kandee0702

Wednesday, December 28, 2011

துண்டுக் காகிதங்களிலிருந்து மின்சாரம் தயாரித்து சொனி நிறுவனம் சாதனை

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.

வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு போத்தலினுள் இட்டு அதனுள் தண்ணீரையும் சேர்த்து நன்றாக குலுக்கி சில நிமிடங்கள் வைக்கப்பட்டது.

குறித்த சில நிமிடங்களின் பின்னர் கலவையிலிருந்து உருவாகிய மின்சாரத்தில் இருந்து சிறிய மின்விசிறி சுழல வைக்கப்பட்டது.

மரத் துண்டை அரித்து உண்ணும் கறையான் பெறும் சக்தியும் இதே தொழிநுட்பத்தில் தான் இயற்கையால் செயற்படுத்தப்பட்டதாக சொனி நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு முகாமையாளரான Chisato Kitsukawa தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இந்த வகையில் மின்சாரம் தயாரிப்பது குறித்து கல்வி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருங்காலத்தில் நீர்மின்சக்தி, நிலக்கரி மூலம் மின்சக்தி, அணுமின்நிலையம் போன்ற மின் உருவாகும் மூலங்களுக்கு இப்படியான மாற்றுவழிகள் மூலம் மின்சாரம் கிடைத்தால் இயற்கையும் பாதுகாப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment

Cricket Live Score...