kandee0702

Friday, August 20, 2010

ரெட் ஒன் கேமரா

சினிமா தோன்றியது முதல் இன்று வரை திரைப்படங்களின் கதை, திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்ப பணிகள் முதலியவற்றில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.

ஃபிலிமை (Film) பயன்படுத்தி மட்டுமே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சினிமா உலகில், தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் கேமராக்களின் மூலம் ஒரு முழு திரைப்படத்தை படமாக்க முடியும் என்று களத்தில் இறங்கிவிட்டனர், படைப்பாளிகள்.

'ரெட் ஒன் கேமரா' மிக மிக துல்லியமாக லொகேஷன்களின் இயற்கை நிறத்தையும், படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. ஷூட்டிங்கின் போது காட்சிகள் அனைத்தும் பிலிம் ரோல்களுக்குப் பதில், ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு விடும். இதன் மூலம் தேவைப்படும்போது காட்சிகளைப் போட்டுப் பார்த்து கரெக்ட் செய்து கொள்ள முடியும். ஸ்டீவன் சோடன்பெர்க், பீட்டர் ஜாக்சன் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இந்த கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இந்திய திரைப்படத்திலும் இப்போது இதனை பயன்படுத்துகின்றனர்.

இந்த கேமரா மூலம் காட்சிகளை 4096 X 2096 என்ற ரெசொலூஷனில் (Resolution) பதிவு செய்ய முடியும். உலகம் முழுவதும் மொத்தமாக 5000-க்கும் குறைவான ரெட் ஒன் கேமராக்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இந்த கேமராவை வாங்குவது சாத்தியமானதல்ல. முதலில் கேமராவுக்கு ரிசர்வ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டுமாம். கேமராவின் விலை ரூ. 8 லட்சமாம். படம் எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் திருட்டு விசிடிக்காரர்கள் புரிஞ்சுகிட்டா சரி!

No comments:

Post a Comment

Cricket Live Score...