
சில நாட்களா கவே வதந்தியாக வந்த ஒரு தகவல் தற்போது அதிகார பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனம் 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைந்த மொபைல் ஒன்றை வடிவமைத்து வழங்க இருக்கிறது. இப்போதெல்லாம் மக்கள் தனியே டிஜிட்டல் கேமராக்களை வாங்குவதைத் தவிர்க்க பார்க்கின்றனர். எனவே அருமையான டிஜிட்டல் கேமரா எப்படி படங்களை எடுத்துத் தருமோ அந்த திறனுடன் கூடிய கேமரா இணைந்த மொபைல் போனை எதிர்பார்த்து வருகின்றனர்.
இவர்களின் இந்த தேவையை நிறைவேற்றுவதற்காகவே நோக்கியா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைந்த போனை வடிவமைத்து வெளியிட இருக்கிறது. நோக்கியா என் 86 இந்த மாடலாக வெளிவர இருக்கிறது. இதனுடைய அபர்ச்சர் ஒரு டிஜிட்டல் கேமராவிற்கு இணையாக இருக்கும் என்கிறார் என் சிரீஸ் பிரிவின் இயக்குநர் ஜுகா பெக்கா. எந்த சூழ்நிலையிலும் எந்த ஒளியின் பின்னணியிலும் மிகச் சிறப்பான போட்டோக்களை இந்த மொபைல் எடுப்பதுடன் அவற்றை ஜியோ டேக் அடையாளத்துடன் இணையத்தில் பதிக்கவும் செய்திடும்.
என் 86 போனில் வைட் ஆங்கிள் கார்ல் ஸெய்ஸ் டெஸ்ஸார் லென்ஸ் தரப்பட்டுள்ளது. சிறந்த டிஜிட்டல் போட்டோ வேண்டும் என எண்ணுகையில் லென்ஸின் தன்மையையும் அதன் சென்சார் திறனையுமே காண வேண்டும். பிக்ஸெல் எண்ணிக்கை மட்டும் அதை முடிவு செய்திட முடியாது. எனவே மாறக்கூடிய அபர்ச்சர் கொண்டு முதல் முதலில் வரும் நோக்கியா என் 86 இந்த வகையில் சிறந்த ஆழமான படங்களைத் தரும் என்பது உறுதி என நோக்கியா என் சிரீஸ் இயக்குநர் மேலும் தெரிவித்தார். இந்த மொபைல் போனின் மற்ற தன்மைகள்: 2.6 அங்குல வண்ணத்திரை – ஸ்கிராட்ச் விழ முடியாதது, இரண்டு வகை ஸ்லைடர், போனின் நினைவகம் 8 ஜிபி, நெட் வொர்க் இணைப்பிற்கு ஏகுஈகஅ, ஙிடிஊடி, உஈஎஉ ஆகிய தொழில் நுட்பம், இணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2 போர்ட், நோக்கியா மேப்ஸ் இணைந்த ஜி.பி.எஸ்., எப்.எம். ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் வசதியுடன் மற்றும் பின்பக்கமாய் ஸ்டாண்ட்.
இத்தனை வசதியுடன் இதனுள்ளாக ஒரு திசை காட்டும் மானியான காம்பஸ் இணைக்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்கள் நேவிகேஷன் வசதி இலவசமாய்த் தரப்படும். வரும் மாதங்களில் கிடைக்க இருக்கும். இதன் விலை உத்தேசமாக ரூ. 24,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment