kandee0702

Thursday, December 26, 2013

விண்டோஸ் ப்ளே ஸ்டோரில் Temple Run 2

அன்ரோயிட் இயங்குதளத்தினைப் போன்று தற்போது Windows Phone இயங்குதளமும் பிரபல்யம் அடைந்து வருகின்றது.
இவ் இயங்குதளமானது ஐரோப்பாவில் பத்து வகையான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
Angry Birds Go, 500px போன்ற ஹேம்களே இவ் இயங்குதளத்தில் பிரபல்யமாக காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது மிகவும் பிரபலமான ஹேமான Temple Run 2 இனை, பயன்படுத்தக்கூடிய வசதியை பயனர்களுக்கு வழங்கும் பொருட்டு Windows Phone Store இல் இந்த ஹேம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

விற்பனையில் சாதனை படைத்துள்ள Xbox one

இப்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஒரு கேம் கேஜட்டை(Game Gadget) வெளிவிட்டுள்ளது.
இதன் பெயர் எக்ஸ் பாக்ஸ் ஒன்(Xbox one), இது வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 1 மில்லியன் விற்பனையாகி உள்ளது.
அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட டைட்டன் என்ற நிறுவனம் தான் இந்த எக்ஸ் பாக்ஸ் ஒன்னை வெளியிட்டுள்ளது.
விற்பனையில் சாதனை படைத்துள்ள எக்ஸ் பாக்ஸை, சிறுவர்கள் அதிகம் விரும்பி வாங்கி கொண்டிருப்பதால் இன்னும் பல்வேறு நாடுகளில் வெளியிடப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் Kim DotCom அப்பிளிக்கேஷன்

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் கிளவுட் சேவையை வழங்கும் இணையத்தளங்களுள் ஒன்றான Kim DotCom ஆனது iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
Mega எனும் இந்த அப்பிளிக்கேஷன் மூலம் iPhone மற்றும் iPad என்பனவற்றிலிருந்து நேரடியாகவே கோப்புக்களை தரவேற்றம் செய்யும் வசதியை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் இலவசமாக 5GB சேமிப்பு வசதியையும், மாதாந்தம் 10.99 டொலர்களுக்கு 500GB சேமிப்பு வசதியையும், 119.99 டொலர்களுக்கு 1000GB சேமிப்பு வசதியையும் விரைவில் வழங்கவுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனினை iOS 6.0 மற்றும் அதற்கு பின்னர் வெளியான இயங்குதள பதிப்புக்களில் பயன்படுத்த முடியும்.

காலங்களால் அழியாத சாதனைகளுக்கு வித்திட்ட “சார்லஸ் பாபேஜ்”

இன்றைய உலகில் நமது கைக்குள் இருக்கும் சின்ன கைபேசியில் நவீன கணனியே இயங்குகிறது என்ற சொன்னால் அது மிகையல்ல.
இதனால் தான் என்னவோ தொழில்நுட்பத்தின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் பலரும் நினைத்து பார்ப்பதில்லை.
தொலைக்காட்சி பெட்டியை போல் அனைத்து வீடுகளிலும் கணனி எளிதாக உள்நுழைந்து விடுகிறது.
அதுமட்டுமா, அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணனி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலைமைக்கு வந்து விட்டோம்.
அத்தனை பேரையும் அடிமையாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கணனியின், தொடக்கம் எப்படி உருவானது என்று நினைத்து பார்த்தாலோ ஆச்சரியங்கள் மேலோங்கி நிற்கின்றன.
சார்லஸ் பாபேஜ்- வரலாறு
இதன் தொடக்கம் கணனியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவர் 1791ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி லண்டனில் பிறந்தார்.
தொடர்ந்து 1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைகழத்தில் இணைந்தவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.
1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணனியை அவர் உருவாக்கினார்.
கணனியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.
60 ஆண்டுகளுக்கு முன்
அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணனியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது.
இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணனியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணனியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணனிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணனியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘Augusta Ada King’ என்பவர்
உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்(Ada Byron lavles)” (1816-1852).
மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின்(Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை(Difference engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார் அடா.
பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார்.
அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.
Analytical Engine
Difference engine
தலைமுறைக் கணனிகள்
பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் திகதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1948 இல் டிரான்சிஸ்டர்(Transistor) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு(Vacuum tube) விடை தரப்பட்டது, இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணனிகள் புழக்கத்திற்கு வந்தன.
1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு(Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணனிகள் வந்தன.
இதனால் ஒரு சாதாரணச் சில்லைப்(Chip) பயன்படுத்தி பல கணனிப் பகுதிகளை இணைக்க முடிந்தது.
ஒரு இயக்க அமைப்பினைப்(Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று.
மேலும் நான்காம் தலைமுறைக் கணனி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.
1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம்(Central Processing Unit – CPU), நினைவகம்(Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன.
1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணனியை(Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணனிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணனிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.
அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.
காலங்களால் அழியாத சாதனைகளுக்கு வித்திட்ட மாமனிதரை போற்றுவோம்!....

Cricket Live Score...