Friday, April 20, 2012

உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க

பிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:
1. புகைப்படங்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி.
4. புகைப்படங்களின் அளவை குறைக்க Resize வசதி.
5. 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான எபெக்ட்ஸ்களை கொடுத்து கொள்ளலாம்.
6. உங்கள் புகைப்படங்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
7. புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.
வழிமுறை:
1. முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
3. Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
4. அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும், அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும். அதில் உங்கள் புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.
5. அழகுபடுத்திய புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம்.

ஆசியாவில் அறிமுகமாகு​ம் நொக்கியாவி​ன் Lumia 610 கைப்பேசிகள்

தரமான கைபேசிகளை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் நிறுவனமான நொக்கியா தனது புதிய பதிப்பான Lumia 610 என்ற கைப்பேசியை ஆசியாவில் அறிமுகப்படுத்துகின்றது.
ஏப்ரல் இறுதி வாரத்தில் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்படும் இக்கைபேசிகள் அடுத்தடுத்த வாரங்களில் சீனா, கொங்கொங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
இவை 3.7 அங்குல  WVGA capacitive LCD தொடுதிரையைக் கொண்டுள்ளதுடன் 800 x 480 pixels அளவிலான resolutionஐக் கொண்டுள்ளன.
மேலும் 800MHz processor, 256MB  RAM, 16GB உள்ளக நினைவகம் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது. தவிர 5 மெகா பிக்சல்கள் உடைய கமெராவையும் கொண்டுள்ள இக்கைப்பேசிகளை 189 யூரோவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.













டெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி

இன்றைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும்.
ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம், இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கான காரணம் என்று பார்த்தால் அந்த Safely Remove Hardware Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும், எனவே நாம் அதை கவனிப்பதில்லை.
இதற்கு மாற்றாக உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்படி செய்யலாம்.
விண்டோஸ் 7ல் இதை செய்வதற்கு,
Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் "regedit" என்பதை கொடுத்து ok கொடுக்கவும்.
பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் Desktop Background Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது HKEY_CLASSES_ROOTDesktopBackgroundShell )
உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில், தற்போது Shellஐ ரைட் கிளிக் செய்யுங்கள், அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீயை உருவாக்கி கொள்ளுங்கள்.
தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள்.
icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள், அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள்.
தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள். அதற்கு தலைப்பு command என கொடுங்கள்.
அதன் உள்ளே மதிப்பு ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்க வேண்டும் C:WindowsSystem32control.exe hotplug.dll
இதன் பின் உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்.

பி.டி.எப் கோப்புகளை கையாள்வதற்கு

பி.டி.எப் கோப்புகளை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.ஆனால் ஒரு பி.டி.எப் கோப்புடன் மற்றொன்றை இணைக்கவோ அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை.
கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பி.டி.எப் கோப்புகளை கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல பி.டி.எப் கோப்புகளை ஒரே கோப்பாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து கோப்புகளின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக மாற்றப்படும்.
இந்த கோப்பை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய கோப்புகள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப்பட்டும் கோப்புகளை உங்கள் கணணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த வசதி, பி.டி.எப் கோப்பு ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப் கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்திடுங்கள். இதற்கு முன் எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள்.
பதிவேற்றம் செய்து பிரிப்பதற்கான(split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப்படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு ஒரு பி.டி.எப் கோப்பு கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது கடவுச்சொல் கேட்கிறது.
என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப் கோப்பின் கடவுச்சொற்கை நீங்க இந்த தளம் முயற்சிக்கும்.
அப்படியும் முடியாத பட்சத்தில் விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப் கோப்பை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால் கடவுச்சொல் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது.
இதே போல கடவுச்சொல் இல்லாத உங்கள் கோப்புக்கு கடவுச்சொல் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.
இணையதள முகவரி

யு.எஸ்.பி ட்ரைவ் Corrupt ஆனால்

யு.எஸ்.பி பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் plug and play வகையைச் சேர்ந்த சாதனங்கள்.
இவை நாம் பயன்படுத்தும் பலவகையான வீடியோ கோப்பு உட்பட கோப்புகளை சேவ் செய்து மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.
ஆனால் கணணியில் உள்ள இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால் பிரச்னைகள் ஏற்படும்.
குறிப்பாக கணணி அதனைத் தேடி செயல்பாட்டில் வைத்திருக்கையில், கணணியில் இருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.
சில வேளைகளில் அதில் உள்ள அனைத்து தகவல்களையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட கோப்பு கரப்ட் ஆகும் அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.
பெரும்பாலும் இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை அவற்றை மீண்டும் போர்மட் செய்வதன் மூலம் தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த வழியை மேற்கொண்டால் உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளும் அழிக்கப்படும்.
இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர் உங்கள் கணணியில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும்.
இதற்கு கணணியில் உள்ள அனைத்து யு.எஸ்.பி போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.
யு.எஸ்.பி ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர் கணணியில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும் அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் Hardware and Sound என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கணணியில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.
இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, Scan For Hardware Changes என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.
இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை போர்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.
இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். போர்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.
“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால் அதனை எடுத்து விடவும். இந்த வகை போர்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக போர்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக போர்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை போர்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டிலிருந்து எடுத்து விடவும்.
விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள தகவல் அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது.
இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான் டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.
இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கணணிக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். தகவல் பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை கையாள வேண்டிய சந்தர்ப்பங்களில் சுட்டியைப் பயன்படுத்தும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது.
அதாவது கூகுள் குரோமில் Alt Key பயன்படுத்தும் அதேவேளை Firefoxல் Shift+Alt Key பயன்படுத்த வேண்டும்.
குரோமிற்கான Short cut Keyக்கள்
Alt+m: New Message
Alt+0: Help Center
Alt+1: Home Page
Alt+2: Profile Page
Alt+3: Manage Friend List
Alt+4: Message List
Alt+5: Notification Page
Alt+6: Account Setting
Alt+7: Privacy Setting
Alt+8: Facebook Fan Page
Alt+9: Facebook Terms
Alt+?: Search Box
Firefoxல் பயன்படுத்தும் போது உதாரணமாக,
Shift+Alt+m: New Message என உபயோகிக்க வேண்டும்.