kandee0702

Saturday, April 24, 2010

உங்களுடைய அலைபேசிக்கு தேவையான அனைத்து விசயங்களும் ஒரே இடத்தில்!

இந்த நவீன உலகத்தில் நமது அன்றாட வாழ்கையில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட பல சாதனங்களில் குறிபிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது அலைபேசிகள். நம்முடன் அனைத்து இடங்களுக்கும் துணை போல வரும் அலைபேசிகள் நம்மை நமது உறவுகளுடனும், நண்பர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க உதவி புரிகிறது. அத்தகைய அலைபேசிகளின் மீது நம்மில் பலருக்கும் தீராத ஆர்வம் இருக்கும். அதுவும் நமது அலைபேசிகளின் முகப்பு படங்களையும், நமக்கு பிடித்த அழைப்பு ஒலிகளையும் நாம் அடிக்கடி நமது எண்ணதிருக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டே இருப்போம். இதை செய்ய கண்டிப்பாக நாம் தேடி செல்லும் முதல் இடம் கூகிள்.

அங்கு நமக்கு வேண்டிய அனைத்து விசயங்களும் நமக்கு பிடித்த வகையில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதை நிவர்த்தி செய்ய நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான இடம்தான் ZEDGE. இந்த தளத்தில் நமது அலைபேசிக்கு வேண்டிய அனைத்து விசயங்களும், அதாவது படங்கள் வீடியோகள் , தீம்ஸ், விளையாட்டுகள் என சகல விசயங்களும் நமது அலைபேசியின் அங்கத்தை பொறுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதில் நீங்கள் உறுப்பினராக மாறிவிட்டால் இன்னும் கூடுதல் சலுகைகள். இந்த சேவை முற்றிலும் இலவசம். இந்த தளத்தை ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

No comments:

Post a Comment

Cricket Live Score...