Friday, April 30, 2010

சிறந்த பயர்பாக்ஸ் ஆட்ஆன்கள் - பகுதி 2

சிறந்த பயர்பாக்ஸ் ஆட்ஆன்களின் தொடர்ச்சி

1.ட்விட்டர்-பாக்ஸ் நீட்சி (Twitter Fox Addon)

ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நீட்சி இது. இதில் இருந்தே நேரடியாக ட்வீட் செய்யலாம். நண்பர்களின் ட்வீட்களை படிக்கலாம்

2.நோ ஸ்கிரிப்ட் நீட்சி(No Script Addon)
இன்டர்நெட்டில் நீங்கள் உலவும் பொது தேவை இல்லாத ஜாவா ஸ்கிரிப்ட் உங்களை அறியாமலேயே தனது பயன்பாட்டை துவக்கும்.இதனால் உங்கள் கணினியின் சில முக்கியமான கோப்புகள் பிறரின் கைகளை சென்றடையலாம்.அதனை தடுக்கவே இந்த நீட்சி.
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க

3.ட்ரீ ஸ்டைல் நீட்சி(Tree Style Tab)
ஒரே நேரத்தில் பல டேப்களை(Tabs) திறந்து வேலை செய்பவர்களுக்கு இது பயனுள்ள நீட்சி.டேப்களை இடது பக்கத்தில் மேலிருந்து கீழாக காண்பிக்கும் .

இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
4.டவுன் தெம் ஆல் நீட்சி(Down Them All Addon)
மிக வேகமாக தரவிறக்கம் செய்ய பயன்படும் நீட்சி.நீங்கள் ஏற்கனவே IDM,Flashget,DAP போன்றவைகளை(Download Managers) பயன்படுத்துபவராக இருந்தால் இது உங்களுக்கு தேவை இல்லை
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க

5.ஐஎம் ட்ரான்ஸ்லேடர் நீட்சி(IM Translator Addon)
இணையதளங்களை நேரடியாக மொழிபெயர்க்க உதவும் நீட்சி இது .
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க

6.கூகள் ப்ரவீவ் நீட்சி(Google Preview Addon)
உங்கள் கூகள் தேடலின் பொது இணைய தளத்தின் ரேங்க்,பக்க முன்காட்சி (Page preview) போன்றவைகளை இணைக்கும்.இது யாஹூ தேடலுக்கும் பொருந்தும்

No comments:

Post a Comment