
நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது நமது கணினியில் வைரஸ் இருப்பதாகவும், அதை விண்டோஸ் இயங்கு தளம் கண்டறிந்ததாகவும் என விண்டோஸ் இயங்குதளம் அறிவிப்பது போலவே படம் ஒன்றில் உள்ளவாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கையுடன் ஒரு தகவல் காட்டப்படும்.
என்னவோ ஏதோவென்று பதறியடித்து அடுத்தடுத்த பக்கத்துக்குச் சென்றோமானால் , படம் மூன்றில் உள்ளவாறு நமது கணனியில் பரவியுள்ள வைரஸ் வகைகளை வகைப்படுத்தி இவற்றையெல்லாம் நீக்கிவிடு(Remove all) என அறிவிப்பு வரும் உடனே அவிசர அவிசரமாக சொடிக்கிவிட்டால் அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது நமது கணனியில் வைரஸ் குடியேறி செயல்படத் துவங்கிவிடும்.
இதில் இன்னும் ஆபத்தான விசயம் என்னவென்றால் நாம் என்னதான் பாதுகாப்பான அண்டி வைரஸ் மென்பொருளை நமது கணனியில் நிறுவியிருந்தாலும் அதையும் ஊடறுத்து தாக்கக் கூடியது இந்த போலியான வைரஸ் எனவே நாம் இணைய உலாவியில் இருக்கும் போது இதுபோன்ற விண்டோஸ் வைரஸ் எச்சரிக்கைகள் வந்தால் மிக மிக அவதானமாக செயற்படவேண்டும்
No comments:
Post a Comment