kandee0702

Thursday, June 24, 2010

வருகிறது ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

1.வடிவம்:

புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.

போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.

2. மைக்ரோசிம்:

இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.

3.டிஸ்பிளே:

ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.

இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. கேமரா:

இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.

5.சிப்:

ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.

6. கூடுதல் உதிரி வசதிகள்:

பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.

இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.

தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.

இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்.

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.


போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?

சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.

இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.

இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.

இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது.

எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.





பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.



அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம். பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.



மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.





திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

Tuesday, June 22, 2010

இலவச சட்டரீதியான FLV To Any Video To FLV மாற்றும் மென்பொருள்

நண்பர்களே நீங்கள் யூட்யூபில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீடியோ பிடித்திருந்தால் உடனே தரவிறக்கி விடுவீர்கள். அதன் பிறகு எப்பொழுது வேண்டுமானலும் உங்கள் கணினியில் ஓட விட்டு பார்த்துக் கொள்வீர்கள். ஒரு வேளை அந்த வீடியோவை நீங்கள் டிவிடியில் போட்டு பெரிய திரையில் தொலைக்காட்சியில் பார்க்க விருப்பப்பட்டால் என்ன செய்வீர்கள் உடனே அதற்கு ஒரு வீடியோ கன்வெர்ட்டர் தேட வேண்டும். சில கன்வெர்டர்களை தரவிறக்கினால் அதனுடன் இணைந்து கணினிக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வைரஸ் மால்வேர்களையும் சேர்த்து தரவிறக்கி விடும். பிறகு நம் கணினியை பழைய நிலைக்குள் கொண்டு வருவதற்குள் போதும் என்றாகிவிடும்.
நல்ல கன்வெர்டர் மென்பொருள் வாங்கினாலும் விலையும் அதிகமாக இருக்கும். $25 மதிப்புள்ள ஐ ஸ்கை ஸாப்ட் FLV கன்வெர்ட்டர் உங்களுக்கு இலவசமாக இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை செப்டம்பர் 1 வரை நீடிக்கும் என்பது கூடுதல் செய்தி. இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆதரிக்கும். இந்த மென்பொருள் சிறப்பான பலவசதிகளை உள்ளடக்கியது. இந்த பதிவு மிகவும் அவசரமாக எழுதியது என்பதால் இதன் சிறப்புகள் குறித்த சுட்டி இதை படித்துவிட்டு தரவிறக்குங்கள். நிறைய விஷயங்கள் உள்ளது.
ஜுன் 14 2010 அன்று என் மனைவியின் தங்கைக்கு திருமணம் மணப்பெண்ணும் மணமகளும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு தேவை
முதலில் எல்லாம் நண்பர்களுடன் இணையத்தில் உரையாட ஒரே ஒரு சாட் மென்பொருள் மட்டுமே நான் பயன்படுத்தி வந்தேன் அது யாகூ சாட் மென்பொருள். ஆனால் இப்பொழுது இணையத்தில் நண்பர்களுடன் இணைய நிறைய சமூக தளங்கள் வந்து விட்டன் அதனுடனே சாட் மென்பொருட்களுடன் வருகிறது. உலாவி திறக்காமல் மென்பொருள் மூலம் நண்பர்கள் மூலம் உரையாடவே பலர் விரும்புகின்றனர் அந்த வகையில் இந்த சாட்டிங் மென்பொருள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த மென்பொருள் பின்வரும் தளங்களை ஆதரிக்கிறது.

விண்டோஸ் லைவ் (Windows Live Messenger (MSN))
எ ஒ எல் ( AOL Instant Messenger (AIM) )
யாஹூ (Yahoo! Messenger)
கூகிள் டாக் (Google Talk)
ஐ சி க்யூ ( ICQ)
ஜாப்பர் ( Jabber )
ஐ சாட் (அ) மொபைல்மீ ( iChat / MobileMe )
கடு கடு ( Gadu-Gadu)
பேஸ்புக் (Facebook Chat)
மென்பொருள் தரவிறக்க சுட்டி இந்த மென்பொருளின் பெயர் சொல்ல மறந்து விட்டேனே இதன் பெயர் பால்ரிங்கோஅடோப் பிளாஷ் ப்ளேயர் 10.1 பதிப்பு தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி

Monday, June 21, 2010

திருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றன‌

இன்றைய காலத்து இளைஞர்களுக்கு உணவு உடை உறையுள் போன்ற அத்தியாவசிய விடயங்களுடன் வாழ்க்கையில் இன்னொன்றாக மாறிவிட்டது மூஞ்சிப்புத்தகம் என தமிழில் செல்லமாக அழைக்ப்படும் Facebook.


