kandee0702

Tuesday, April 27, 2010

சாதனை படைத்த பயர்பாக்ஸ்


சென்ற ஜூன் 17ல் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பதிப்பு 3 வெளியானது. கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், புதிய பல வசதிகள், தோற்றப் பொலிவு, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் முறை எனப் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியான இந்த தொகுப்பின் வெளியீடும் சாதனை படைத்துள்ளது.


வெளியான நாளன்று அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம் என்ற பெயரை எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இதற்கான ஏற்பாடுகள் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் மேற் கொள்ளப் பட்டு வெற்றிகரமாக இச்சாதனை மேற் கொள்ளப்பட்டது.சாதனை தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எக்கச்சக்க எண்ணிக்கையில் டவுண்லோட் செய்தனர். எந்த நொடியிலும் இறக்கம் செய்வது நிற்கவே இல்லை.


குறிப்பிட்ட நாளில் 83 லட்சம் பேர் டவுண்லோட் செய்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்தியாவிலிருந்து 2 லட்சத்து 57 ஆயிரத்து 353 பேர் பங்கு கொண்டு இந்த பிரவுசர் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தினார்கள். அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 50 லட்சத்து 18 ஆயிரத்து 241 பேர் டவுண்லோட் செய்தனர்.பிரிட்டனில் 7 லட்சத்து 26 ஆயிரத்து 232 பேர் கலந்து கொண்டனர். இப்படியே உலகெங்கும் உள்ள நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் ஆவலுடன் கலந்து கொண்டு இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளனர். எந்த எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்ற தகவல்களுக்கு http://www.spreadfirefox.com/enUS/worldrecord/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Cricket Live Score...