Thursday, May 6, 2010
இ மெயிலில் கால் செய்யவும்
இன்டெர்நெட்டில் இருந்து போன் செய்யலாம்! ஸ்கைப் சாப்ட்வேர் அதை எளிமையாக்கி பிரபலமாகவும் ஆக்கியிருக்கிறது. இமெயிலில் இருந்து போன் செய்ய முடியுமா? முடியும்! இந்த மாயத்தை சாத்தியமாக்கும் சேவையின் பெயர் “யூம்பா’ இஸ்ரேலைச் சேர்ந்த இலாத் ஹெமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்த சேவையை உருவாக்கி இருக்கிறார். ஓராண்டு கால உழைப்பிற்கு பின் சமீபத்தில் இந்த சேவை இணையவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.யூம்பா’ சேவையை பயன்படுத்து பவர்கள் தங்கள் இமெயிலில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பேச முடியும். இதற்கு தேவைப்படுவதெல்லாம் இமெயில் முகவரியும் இன்டெர் நெட்டில் இணைக்கப்பட்ட தொலை பேசியிலும்தான். மறு முனையில் இருப்பவர் அருகாமையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்!அதோடு அவருக்கு என ஒரு இமெயில் முகவரி இருந்தால் போதும்! அவர் யூம்பா உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ பூம்பா சாப்ட்வேரை டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை இதுதான் பூம்பாவின் தனிச்சிறப்பு. யூம்பா சேவை பிறந்ததற்கான காரணமும் இதுதான்!“ஸ்கைப்’ போன்ற சேவைகளின் மூலம் இன்டெர்நெட் வழியே போன் பேசலாம். ஆனால் அதற்கு மறு முனையில் இருப்பவர் ஸ்கைப் உறுப்பினராக இருக்க வேண்டும்! அதேபோல், கூகுல் (அ) யாஹூ சேவையை பயன்படுத்துவதாயின் தொடர்புகொள்ள விரும்புபவரும், கூகுல் (அ) யாஹூ உறுப்பினராக இருந்தாக வேண்டும்.ஆக, உங்கள் நண்பர்களுடன் எல்லாம் பேச வேண்டும் என்றால் ஒன்று நண்பர்களை நீங்கள் பயன்படுத்தும் சேவைக்கு மாறச் சொல்ல வேண்டும் இது அத்தனை சாத்தியமல்ல. எனவே உங்கள் நண்பர் வைத்திருக்கும் சேவையில் நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment