kandee0702

Thursday, December 26, 2013

விண்டோஸ் ப்ளே ஸ்டோரில் Temple Run 2

அன்ரோயிட் இயங்குதளத்தினைப் போன்று தற்போது Windows Phone இயங்குதளமும் பிரபல்யம் அடைந்து வருகின்றது.
இவ் இயங்குதளமானது ஐரோப்பாவில் பத்து வகையான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
Angry Birds Go, 500px போன்ற ஹேம்களே இவ் இயங்குதளத்தில் பிரபல்யமாக காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது மிகவும் பிரபலமான ஹேமான Temple Run 2 இனை, பயன்படுத்தக்கூடிய வசதியை பயனர்களுக்கு வழங்கும் பொருட்டு Windows Phone Store இல் இந்த ஹேம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

விற்பனையில் சாதனை படைத்துள்ள Xbox one

இப்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஒரு கேம் கேஜட்டை(Game Gadget) வெளிவிட்டுள்ளது.
இதன் பெயர் எக்ஸ் பாக்ஸ் ஒன்(Xbox one), இது வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 1 மில்லியன் விற்பனையாகி உள்ளது.
அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட டைட்டன் என்ற நிறுவனம் தான் இந்த எக்ஸ் பாக்ஸ் ஒன்னை வெளியிட்டுள்ளது.
விற்பனையில் சாதனை படைத்துள்ள எக்ஸ் பாக்ஸை, சிறுவர்கள் அதிகம் விரும்பி வாங்கி கொண்டிருப்பதால் இன்னும் பல்வேறு நாடுகளில் வெளியிடப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் Kim DotCom அப்பிளிக்கேஷன்

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் கிளவுட் சேவையை வழங்கும் இணையத்தளங்களுள் ஒன்றான Kim DotCom ஆனது iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
Mega எனும் இந்த அப்பிளிக்கேஷன் மூலம் iPhone மற்றும் iPad என்பனவற்றிலிருந்து நேரடியாகவே கோப்புக்களை தரவேற்றம் செய்யும் வசதியை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் இலவசமாக 5GB சேமிப்பு வசதியையும், மாதாந்தம் 10.99 டொலர்களுக்கு 500GB சேமிப்பு வசதியையும், 119.99 டொலர்களுக்கு 1000GB சேமிப்பு வசதியையும் விரைவில் வழங்கவுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனினை iOS 6.0 மற்றும் அதற்கு பின்னர் வெளியான இயங்குதள பதிப்புக்களில் பயன்படுத்த முடியும்.

காலங்களால் அழியாத சாதனைகளுக்கு வித்திட்ட “சார்லஸ் பாபேஜ்”

இன்றைய உலகில் நமது கைக்குள் இருக்கும் சின்ன கைபேசியில் நவீன கணனியே இயங்குகிறது என்ற சொன்னால் அது மிகையல்ல.
இதனால் தான் என்னவோ தொழில்நுட்பத்தின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் பலரும் நினைத்து பார்ப்பதில்லை.
தொலைக்காட்சி பெட்டியை போல் அனைத்து வீடுகளிலும் கணனி எளிதாக உள்நுழைந்து விடுகிறது.
அதுமட்டுமா, அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணனி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலைமைக்கு வந்து விட்டோம்.
அத்தனை பேரையும் அடிமையாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கணனியின், தொடக்கம் எப்படி உருவானது என்று நினைத்து பார்த்தாலோ ஆச்சரியங்கள் மேலோங்கி நிற்கின்றன.
சார்லஸ் பாபேஜ்- வரலாறு
இதன் தொடக்கம் கணனியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவர் 1791ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி லண்டனில் பிறந்தார்.
தொடர்ந்து 1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைகழத்தில் இணைந்தவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.
1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணனியை அவர் உருவாக்கினார்.
கணனியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.
60 ஆண்டுகளுக்கு முன்
அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணனியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது.
இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணனியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணனியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணனிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணனியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘Augusta Ada King’ என்பவர்
உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்(Ada Byron lavles)” (1816-1852).
மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின்(Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை(Difference engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார் அடா.
பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார்.
அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.
Analytical Engine
Difference engine
தலைமுறைக் கணனிகள்
பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் திகதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1948 இல் டிரான்சிஸ்டர்(Transistor) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு(Vacuum tube) விடை தரப்பட்டது, இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணனிகள் புழக்கத்திற்கு வந்தன.
1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு(Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணனிகள் வந்தன.
இதனால் ஒரு சாதாரணச் சில்லைப்(Chip) பயன்படுத்தி பல கணனிப் பகுதிகளை இணைக்க முடிந்தது.
ஒரு இயக்க அமைப்பினைப்(Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று.
மேலும் நான்காம் தலைமுறைக் கணனி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.
1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம்(Central Processing Unit – CPU), நினைவகம்(Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன.
1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணனியை(Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணனிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணனிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.
அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.
காலங்களால் அழியாத சாதனைகளுக்கு வித்திட்ட மாமனிதரை போற்றுவோம்!....

