![]() வாய்ஸ் அப்டேட்டிற்காக, ஏர்செல் நிறுவனத்துடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது. சமூகவலை இணைதளங்களில் ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக், இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்செல்லுடன் இணைந்து வாய்ஸ் அப்டேட்டை வழங்குகிறது. இதுகுறித்து ஏர்செல் நிறுவன உயர் அதிகாரி குர்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்போனில் வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் தங்களது குரலை பதிவு செய்து பேஸ்புக்கில் அப்டேட் செய்தால், இந்த பதிவு எஸ்எம்எஸ் மூலம் அவருடைய பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்களும் இதே முறையில் அவருக்கு பதிலளிக்கலாம். இந்த சேவைக்கு இண்டர்நெட் பயன்பாடு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேஸ்புக்கில் சங்கமித்துள்ள நிலையில், இந்த கைகோர்ப்பு தங்கள் நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். |
Friday, February 4, 2011
ஏர்செல்லுடன் கைகோர்த்த பேஸ்புக்
Solar cap: மின்விசிறிகள் பொருத்தப்பட்ட தொப்பிகள்

இதற்கு பெயர் Solar cap. சோலார் மூலமே அச்செயற்பாடு சாத்தியப்படுகிறது. அதாவது நாம் அணியும் தொப்பியின் மேல் சிறிய அளவிலான சோலார் பொருத்தப்பட்டிருக்கும்.
அந்த சோலாரில் சுரிய ஒளி படும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தொப்பியின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய அளவிலான மின்விசிறியை இயக்க உதவுகிறது.
இதற்கு அமைவாக தொப்பியின் முன்பகுதியில் காற்று உள்வரக்கூடியவாறு இடைவெளி விடப்பட்டிருக்கும்
பெண்களால் ஆண்கள் எளிதில் ஈர்க்கப்படுவது ஏன்?

இதற்கு காரணம் பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான். இதனால் தான் ஆண்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும். இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள் மற்றும் புசிக்கிறார்கள்.
ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.
முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்
டவர் இல்லாமல் செயல்படும் செல்போன்கள் கண்டுபிடிப்பு

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும்.
ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.
2011- ன் புத்தம் புதிய வரவுகள்!

இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் அவற்றிற்கான விற்பனை உரிமையினைப் பெற போட்டி போடுவார்கள்.
மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம்.
1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது.
இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம்.
2. ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம்.
இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும்.
3. மெமரி: இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம்.
சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது.
4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது.
17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம்.
இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான்.
Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும் சாதனம் போலத் தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன