மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 1-0- சிஸ்டம் குறித்த சோதனைத் தொகுப்பினை, சென்ற ஜனவரி 21ல் வெளியிட்டது. இதனைத்தான் பில்ட் 9926 என அழைக்கின்றனர். எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது சிஸ்டம் புரோகிராம் வெளிவரும் முன், அதற்கான சோதனைத் தொகுப்புகளை, இப்படிப் பெயரிட்டு அழைப்பதுதான் வழக்கம்.
கேள்வி: யாரெல்லாம், எந்த சிஸ்டம் பயன்படுத்துவோரெல்லாம், இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்த முடியும்?
பதில்: நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தி வருபவராக இருந்தால், அல்லது "இன்சைடர் புரோகிராமில்” ஓர் உறுப்பினராகப் பதிவு செய்திருந்தால், இதனையும் மைக்ரோசாப்ட் இணைய தளம் சென்று, தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதும் அந்த திட்டத்தில் பதிவு செய்து, தரவிறக்கம் செய்து இயக்கலாம்.
கேள்வி: சென்ற தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் தொகுப்பிற்கும், இந்த நுகர்வோருக்கான தொகுப்பிற்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளனவா?
பதில்: வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும், இருக்கின்றன. ஏனென்றால், இடைப்பட்ட கால அளவு மிக நீண்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனை முழுத் திரைக்கு மாற்றிக் கொண்டு இயக்கலாம். விண்டோஸ் 8 ஸ்டைல் ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அதே நேரத்தில், இதனை நீங்கள் விரும்பும் அளவிற்கு மாற்றியும் அமைக்கலாம். ஜம்ப் லிஸ்ட், ட்ராக் அண்ட் ட்ராப் வசதியும் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் போனில் அதிகம் பேசப்படும் கார்டனா, சர்ச் பாக்ஸ் வலப்பக்கம் கிடைக்கின்றன. இதற்கு சில செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
கேள்வி: சார்ம்ஸ் மெனுவிற்குப் பதிலாக என்ன தரப்பட்டுள்ளது
பதில்:வலது பக்கம், சார்ம்ஸ் மெனு இருந்த இடத்தில், ஆக் ஷன் சென்டர் (Action Center) தரப்பட்டுள்ளது. இங்கு நோட்டிபிகேஷன்ஸ் எனப்படும் அறிவிப்புகள் மற்றும் பொதுவான வேலைகளுக்காக, சில பட்டன்களும் தரப்பட்டுள்ளன. சார்ம்ஸ் மெனு மொத்தமாக எடுக்கப்பட்டுவிட்டது.
கேள்வி: பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுதி இருக்கிறீர்கள். என்ன மாதிரியான செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் தந்துள்ளது?
பதில்: மைக்ரோசாப்ட், தன் விளக்கக் குறிப்பில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தரப்படுவதாக எழுதி உள்ளது. ஆனால், அவை இந்த சோதனைத் தொகுப்புகளில் இல்லை என்றே தெரிகிறது. பின்னர், மேம்படுத்தப்படுவதற்கான பைல்கள், அல்லது இறுதித் தொகுப்பு வெளியாகும்போது தெரிய வரலாம்.
கேள்வி: இந்த முன்னோட்ட சோதனைத் தொகுப்புகளைத் தொடர்ந்து நம்மால் இயக்க முடியுமா? இல்லை என்றால், அதற்குக் காலவரையறை உள்ளதா?
பதில்: முன்பு தரப்பட்ட சோதனைத் தொகுப்பு மற்றும் அதன் மேம்படுத்தல் கோப்புகள் (builds 9841, 8660, மற்றும் 9879) வரும் ஏப்ரல் 15 அன்று காலாவதியாகிவிடும். புதியதாக வந்திருக்கும் build 9926 அக்டோபர் 1, 2015 அன்று காலாவதியாகும். இறுதித் தொகுப்பு வெளியானால், இந்த இறுதிநாள் அறிவிப்பு எல்லாம் உடனே காலாவதியாகிவிடும்.
கேள்வி: தற்போதைய சோதனைத் தொகுப்பிலிருந்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்து கொள்ள முடியுமா?
பதில்: மைக்ரோசாப்ட் இதற்கு "ஆம், முடியும்” என்றே பதில் அளித்துள்ளது.
கேள்வி: விண்டோஸ் 10 தொகுப்பில், கீ லாக்கர் எனப்படும், நாம் டைப் செய்திடும் கீகளின் வரிசையைத் தெரிந்து தகவல் அனுப்பும் புரோகிராம் உள்ளதாகவும், அதன் மூலம் மைக்ரோசாப்ட் நம் பைல்களை அறிந்து கொள்ளும் என்று கூறப்படுகிறதே, அது உண்மையா?
