Monday, June 10, 2013

PDF கோப்புக்களை HTML கோப்புக்களாக மாற்றுவதற்கு

எழுத்துக்கள் மற்றும் படங்களுக்கான சிறந்த கோப்பு வகையாகக் கருதப்படும் PDF கோப்பில் காணப்படும் உள்ளடக்கங்களை இணையத்தளத்தில் பயன்படுத்தும்பொருட்டு HTML கோப்புக்களாக மற்றுவதற்கு Abex PDF to HTML Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட PDF கோப்புக்களை ஒரே தடைவையில் HTML கோப்புக்களாக மாற்றியமைக்க முடியும்.
மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட HTML கோப்பு ஆனது அனைத்து வகையான இணைய உலாவிகளிலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

iPod Touch விற்பனையில் சாதனை படைத்தது அப்பிள்

அப்பிள் நிறுவனத்தின அரிய தயாரிப்புக்களுள் ஒன்றான iPod Touch ஆனது 2007ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது 100 மில்லியனிற்கும் மேற்பட்ட iPod Touch சாதனங்களை விற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில் நேற்றைய தினம் 16GB சேமிப்பு வசதி கொண்ட புதிய iPod Touch சாதனத்தை அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு iPod Touch சாதனத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 9, 2013

வைரஸ்களை தடுப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதலிடம்

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை தடுத்து, பாதுகாப்பான இணைய தேடலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதல் இடத்தை பிடித்துள்ளது.
என்.எஸ்.எஸ். லேப்ஸ்(NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
28 நாட்களாக குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவிகித மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர் 83 சதவிகித மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது.
சபாரி மற்றும் பயர்பொக்ஸ் பிரவுசர்கள் 10 சதவிகித மால்வேர்களையும், ஓபராவின் புதிய பதிப்பு 2 சதவிகித மால்வேர்களையும் தடுத்தது.
இந்த ஆய்வின் முடிவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 அதிகளவான மால்வேர்களை தடுத்து முதலிடம் பிடித்தது.
இதற்கு காரணம் இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது.
இதன் பின்னர் கணனியில் நிறுவுவதற்கு முன்பு, குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது.
மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது.
கூகுளைப் பொறுத்தவரை குரோம் உலாவியில் Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

கமெராக்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்பதற்கு

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக தற்போது அதிகளவில் டிஜிட்டல் கமெராக்களே பயன்பாட்டில் காணப்படுகின்றன.
இக்கமெராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை சேமிப்பதற்கு அவற்றில் நிரந்தரமான அல்லது பிரத்தியேகமான மெமரி கார்ட்கள் காணப்படும்.
இச்சேமிப்பு சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன புகைப்படங்களை இலகுவாக மீட்பதற்கு DataToUS Card Recovery எனும் மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
இதன் மூலம் குறித்த கமெராவிலிருந்து மெமரி கார்ட்டினை நீக்காது நேரடியாகவே அழிந்த புகைப்படங்களை மீட்க முடிவதுடன், புகைப்படம் தவிர வீடியோ கோப்புக்கள் மற்றும் ஆடியோ கோப்புக்களையும் கமெராவிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தரவிறக்கச் சுட்டி