kandee0702

Friday, December 31, 2010

கட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்


உலகின் மிக சிறிய மொபைல் போன் நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். இந்த போனின் பெயர் நியோ 808 ஐ. இதில் அதிகமான எண்ணிக்கையில் வசதிகள் உள்ளது இன்னொரு கூடுதலான சிறப்பாகும்.

இதன் நீளம் 72மிமீ, அகலம் 41மிமீ. மிக அழகாக அடக்கமாக சிறிய எம்பி3 பிளேயர் போல இருக்கிறது. மற்ற போன்களில் திரையும் கீகளும் நெட்டு வாக்கில் இருக்கும். ஆனால் இதில் படுக்கை வாக்கில் இருக்கிறது. வால்யூம் கீகளுடன் கேமராவிற்கான ஒரு கீயும் அருகே தரப்படுகிறது. எனவே இந்த வகை கீ பேடிற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள ஓரிரு நாட்களாவது ஆகும். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல இதில் எந்த வசதியும் விட்டுவைக்கப்படவில்லை.

மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். வசதி, இ–புக் ரீடர் ஆகியன உள்ளன. இதன் ஒலியின் தன்மை தனியே கேட்கும்போதும் ஹெட்செட் மூலம் கேட்கும்போதும் சிறப் பாகவே உள்ளது. எப்.எம்.ரேடியோவில் 30 சேனல்களை மெமரியில் வைக்கலாம். நம்முடைய பேவரைட் புரோகிராம்களை ரெகார்ட் செய்திடலாம். கேமராவுடன் போட்டோ எடிட்டர் வசதியும் தரப்பட்டுள்ளது.

போனுடன் ஒரு யு.எஸ்.பி. சார்ஜரும் தரப்பட்டுள்ளது. 128 எம்பி மெமரி இருந்தாலும் 4 ஜிபி வரை மெமரி கார்டுகளை இந்த போன் ஏற்றுக் கொள்கிறது. ஒரு சிறிய போன் இந்த அளவில் மெமரியை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமே. போனுடன் 128 எம்பி மெமரி கார்ட் தரப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். வசதி நன்றாகக் கிடைக்கிறது. இதில் உள்ள இ–புக் ரீடர் மூலம் ஆன் லைன் புத்தகங்களை வாசிக்க முடிந்தது. இவை அனைத் திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் பேட்டரி திறன் கொண்டதாக உள்ளது. கூடுதல் பேட்டரி ஒன்று இதன் சர்வீஸ் பேக்குடன் தரப்படுகிறது. இதனோடு ஒப்பிட வேண்டும் என்றால் சோனி டபிள்யூ 610 ஐ மற்றும் நோக்கியா 5310 ஐக் கூறலாம். இவற்றில் கேமரா 2 மெகா பிக்ஸெல் ஆகும். இருந்தாலும் உலக அளவில் சிறிய மொபைல் என கைக்குள் எடுத்துச் செல்லலாம்.

No comments:

Post a Comment

Cricket Live Score...