Facebook ஆரம்பித்தகாலத்தில் Orkutன் ஆதிக்கத்தினால் அவ்வளவாக பலரைக் கவரவில்லை ஆனால் காலப்போக்கில் Quiz, Games, Date of the day, எனப் பல விடயங்களைப் புகுத்தி Orkutடை ஓரம் கட்டி முன்னணியில் வந்துவிட்டது Facebook.
நானும் ஆரம்பத்தில் Facebook பக்கம் தலைவைத்துப் படுக்காவிட்டாலும் சும்மா இருக்கட்டுமே என ஒரு கணக்கை ஆரம்பித்து வைத்தேன். 2008ன் ஆரம்பத்தில் நண்பி ஒருவரின் திருமணம் கனடாவில் நடந்தது, அவரது திருமணப் புகைப்படங்களை மின்னஞ்சல் செய்ய அவரிடம் கேட்டபோது தன்னுடைய Facebook ல் இருக்கிறது பாருங்கள் என்றார். அன்று தொடங்கிய அடிமைத் தனம் இன்றைக்கு சிறந்த விவசாயி ஆகும் வரை வந்துவிட்டது.

பின்னர் என்னுடைய பாடசாலை காலத்து நண்பர்கள் பலர் தங்களையும் இணைத்துக் கொண்டபின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பாடசாலையின் இறுதிநாள் பரீட்சையில் பார்த்த நண்பனிடம் கூட அளவளாவ முடிந்தது. அத்துடன் எங்கள் பாடசாலைக் குழுமம், எங்கள் வகுப்புக் குழுமம் எனப் பல குழுமங்களில் இணைந்து அன்றைய பசுமையான நினைவுகளை இரைமீட்க முடிந்தது.
"1வது காதலில் தோல்வியுற்றவர்கள் சங்கம்","குப்புற படுத்துக்கிட்டு "யோசிப்போர்" சங்கம்"(அண்ணன் உண்மைத் தமிழன் ஒரு உறுப்பினர்) "வில்லுப் பார்த்து நொந்துபோனோர் சங்கம்", "ஏகனை எதிர்ப்போர் சங்கம்", "அனுஷ்கா", "நயந்தாரா", கூழ் குடிப்போர் சங்கம் (கானா பிரபா ஒரு உறுப்பினர்) எனச் குழுக்கள் பல இருக்கின்றன. இதனை விட பல தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பல குழுக்களும் திறம்பட இயம்பி மொழி பற்றிய பலவிதமான விவாதங்களைச் செய்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் சில நண்பர்கள் Facebook ல் நாங்கள் விவசாயம்(Farmville) செய்கின்றோம் நீயும் இணைந்துகொள் என எனக்கு கோரிக்கை விடுத்தும் வழக்கம் போல் ஒரு நிலத்தை வாங்கிப்போட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டேன். எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த விவசாயி கிளர்ந்து எழுந்து இன்றைக்கு லெவல் 11 வரை சிறப்பாக விவசாயம் பண்ணுகின்றார்.


இன்றைக்கு எனப் பல நண்பர்கள் என்னுடைய பக்கத்து தோட்டக்காரர்கள், நண்பர்கள் அன்பளிப்புச் செய்த முயல்கள், செம்மறி ஆடுகள், மற்றும் பசுக்கள் என பல என் தோட்டத்திம் மேய்கின்றன. வருகின்ற மாதம் என் நண்பர் ஒருவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடக்கவிருக்கின்றது.
அவர் இன்னொரு நாட்டில் இருந்து வருகின்றார். பெண்ணைப் பார்த்தது Facebook ல் தான். திருமணம் பேசும்போது மணமகளின் படத்தை Facebook ல் இருக்கின்றது பாருங்கள் என்றார்களாம் பின்னர் நண்பர் அவரை தன்னுடைய நண்பராக அழைப்பு (Friend Request) அனுப்பி இருவரும் தங்கள் படங்களைப் பார்த்தார்களாம், இதனை விட இருவரினதும் விருப்பு வெறுப்புகளும் அதில் இருந்தபடியால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இலகுவாக இருந்ததாகவும் கூறினார். இதே போல் இன்னொரு தெரிந்தவர் தன்னுடைய நண்பி ஒருத்தரின் நண்பியை Facebookல் கண்டு பிடித்து காதலித்துக் கொண்டிருக்கின்றார்.
நண்பியின் நண்பர்கள் பட்டியலைப் பார்க்கும் போது ஒரு பெண்ணின் படம் அவரைக் கவர்ந்திருக்கின்றது உடனே அவரின் Profile ஐ பார்த்தபோது இவரின் குணாதிசயங்களோடு பொருந்தியதால் உடனடியா தன்னுடய நண்பியாக்கி பின்னர் அரட்டைகள் அடித்து சில நாட்களின் பின்னர் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இத்தனைக்கும் ஒருவர் இலங்கையில் இருக்கின்றார் இன்னொருவர் இன்னொரு ஆசிய நாட்டில் இருக்கின்றார். இதுவரை நேரில் சந்தித்ததில்லை.
இன்னொரு காதல் கோட்டை கட்டுகின்றார்கள், நான் அவருக்கு சொன்ன அறிவுரை கவனம் காதல் கோட்டை கனவுக் கோட்டையாகி விடப்போகின்றது என்பதாகும்.Facebook, Orkut போன்ற இணையங்களில் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இல்லாமலில்லை. ஆனாலும் இவை நேரத்தைப் போக்கவே பயன்படுகின்றதாக சிலர் கூறுகின்றார்கள்.

பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர்.....


பொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன ? வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.

பிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது ?

அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

கம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER ) என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.

இன்றைய கம்ப்யூட்டர் மார்கெட்டில் எந்த பிராண்டையும் குறை சொல்வதற்க்கு இல்லை. ஒவ்வொரு பிராண்டும் மற்ற பிராண்டை மிஞ்சும் அளவிற்க்கு சிறப்பான தகுதிகளை உள் அடக்கிய கம்ப்யூட்டர்களைதான் தயார் செய்துகொண்டு இருக்கிறது.

ACER / ASUS / COMPAQ / DELL / GATWAY / HP / LENOVO / LG / PACKARD BELL / SONY / TOSHIBA இதுபோல் இன்னும் எத்தனையோ சிறந்த பிராண்ட் கம்ப்யூட்டர்கள் இன்றைய மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.

பிராண்டர் கம்ப்யூட்டரை வாங்குவதனால் நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

1) ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடுகிறது.

2) OS என்று சொல்லக்கூடிய ஆபரேடிங்க் சிஸ்டம் (Windows Xp, Windows Vista, Windows 7 போன்றவை) பிராண்டர் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதனுடைய செலவையும் சேர்த்துதான் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என நீங்கள் தனியாக ஒரு OS CD ஐ வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3) பிராண்டட் கம்ப்யூட்டரிகளிலும் Intel Original Mother Board தான் பொருத்தப்பட்டிருக்கு என்றாலும் அந்த மதர்போர்ட் சிறப்பாக செயல்படுவதற்கென சில ஸ்பெசல் செட்டப்புக்கள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்கப்பட்டு BIOS அப்டேசன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேசன் என பல வகை அப்டேசன்கள் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

4) பிராண்டர் கம்ப்யூட்டர் CPU Case -ல் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் SMPS (Switched-mode power supply) என்பது அதில் இனைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மதர்போர்ட், பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொன்றிர்க்கும் மிக சரியான முறையில் அதன் கெபாசிட்டிக்கு ஏற்றவாரு மின்சாரத்தில் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருப்பதால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் கெட்டுப்போகமல் பாதுகாக்கப்படுகிறது.

5) இந்த பிராண்டட் கம்ப்யூட்டரை உருவாக்கும் சிறந்த நிறுவணங்கள் அதில் சேர்க்கக்கூடிய ஹார்டுவேர்களில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறமை மிக்கவராக இருப்பதால் அவர்கள் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும். எனவே நீங்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்குவதில் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சிறந்த பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சிறந்த ஹார்டுவேர் பாகங்களை வாங்கிவிடுகிறீர்கள்.

6) மேலும் இந்த பிராண்டர் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவணங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இனைய தளங்களை வைத்திருப்பதால் இவர்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு அதில் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும் அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இனைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் இனைத்து வைத்திருப்பார்கள். அதனால் உங்கள் ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.
உதாரணத்திற்க்கு நீங்கள் DELL என்ற பிராண்ட் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய கம்ப்யூட்டர் மாடலுக்கு தேவையான அனைத்துவிதமான டிரைவர் மென்பொருள்களும் இவர்களுடைய இணைய தளமான http://www.dell.com/ என்ற இடத்தில் கிடைக்கும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதில் இத்தனை நல்ல விசயம் இருந்தாலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அசெம்பிள் கம்ப்யூட்டர் வாங்கினாலே போதும் என்று நினைப்பவரா நீங்கள்.
உங்களுக்காக மேலும் சில விளக்கங்கள்.
ஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.
Computer Case
Mother Board
Processor
Ram
Hard Disk
DVD Rom

IDE & SATA Cables
LCD Moniter
VGA CablePower CableKey Board & MouseComputer Speaker
Original Windows XP os CD

இந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்
இத்தனை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் உங்களிடம் இருந்தால் ஒரு அசெம்பிள் கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.
முயற்ச்சி செய்து பாருங்கள்.
வெற்றி நிச்சயம்.
அன்புடன்: kandeepan

Cricket Live Score...