kandee0702

Saturday, May 8, 2010

Nikon நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சாதனங்கள் (இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்!)

தொழில்நுட்ப உலகம், மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை, இச்சாதனங்களுக்கு அடிமையாக தவறுவதில்லை.
பார்த்தவுடன் பற்றிக்கொள்வது போல, வாங்கிவிடுவதற்கு ஆசை வருத்தூண்டும், புதிய இரண்டு சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.
உலகின் முதலாவது புரொஜெக்டருடன் கூடிய டிஜிட்டல் கமெராவினை (first compact digital camera built-in projector) நிக்கொன் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'Nikon COOLPIX S1000pj ' எனப்பெயரிடப்பட்ட இக்கமெராவினை கொண்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படத்தினை, பெரிதாக்கி எந்த திரையிலும் உடனுக்குடன், பார்வையிடலாம்.
இதுவரை கமெரா திரையில் மாத்திரமே இந்த வசதி இருந்தது. கடந்த மாதம் முதல் சந்தைக்கு வந்த இக்கமெரா, இப்புதிய வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்!

No comments:

Post a Comment

Cricket Live Score...