சென்ற வாரம் நண்பர்களிடம் இருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்கள் கைபேசி இந்தியாவில் தொலைத்து விட்டால் அதனை திரும்ப பெறலாம் (If u lose your mobile in India , you can get it back) என தலைப்பிட்டு வந்திருந்தது அந்த மின்னஞ்சல். 

அந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டது :
இப்பொழுதெல்லாம் கண்டிப்பாய் எல்லோரிடமும் விலை உயர்ந்த கைபேசிகள்தான் இருக்கின்றன. அதனை தொலைத்து விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு கைபேசியிலும் IMEI எனப்படும் சர்வதேச தனிக்குறியீட்டு எண் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. *#06# அழுத்தினால் 15 இலக்கங்களைக் கொண்ட தனிக்குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் எப்போதாவது உங்கள் கைபேசி தொலைந்து விட்டால், இந்த எண்ணை கீழ்க்கண்ட தகவல்களுடன் சேர்த்து cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
24 அல்லது 48 மணி நேரத்துக்குள், கண்டறியப்பட்டு உங்களுக்கு தகவல் கிடைக்கும்.
இந்த தகவல் உறுதியானதா என தெரியவில்லை. பல வலை தளங்களில் சோதனை செய்ததில், சிலர் இந்த மின்னஞ்சல் வேலை செய்யவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். சில தளங்களில் தங்களுக்கு இந்த மின்னஞ்சலில் இருந்து பதில் வந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment