kandee0702

Friday, August 20, 2010

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு

மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.

இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

1. Boot Sector Viruses:
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:

இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:


பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro


மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா!

இது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம்.

அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம்.

இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab for Chromeஎன அழைக்கப்படுகின்றன.

நீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா! இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா!


உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்

விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!

விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது.

மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர்.

விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

வந்தாச்சு MS-Office 2010

அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.

உலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்பு ஒபிஸ் 2010 இம்மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும் இது Microsoft Office 2010 Technical Preview எனப்படும் துறை சார்ந்த வல்லுனர்களுக்கான விசேட பதிப்பாகும். பொதுமக்கள் பாவனைக்கு அடுத்த மாதமே (ஜூன்) கிடைக்கப் பெறும் என மைக்ரோஸொப்ட் அறிவித்துள்ளது. இது ஒபிஸ் தொகுப்பின் 14 வது வெளியீடாகும்.

எம்.எஸ்.ஒபிஸ் 2010 தொகுப்பின் சோதனைப் பதிப்பை (Beta Version) கடந்த வருடம் மைக்ரொஸொப்ட் நிறுவனம் இணையத்தினூடு வெளியிட்டது. இதனை இன்று வரை பல லட்சக் கணக்கான கணினி பயனர்கள் இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துள்ளனர்.

எம்.எஸ்.ஒபிஸ் 2010 பார்வைக்கு ஒபிஸ் 2007 போன்று தோன்றினாலும் அதில் ஏராளமான மாற்றங்களுடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உள்ளே நுளைந்து பார்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது.

இதிலுள்ள சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சொன்னால் பவர்பொயிண்டில் வீடியோ படங்களை எடிட் செய்தல், போட்டோ எடிட் செய்தல், மற்றும் அவுட்லுக்கில் இமெயில்களைக் கையாள்வதற்கான புதிய வசதிகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பழைய ஒபிஸ் பதிப்புகளில் இருந்த மெனு, சப்மெனு கொண்ட இடை முகப்புக்குப் பதிலாக முன்னைய ஒபிஸ் 2007 பதிப்பில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரிப்பன் இடைமுகப்பு (Ribbon Interface) முழுமையாக இந்த புதிய ஒபிஸ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒபிஸ் 2010 தொகுப்பிலுள்ள வர்ட், எக்ஸல் என அனைத்து மென்பொருள்களிலும் ரிப்பன் இடை முகப்பே முக்கிய இடம் பிடித்துள்ளது.

கணினி ஆவணங்களில் அடோபி (Adobe) நிறுவனம் உருவாக்கிய பீடிஎப் பைல் (PDF) வடிவம் அதிகம் பிரபல்யமானது. ஒபிஸ் 2010 ல் உள்ள அனைத்து மென்பொருள்களும் பீடிஎப் பைலை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்.வர்டில் உருவாக்கிய ஒரு பைலை ஒரே க்ளிக்கில் பீடிஎப் பைலாக மாற்றிக் கொள்ளலாம்.

பவர் பொயிண்ட் ப்ரசண்டேசனில் நீங்கள் பயன் படுத்தும் வீடியோ க்ளிப் ஒன்றை எடிட் செய்ய வேண்டுமானால் வேறு வீடியோ எடிட்டிங் மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனைப் பவர் பொயிண்டிலேயே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது, வீடியோ பைல்களில் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவது மட்டுமன்றி மேலும் பல மெருகூட்டும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

உங்கள் ஆவணங்களை விண்டோஸ் லைவ் (Windows Live) வழங்கும் ஸ்கை ட்ரைவ் (SkyDrive) எனும் இணையம் சார்ந்த சேமிப்பகங்களுக்கு அப்லோட் செய்து விட்டு அந்த பைல்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் அணுகக் கூடிய வசதியையும் ஒபிஸ் 2010 தருகிறது.

யூ டியூப் ( YouTube) போன்ற இணைய வீடியோக்களை பவர் பொயிண்ட் டில் இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதனையும் இலகுவாக கொப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். இணைக்க வேண்டிய வெப் வீடியோவின் Embed Code ஐ பிரதி செய்து ஒட்டி விட்டாலே போதுமானது.

இந்த ஒபிஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதான மாற்றமாக அதன் இணையம் சார்ந்த பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அதாவது ஒபிஸ் தொகுப்பிலுள்ள வர்ட், எக்சல் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே இணையத்தினூடு இலவசமாக பயன் படுத்தும் வசதியை வழங்க விருக்கிறது.

