kandee0702

Wednesday, November 3, 2010

கூகுள் தரும் புதிய வசதி - Google Scribe

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com.

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்.
அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.

இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவுகளுக்கும் சொற்கள் கிடைக்கின்றன.

அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.

No comments:

Post a Comment

Cricket Live Score...