Thursday, May 27, 2010

குழந்தைகளுக்கான Open source Qimo Operating System

குழந்தைகளுக்கான Operating System தான் Qimo OS.
இதுஒரு Ubuntu Linux அடிப்படையில் உருவாக்கப்பட்ட இலவச os மூன்று வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்புத்தும் வகையில் எளிய முறையில் உருவாக்கப்பட்டது . அவர்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்ய icon கள் உள்ளன இதனால் குழந்தைகள் எளிதில் பயன்படுத்தமுடியும்
குழந்தைகளுக்கான games களை இன்ஸ்டால் செய்து விளையாட உகந்தது .
இதனை Live Cd இல் இருந்து instaal செய்வதால் தனி os போல செயல்படும் உங்கள் குழந்தைகளின் வயதிர்க்கேற்ப game களை தேர்வு செய்து இதில் நிறுவலாம் .
அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இதுபோல Linux os இல் பழக்கினால் அவர்கள் open source பற்றி அறிந்துகொள்ள முடியும் .

Qimo Os நிறுவ தேவையான Requirements :
Qims OS Cd
256MB RAM
6GB hard drive space போதுமானது.
இங்கு சென்று Qims Os Download செய்து CD ல் write செய்துகொள்ளுங்கள் .

Qims OS Download

Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?

லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால்

அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன. காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .
இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள்.
Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்
படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள்.

Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க

இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.
சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?

Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:

இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும். மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .
(Destroy Data Automatically In Case Of Theft)

இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.

மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு, உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும், ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும். சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software எனது Laptop ல் நிறுவிபார்த்துதான் இதனை உங்களுக்கு பரிந்துரைசெய்கிறேன்.

Hertz

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது.

ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை.

எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.மெஹா ஹெர்ட்ஸ் (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம்.

கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது. முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள்.

தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது.

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்?!

எங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? உலக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன்! சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம்.



பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம்
அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் பாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில்.


நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.


1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 'மேரி கிறிஸ்துமஸ்' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ் தான் போல!