இவ்வாறு இணையத்தினூடு அணுகி அதனைப் பயன்படுத்துவதை வெப் எப் (Web App) எனப்படுகிறது. இது போன்ற சேவையை கூகில் நிறுவனம் ஏற்கனவே கூகில் டொக் (Google Doc) எனும் பெயரில் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

Screen Capture எனும் கருவி மூலம் திரையில் தோன்றுவதை முழுமையாகாவோ பகுதியாகவோ பட்ம் பிடித்து வர்ட், எக்ஸல் போன்ற எப்லிகேசன்களில் நுளத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

Office Home and Business 2010, Office Professional 2010, Office Professional Plus 2010 என பல வேறு பட்ட பயனர்களுக்கென ஒபிஸ் பதிப்பை வெளியிடவுள்ளது மைக்ரோஸொப்ட். அத்தோடு கையடக்கத் தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் பயன் படுத்தக் கூடிய ஒபிஸ் 2010 பதிப்பையும் வெளியிடவிருக்கிறது.

முன்னைய ஒபிஸ் பதிப்புகள் Windows Mobile இயங்கு தளம் கொண்ட கையடக்கக் கணினிகளை மட்டுமே ஆதரித்தது. எனினும் தற்போதைய பதிப்பை ஐபோன் (iPhone) போன்ற விண்டோஸ் மொபைல் அல்லாத கையடக்கத் தொலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் பயன் படுத்தலாம்.

ஒபிஸ் 2010 ஐ விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் 7 பதிப்பு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.. இதை நிறுவுவதற்கான விசேட தேவைகள் ஏதும் கணினியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒபிஸ் 2007 பதிப்பு உங்கள் கணினியில் நிறுவ முடியுமானால் ஒபிஸ் 2010 ஐயும் இலகுவாக நிறுவி விடலாம்.

பீட்டா பதிப்பைப் பயன் படுத்திப் பார்த்ததில் எம்.எஸ்.ஒபிஸ் பல வருடங்களாக காத்து வரும் தன் பிரபல்யத்தை மேலும் பல தசாப்தங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.

ரெட் ஒன் கேமரா

சினிமா தோன்றியது முதல் இன்று வரை திரைப்படங்களின் கதை, திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்ப பணிகள் முதலியவற்றில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.

ஃபிலிமை (Film) பயன்படுத்தி மட்டுமே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சினிமா உலகில், தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் கேமராக்களின் மூலம் ஒரு முழு திரைப்படத்தை படமாக்க முடியும் என்று களத்தில் இறங்கிவிட்டனர், படைப்பாளிகள்.

'ரெட் ஒன் கேமரா' மிக மிக துல்லியமாக லொகேஷன்களின் இயற்கை நிறத்தையும், படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. ஷூட்டிங்கின் போது காட்சிகள் அனைத்தும் பிலிம் ரோல்களுக்குப் பதில், ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு விடும். இதன் மூலம் தேவைப்படும்போது காட்சிகளைப் போட்டுப் பார்த்து கரெக்ட் செய்து கொள்ள முடியும். ஸ்டீவன் சோடன்பெர்க், பீட்டர் ஜாக்சன் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இந்த கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இந்திய திரைப்படத்திலும் இப்போது இதனை பயன்படுத்துகின்றனர்.

இந்த கேமரா மூலம் காட்சிகளை 4096 X 2096 என்ற ரெசொலூஷனில் (Resolution) பதிவு செய்ய முடியும். உலகம் முழுவதும் மொத்தமாக 5000-க்கும் குறைவான ரெட் ஒன் கேமராக்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இந்த கேமராவை வாங்குவது சாத்தியமானதல்ல. முதலில் கேமராவுக்கு ரிசர்வ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டுமாம். கேமராவின் விலை ரூ. 8 லட்சமாம். படம் எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் திருட்டு விசிடிக்காரர்கள் புரிஞ்சுகிட்டா சரி!

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலை வனத்தில் இருக்கும் மலை உச்சியில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் இந்த டெலஸ்கோப் அமைகிறது.

பூமி போன்ற பெரிய கோள்கள் முதல் சிறிய கோள்கள் வரை ஆராயும் சக்தி கொண்டதாக இந்த டெலஸ்கோப் இருக்கும். கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நிலவும் பாதிப்புகளையும் இந்த டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் ஆராய முடியும்.

Cricket Live Score...