின் அளவும் எந்த நேரத்தில் இருந்து எதுவரை தேர்வு செய்து உள்ளீர்கள் என்ற நேர அளவும் வரும்.

நீங்கள் சரியான இடத்தை தேர்வு செய்ய அதில் உள்ள Play பட்டனை அழுத்தி பாடல் ஒலிக்கும் பொழுது உங்களுக்கான பகுதி வந்ததும் பாடலை pause செய்து உங்கள் கர்சரை அதற்கு நேராக நகர்த்தினால் சுலபமாக இருக்கும்.

முடிவில் சரியான இடத்தை தேர்வு செய்தவுடன் அங்கு உள்ள Cut என்ற பட்டனை அழுத்தினால் போதும். உங்களின் MP3 கோப்பு வெட்டி உங்கள் கணணியில் சேமிக்கப்படும்.

இணையதள முகவரி


கணணி பராமரிப்புக்கு சில ஆலோசனைகள்

உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணணி தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணணியில் தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.

நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணணி வழி தான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம்.

இந்த நிலையில் கணணி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்? நாம் கணணியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது அல்லது நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

கணணியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது? இதுபோன்ற நிலையைத் தவிர்த்து நம் கணணியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கணணிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணணியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் வன்தட்டில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

வைரஸ் ஒழிப்பு மென்பொருளை நிறுவிக் கொள்ளவும்: எந்த ஒரு கணணியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி நிறுவிக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம். சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஓன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை தரவிறக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பயர்வால் நிறுவிக் கொள்ளவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் பயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விடயங்கள் உங்கள் கணணிகளை ஊடுருவதிலிருந்து பயர்வால் தடுக்கும்.

உங்கள் கணணிகளில் உங்களுக்கு தெரியாமலேயே தரவிறக்கம் ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் பயர்வாலுக்கு உண்டு. விண்டோஸ் எக்ஸ்.பி மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஓபரேட்டிங் சிஸ்டம்கள் பயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.

டீப்ராக் செய்யவும்: டீப்ராக்மென்டேஷன் என்பது நம் கணணியின் வன்தட்டை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணணியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை நிறுவிக் கொள்கிறோம் அல்லது நிறுவியவற்றை ரத்து செய்கிறோம். கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.

வன்தட்டை சுத்தம் செய்யவும்: உங்கள் கணணியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் சுவடுகளையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.

இணையதள தரவிறக்கங்களை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை தரவிறக்கம் செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை தரவிறக்கம் செய்வோம். இதிலெல்லாம் கணணியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் தரவிறக்கம் செய்து கொள்வது நலம்.

பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் வன்தட்டில் அதிக இடம் கிடைக்கும். கணணியின் செயல்திறன் அதிகரிக்கும்.

கணணியை சுத்தம் செய்யவும்: கணணியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணணியை வெப்பம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.

பயர்பொக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் புதிய நீட்சி FxChrome


இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பொக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது.


இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பொக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.

பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் குரோமின் இடைமுகத்தை விரும்பினால் அதற்கு ஒரு நீட்சி உள்ளது. இதன் பெயர் FxChrome. இதனை பயர்பாக்ஸ் உலவியில் நிறுவினால் பயர்பொக்ஸ் குரோமின் தோற்றத்தைப் போல மாறிவிடும். மெனுக்கள், டேப்கள், விண்டோக்கள், பட்டன்கள் போன்றவை குரோமில் இருப்பதைப் போல தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் பயர்பொக்சில் தான் இருப்பீர்கள்.

குரோம் போலவும் வேண்டும் என வித்தியாசமாக நினைத்தால் உங்களுக்கு இந்த நீட்சி பயன்படும். ஆனால் இதனைப் போட்டு விட்டு குரோம் போல வேகம் வரவில்லை என்று சொல்லக் கூடாது. முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த நீட்சி பயர்பொக்ஸ் பதிப்பு 4 இல் தான் செயல்படும்.

Cricket Live Score...