Wednesday, September 11, 2013

வெளியானது ஆப்பிளின் ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5சி


ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5 சியை வெளியிட்டுள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஐபோன் 5 எஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
ஐபோன் 5எஸ்
ஆப்பிளின் கடைசி வெளியீட்டான ஐபோன் 5க்கு பிறகு வெளியாகியுள்ளது.
 தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது.
வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன், இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமாக செயல்படும்.
4 அங்குல ரெட்டினா திரையையும், 8 MP, 3264x2448 pixels கெமரா, 1080p HD வீடியோ ரெக்கோர்டிங், ஐபோன்5எஸ் கொண்டுள்ளது.
ஆப்பிளின் புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ். 7 மூலம் இது இயங்குகின்றது.
இதில் குறிப்பிட்டத்தக்க வகையில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது.
ஐபோன் 5சி
பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இது பிங்க், பச்சை, வெள்ளை, நீலம், மற்றும் மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கப்பெறுகின்றது.
இதுவும் 4 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. A6 புரசசர் , 8 மெகா பிக்ஸல் கெமரா, புதிய பேஸ்டைம் எச்.டி. கெமரா போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.

Monday, August 5, 2013

கால்பந்தாட்ட பயிற்சியை வழங்கும் புதிய இயந்திரம் - Zero G

மக்கள் குறித்த துறையில் சிறந்த பயிற்சினை பெறுவதற்கு தொழில்நுட்ப உதவிகள் நாடப்படுவது வழமையான விடயமாகும்.
அதேபோன்றே உதைபந்தாட்ட பயிற்சினை வழங்குவதற்கு சிறந்த பயிற்சியாளராக Zero G இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வியந்திரத்தின் மூலம் பாதம், கீழ் கால், முழங்கால், நெஞ்சுப்பகுதி மற்றும் நெற்றிப்பகுதி (தலை) போன்றவற்றினால் கால்பந்தை இலகுவாகவும், சிறந்த முறையும் கையாளும் வகையில் பயிற்சினை பெற்றுக்கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இதன் பெறுமதியானது ஏறத்தாழ 140 அமெரிக்க டொலர்களாகும்.


உயர்தர புகைப்படங்களை எடுக்கக்கூடிய Samsung Galaxy NX கமெரா அறிமுகம்

கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட சம்சுங் நிறுவனம் கமெரா உற்பத்தியிலும் கால்பதித்துள்ளமை அறிந்ததே.
இந்நிலையில் தற்போது Samsung Galaxy NX எனும் உயர்தர புகைப்படங்களை எடுக்கக்கூடிய அன்ரோயிட் கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துவைத்துள்ளது.
3G/4G LTE மற்றும் Wi-Fi வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பங்களை கொண்ட இந்த கமெராவானது 20.3 மெகாபிக்சல்கள் உடையதாக காணப்படுகின்றது.
மேலும், கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கமெராவின் பெறுமதியானது 1,299 யூரோக்கள் ஆகும்.

HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் கூகுள் பிளே பதிப்பு அறிமுகம்

தொடர்ச்சியாக பல கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது HTC One கூகுள் பிளே பதிப்பினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
4.7 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 600 Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
கூகுளின் Android Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இதன் சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB காணப்படுவதுடன் அல்ராபிக்சல் உடைய கமெராவினையும் கொண்டுள்ளது.

