Wednesday, April 13, 2011

Wondershare iMate: ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

முன்னொரு காலத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் என்றால் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இந்த ஐபோன் மற்றும் ஐபேட்களை கணணியுடன் இணைப்பதற்கு பயன்படும் மென்பொருள் Wondershare iMate ஆகும். இந்த மென்பொருளின் சந்தைவிலை $59.95 ஆகும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் 20ஏப்ரல் 2011 வரை மட்டுமே இலவசமாக கிடைக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் தகவல்களை எளிமையாக ஐபேட் மற்றும் ஐபோன்களில் ஏற்றம் செய்ய முடியும். சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே இலவச கீ பெறுவதற்கான பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு உங்களுடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு Like என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக Get Keycode பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும். மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். மின்னஞ்சல் முகவரியில் உள்ள லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐபேட் மற்றும் ஐபோன்கள் பட்டியலிடப்படும். பின் அதை தேர்வு செய்து வேண்டிய பைல்களை கொப்பி செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் DVD க்களில் இருந்து நேரிடையாக பைல்களை மாற்றிக்கொள்ள முடியும். வேண்டுமெனில் பைல்களை பேக்அப் செய்து கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி

கோப்பறைகளின் நிறத்தை மாற்றம் செய்ய

அதிகமாக உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரே கோப்பறையில் வைத்திருப்போம். சாதாரணமாக கோப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டுமெனில் தனியொரு பெயரை வைத்து மட்டுமே பார்க்க முடியும். அதிகமான கோப்பறைகள் உள்ள இடத்தில் எளிதாக நாம் தேடும் கோப்பறையை காண முடியாது. இதனை வேறுபடுத்தி பார்க்க மேலும் ஒருவழி உள்ளது. கோப்பறையில் நிறத்தை மாற்றம் செய்வது இல்லையெனில், அதன் உருவ படத்தை மாற்றம் செய்தல். இவற்றை விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தில் நீங்கள் உருவாக்கும் கோப்பறைகளுக்கு தனி கலர் மற்றும் அழகிய ஐகானை உருவாக்க முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பறையை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்யது கொண்டு Select icon என்னும் பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பபடி ஐகானை மாற்றம் செய்து கொள்ள முடியும். இல்லையெனில் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Folderico என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் உங்கள் விருப்பபடி கோப்பறையை மாற்றம் செய்து கொள்ள முடியும். இப்படியும் கோப்பறையில் நிறத்தையும், உருவ படத்தையும் மாற்றிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். தரவிறக்க சுட்டி

ரத்த செல்களை இதய செல்களாக மாற்றும் முறையை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை

ரத்த செல்களை துடிக்கும் இதய செல்களாக மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முறை வைரஸ் இல்லாத புதிய பிரபஞ்ச முறையாக அறியப்படுகிறது. புதிய இதய செல் ஆய்வினை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய முறையில் இதயச் செல்களை உருவாக்க அதிக செலவினம் ஆவது இல்லை. உலக அளவில் இதனை பயன்படுத்த முடியும். புதிய முறையில் உருவாக்கப்படும் இதய செல்கள் 100 சதவீத செயல் திறன் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் செல் என்ஜினியரிங் மற்றும் கிமல் புற்று நோய் விஞ்ஞானிகளே இந்த புதிய செல் முறையை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு குறித்து ஜான் ஹாப்தின்ஸ் இன்ஸ்டியூட் உதவிப் பேராசிரியர் எலியஸ் ஜாமிபிடிஸ் விளக்கி உள்ளார். ஆதாரச் செல்கள் இதயச் செல்களாக மாற்ற வைரஸ் இல்லாத முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

இணையதள வசதியுடன் கூடிய கார்கள் அறிமுகம்


டொயோட்டா கார் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது வாகன உற்பத்திகளில் இணையத்தள வசதியை இணைக்கவுள்ளது.

எதிர் வரும் காலங்களில் சந்தைக்கு விடப்படும் வாகனங்களில் இணையத்தள வசதியும், இணையத்தள விளையாட்டுக்களுக்கான வசதிகளும் உள்ளடக்கப்படுவது தொடர்பில் மைக்ரோசொப்ட் மற்றும் டொயோட்டா நிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

உலகின் மிகப் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமும், மிகப் பெரும் கணணி மென்பொருள் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளமையானது எதிர்காலத்தில் வாகனங்களில் பல முற்போக்கான அம்சங்களும், வசதிகளும் உள்ளடக்கப்படுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று சந்தை ஆய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இந்த செயற்திட்டத்துக்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து பன்னிரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளன.


இச்செயற்திட்டத்தின் கீழ் இணையத்தள வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனான புதிய வண்டிகள் எதிர்வரும் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

2015ம் ஆண்டளவில் அனைத்து வாகனங்களிலும் இணையத்தள வசதிக்கான கருவிகளை அறிமுகப்படுத்தவும் பிரஸ்தாப செயற்திட்டம் மூலமாக இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.