பதில்: இது எந்த அளவிற்கு உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால், இது போன்ற ஒன்று இருப்பதாகவே அனைவரும் கூறுகின்றனர். எந்த அளவில் மைக்ரோசாப்ட் நாம் உருவாக்கும் பைல்களை அறிந்து கொள்ளும் என்பது குறித்து சரியான தகவல் இல்லை. மேலும், இதுவரை சோதனை செய்தவர்கள் யாரும் கீ லாக்கர் இருப்பதாகக் கூறவில்லை. எனவே, இல்லை என்றுதான் எண்ண வேண்டும்.
கேள்வி: புதியதாக, ஏதேனும் விண்டோஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளனவா?
பதில்: ஆம், பயன்படுத்திய வகையில் சில ஷார்ட் கட் கீகள் அறியப்பட்டுள்ளன. உங்களிடன் இந்த சோதனைத் தொகுப்பு இருந்தால், இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
புதிய டெஸ்க்டாப் உருவாக்க Windows key + Ctrl + D
முந்தைய டெஸ்க்டாப் செல்ல Windows key + Ctrl + Left arrow
அடுத்த டெஸ்க்டாப் செல்ல Windows key + Ctrl + Right arrow
முந்தைய டெஸ்க்டாப் செல்ல Windows key + Ctrl + Left arrow
அடுத்த டெஸ்க்டாப் செல்ல Windows key + Ctrl + Right arrow
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் இயங்க என்ன ஹார்ட்வேர் தேவை? குறைந்த பட்சத் தேவை என்ன?
பதில்: இந்தக் கேள்விக்கான விரிவான பதில் வேண்டுவோர்,http://windows.micro...requirements-pc என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும். சுருக்கமாகச் சொல்வதென்றால், 1 ஜி.பி. வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரி,16 ஜி.பி. ஸ்டோரேஜ் இடம் ஆகியன குறைந்த அடிப்படைத் தேவையாகும். ஏற்கனவே, விண்டோஸ் 8 அல்லது 8.1 இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டருக்கு, அதிகப்படியான ஹார்ட்வேர் தேவை எதுவும் இல்லை.
கேள்வி: மைக்ரோசாப்ட் ஏன் தன் விண்டோஸ் போனில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அறிமுகப்படுத்துகிறது? இதனால் என்ன சாதிக்க முயற்சிக்கிறது?
பதில்: மைக்ரோசாப்ட் லூமியா விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள், அண்மையில் நல்ல வர்த்தக முடிவுகளைக் காட்டியுள்ளன. ஆனால், அமெரிக்காவில், பெரும்பாலான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ளனவாக இயங்குகின்றன. இந்த நிலையை மாற்ற, மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டரிலும், ஸ்மார்ட் மொபைல் போனிலும், ஒரே சிஸ்டத்தை வழங்கினால், அது வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
கேள்வி: ஸ்பார்டன் பிரவுசர் ஏதேனும் தனித்தன்மை கொண்டுள்ளதா? கூகுள் குரோம் பிரவுசரை அது பின்னுக்குத் தள்ளிவிடுமா?

கேள்வி: மைக்ரோசாப்ட் தன் தலைமை இடத்தில், நுகர்வோர் முன் காட்டிய விண்டோஸ் 10 விளக்கக் கூட்டத்தின் முழு நடவடிக்கைகளைக் காட்டும் வீடியோ கிளிப் வெளியிடப்பட்டுள்ளதா ?
பதில்: இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக என்ன நடந்தது என்பதனை முழுமையாக விளக்கும் வீடியோ படம் யு ட்யூப் தளத்தில் உள்ளது. ஒருவர், அதனைச் சுருக்கி, 12.39 நிமிடங்கள் ஓடும் வீடியோ படமாகத் தந்துள்ளார். இதனைக் காணச் செல்ல வேண்டிய முகவரி
https://www.youtube....h?v=dR9SDuG58ZQ.
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8, 8.1 பயன்படுத்துபவர்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து நாட்டு பயனாளர்களுக்கும் பொருந்துமா?
பதில்: குறிப்பிட்ட நாடுகளுக்கு என மைக்ரோசாப்ட் எந்த வரையறையையும் விதித்ததில்லை. ஆனால், நிறுவனங்களுக்கு, விண்டோஸ் 10 இலவசமில்லை என்பதனைத் தெளிவாகக் கூறியுள்ளது.தற்போது கிடைக்கும் சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் அதன் அறிமுகம் விழாவில் தெரிவித்த அனைத்து வசதிகளும் கிடைப்பதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து வெளி வர இருக்கும், அல்லது பின் நாளில் மொத்தமாக வெளிவர இருக்கும் சோதனைத் தொகுப்பில் அவை கிடைக்கலாம். அதற்கான மேம்படுத்தப்படுவதற்கான கோப்புகளை மைக்ரோசாப்ட் நிச்சயம் வழங்கும். காத்திருப்போம்.
No comments:
Post a Comment