Sky Drive தரும் புத்தம் புதிய வசதி

மைக்ரோசொப்ட்டின் ஒன்லைன் சேமிப்பகமாகவும், கோப்புக்களை பகிர்ந்து கொள்ளும் சேவையை வழங்குவதுமான SkyDrive தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புகைப்படங்களை தரவேற்றம் செய்தல் எடிட் செய்தல் போன்ற வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் ஊடகத்தினை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வசதிகளின் மூலம் அனிமேஷன்களை கொண்ட புகைப்படங்களையும் தரவேற்றம் செய்ய முடியும்.
இவை தவிர புகைப்படங்களுக்கான பல்வேறு புதிய கோப்பு வகைகளை தரவேற்றம் செய்ய முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளுதல், எடிட் செய்தல், போன்றவற்றுடன் புதிய கட்டுப்பாட்டு வசதிகளும் (Control) காணப்படுகின்றன.

Monday, June 10, 2013

PDF கோப்புக்களை HTML கோப்புக்களாக மாற்றுவதற்கு

எழுத்துக்கள் மற்றும் படங்களுக்கான சிறந்த கோப்பு வகையாகக் கருதப்படும் PDF கோப்பில் காணப்படும் உள்ளடக்கங்களை இணையத்தளத்தில் பயன்படுத்தும்பொருட்டு HTML கோப்புக்களாக மற்றுவதற்கு Abex PDF to HTML Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட PDF கோப்புக்களை ஒரே தடைவையில் HTML கோப்புக்களாக மாற்றியமைக்க முடியும்.
மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட HTML கோப்பு ஆனது அனைத்து வகையான இணைய உலாவிகளிலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

iPod Touch விற்பனையில் சாதனை படைத்தது அப்பிள்

அப்பிள் நிறுவனத்தின அரிய தயாரிப்புக்களுள் ஒன்றான iPod Touch ஆனது 2007ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது 100 மில்லியனிற்கும் மேற்பட்ட iPod Touch சாதனங்களை விற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில் நேற்றைய தினம் 16GB சேமிப்பு வசதி கொண்ட புதிய iPod Touch சாதனத்தை அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு iPod Touch சாதனத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 9, 2013

வைரஸ்களை தடுப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதலிடம்

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை தடுத்து, பாதுகாப்பான இணைய தேடலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதல் இடத்தை பிடித்துள்ளது.
என்.எஸ்.எஸ். லேப்ஸ்(NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
28 நாட்களாக குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவிகித மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர் 83 சதவிகித மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது.
சபாரி மற்றும் பயர்பொக்ஸ் பிரவுசர்கள் 10 சதவிகித மால்வேர்களையும், ஓபராவின் புதிய பதிப்பு 2 சதவிகித மால்வேர்களையும் தடுத்தது.
இந்த ஆய்வின் முடிவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 அதிகளவான மால்வேர்களை தடுத்து முதலிடம் பிடித்தது.
இதற்கு காரணம் இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது.
இதன் பின்னர் கணனியில் நிறுவுவதற்கு முன்பு, குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது.
மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது.
கூகுளைப் பொறுத்தவரை குரோம் உலாவியில் Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

கமெராக்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்பதற்கு

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக தற்போது அதிகளவில் டிஜிட்டல் கமெராக்களே பயன்பாட்டில் காணப்படுகின்றன.
இக்கமெராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை சேமிப்பதற்கு அவற்றில் நிரந்தரமான அல்லது பிரத்தியேகமான மெமரி கார்ட்கள் காணப்படும்.
இச்சேமிப்பு சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன புகைப்படங்களை இலகுவாக மீட்பதற்கு DataToUS Card Recovery எனும் மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
இதன் மூலம் குறித்த கமெராவிலிருந்து மெமரி கார்ட்டினை நீக்காது நேரடியாகவே அழிந்த புகைப்படங்களை மீட்க முடிவதுடன், புகைப்படம் தவிர வீடியோ கோப்புக்கள் மற்றும் ஆடியோ கோப்புக்களையும் கமெராவிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தரவிறக்கச் சுட்டி

Cricket Live Score...