
அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் சிறந்த மொபைல் போன் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதிற்கான இறுதிச் சுற்றில் எல்.ஜி. கே.எஸ். 360, டி–மொபைல் ஜி1, பிளாக் பெரி ஸ்டார்ம் 9500 நோக்கியா இ–71 மற்றும் இந்தியாவில் அறிமுகமாகாத ஐ.என்.க்யூ 1 ஆகியவை போட்டியிட்டன. ஐ.என்.க்யூ 1 விருதைப் பெற்றது. இந்த போனின் சிறப்பு இது சமுதாய இணைய தளமான பேஸ்புக் தளத்தை மையமாகக் கொண்டு அமைத்தது மற்றும் ஸ்கைப், விண்டோஸ் லைவ் மெசஞ்சர் தொகுப்புகளைத் தன்னிடத்தில் கொண்டு அவற்றில் இயங்குவதை எளிமைப்படுத்தியது ஆகும். டி–மொபைல் மற்றும் நோக்கியா அடுத்த இடங்களைப் பிடித்தன. இதில் குறிப்பிடத்தக்கது டி–மொபைல் போன் எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து வழங்கிய தாகும்.
மிகச் சிறந்த மொபைல் இன்டர்நெட் சர்வீஸ் வழங்குவதற்காக நோக்கியா விருது பெற்றது. நோக்கியா ஸ்போர்ட்ஸ் ட்ரேக்கர் வசதியினைச் சிறப்பாகத் தருவதற்காக இந்த விருது. மொபைல் தொழில் நுட்பத்தில் சிறந்ததை அறிமுகப்படுத்தியதற்காக பிளாக் பெரி ஸ்டார்ம் போனின் ஷ்யூர் ப்ரஸ் ஸ்கிரீன் பெற்றது. இது ஒரு டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் ஆகும். இனி வரும் நாளில் டச் ஸ்கிரீன் தான் அனைவரின் பழக்கத்தில் இருக்கும் என்பதை இது உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment